LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- சிந்துப்பாவியல்

கண்ணி

எண்ணும் இரண்டடி எதுகை ஒன்றின்
கண்ணி என்று கருதப் படுமே
கருத்து : ஒத்த இரண்டடிகள் ஒரெதுகையில் வருமானால் அவை ஒரு கண்ணி என்று சொல்லப்படும். 
விளக்கம் : கண்ணி என்பது கண்ணை உடையது என்று பொருள்படும். கண்-கணு, மூங்கில், கரும்பு முதலியவற்றில் கணுக்கள் உட்பகுதியாக அமைந்திருப்பது போல் பாடல்களின் உட்பகுதியாக இரண்டிரண்டு அடிகள் ஓரெதுகை பெற்று அமைந்திருப்பின் அவை கண்ணிகள் எனப்படும். 
காட்டு: காவடிச் சிந்து
தண்மதி ஒண்முகப் பெண்மணியே - உன்னைத்
தான்கொண்ட நாயகர் ஆரேடி
அண்மையில் பொன்னணி அம்பலத் தாடல்செய்
ஐயர் அமுதர் அழகரடி
(திருவ. 2971)
இப்பாடலில் தண்மதி என்பது முதல் ஆரேடி என்பது வரையில் ஒரடி; அண்மையில் என்பது முதல் அழகரடி என்பது வரையில் ஓரடி. இவ்விரண்டு அடிகளும் தண்மதி - அண்மையில் என்ற எதுகையினால் ஒன்றாக தொடுக்கப்பட்டுள்ளன. எனவே இவையிரண்டும் கண்ணியாகும். 
இதிலிருந்து ஓரெதுகையில் வரும் இரண்டடிகள் ஒரு கண்ணியென்பது பெறப்படும். 
34.
நாலடி பெற்று நடக்கும் கண்ணியும்
ஓரடிக் கண்ணியும் உளவென மொழிப
கருத்து : நான்கு அடிகளைப் பெற்று நடக்கும் கண்ணிகளும் உள்ளன என்றும், ஓரடிக் கண்ணிகளும் உள்ளன என்றும் நூல்வல்லார் சொல்லுவர். 
விளக்கம் : பெருவழக்காக வரும் இரண்டடிக் கண்ணிகள் முன்னர் கூறப்பட்டன. (நூ. 33). சிறுபான்மையாக வரும் நான்கடிக் கண்ணிகளும், ஓரடிக் கண்ணிகளும் இங்கு எடுத்துக் கூறப்படுகின்றன. 
நான்கடிகள் ஓரெதுகை பெற்றுவரும் கண்ணிகளும், சிறுபான்மை வருவதுண்டு. 
காட்டு :
நாலடிக் கண்ணி
நெஞ்சுபொ றுக்குதிலையே - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்
அஞ்சியஞ் சிச்சாவார் - இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே
வஞ்சனைப் பேய்களென் பார் - இந்த
மரத்திலென் பார்அந்த குளத்திலென் பார்
துஞ்சுது முகட்டிலென் பார் - மிகத்
துயர்படு வாரெண்ணிப் பயப்படுவார்
இப்பாடலில் நெஞ்சு என்பது முதல் விட்டால் என்பது வரை முதலடி; அஞ்சி என்பது முதல் அவனியிலே என்பது வரை இரண்டாமடி; வஞ்சனை என்பது முதல் என்பார் என்பது வரை மூன்றாமடி; துஞ்சுது என்பது முதல் பயப்படுவார் என்பது வரை நான்காமடி. 
இந்த நான்கடிகளும் நெஞ்சு-அஞ்சி-வஞ்ச-துஞ்சு என்ற ஓரெதுகையினால் ஒன்றாகத் தொடுக்கப்பட்டுள்ளன. 
ஓரடிக் கண்ணிகளும் சிறுபான்மை வருவதுண்டு. 
காட்டு : ஓரடிக் கண்ணி
1. ஐயா ஒரு சேதி கேளும் - உங்கள்
அடிமைக்கா ரப்பறையன் நடத்தையெல்லாம்
2. வரவரக் கெட்டுப்போச்சு - சேரியில்
வழக்கமில் லாதபடி பழக்கமிட்டான்.
(கோ.கொ.பா.நந்த.சரி.கீ.வ.49)
இப்பாடலில் ஐயா என்பது முதல் எல்லாம் என்பது வரை ஓரடி. இது ஓரடிக் கண்ணியாக வந்துள்ளது. வரவர என்பது முதல் பழக்கமிட்டான் என்பது வரை ஓரடி. இதுவும் ஓரடிக் கண்ணியாக வந்துள்ளது. 
இவ்வாறு சிறுபான்மையாக நான்கடிக் கண்ணிகளும், ஓரடிக் கண்ணிகளும் வரும் என்பதனை அறியலாம். 
ஓரடிக் கண்ணியும் என்பதில் உள்ள உம்மையால், மிகவும் அருகி மூன்றடிக் கண்ணிகளும் வரும் என்பது கொள்ளப்படும். 
காட்டு : மூன்றடிக் கண்ணி 
எடுப்பு
மாடுமேய்ப் பவனிடம் எனக்கென்ன வேலை?
வஞ்சி என்றழைத்தான் ஏனென்றான் மாலை? (மாடு)
தொடுப்பு 
பாடொரு பாட்டென்றேன் பாடி இருந்தான்
பைந்தமிழ் கேட்டுநான் ஆடியிருந்தேன் (மாடு)
முடிப்பு
காளைசொற்படி மறு . நாளைக்குச் சென்றேன்
கனிபோன்ற தென்பாங்கு பாடாயோ என்றான்
வேளை யாகிவிடும் என்று நவின்றேன்
விரும்பிப் பசுக்கறந்து குடியென்று நின்றான்
ஆளன் கொடுத்தபா லாழாக்குப் பாலென்றேன்
அல்லடி காதற் கலப்பால்தான் என்றான் (மாடு)
(பாரதிதாசன் இசையமுது.பக்.2)
இப்பாடலில் முடிப்பில் காளையென்பது முதல் என்றான் என்பது வரை முதல்டி; வேளை என்பது முதல் நின்றான் என்பது வரை இரண்டாவது அடி; ஆளன் என்பது முதல் தானென்றான் என்பது வரை மூன்றாவது அடி. 
இம்மூன்று அடிகளும் காலை-வேளை-ஆளன் என்ற ஓரெதுகையினால் ஒன்றாகத் தொடுக்கப் பட்டுள்ளன. 
எனவே மிகவும் அரிதான மூன்றடிக் கண்ணியும் வருவது உண்டு என்று உணரலாம்.

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.