LOGO
  முதல் பக்கம்    அரசியல்    கட்டுரை/நிகழ்வுகள் Print Friendly and PDF
- ஆம் ஆத்மி (AAM aadmi)

கன்னியாகுமரி ஆம் ஆத்மி வேட்பாளர் சுப. உதயகுமார் தேர்தல் அறிக்கை

கன்னியாகுமரி தொகுதி வாக்காளர் தோழர்களே!

உங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக என்னை நீங்கள் தேர்வு செய்தால், நீண்ட நெடுங்காலமாக புறக்கணிக்கப்பட்டு வரும் நமது மாவட்டத்தில் சமச்சீரான வளர்ச்சிக்கு கீழ்க்காணும் நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.

[1] பொதுமக்கள் நலம்:
• சாதி, மத நல்லிணக்கத்தைப் போற்றுவேன்.
• ஆபத்தான கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடுவேன். மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே மரபுசாரா இயற்கை மின்பூங்காக்கள் அமைத்து மக்களின் மின்சாரப் பிரச்சினைக்குத் தீர்வு தேடுவேன்.
• தனியார் மற்றும் அரசு தாது மணற்கொள்ளையைத் தடுப்பேன்.
• கல் குவாரிகளை மூடுவதோடு, நில வணிக மாஃபியாக்களை எதிர்ப்பேன்.
• மலைகளை, மரங்களை அழித்து பெரியக் கட்டிடங்களை நிறுவி அமைக்கப்படும் தனியார் நிறுவனங்களைத் தடுத்து இயற்கை வளம் காப்பேன்.
• லஞ்ச ஊழலை ஒழிக்க என்னாலியன்ற அனைத்தும் செய்வேன்.
• பிற்படுத்தப்பட்டோர், தலித் மக்கள், சிறுபான்மையினர், பழங்குடியினர், குமரி மாவட்டத்து மலையாள மக்கள் போன்றோருக்கு சமூக நீதி கிடைத்திட உழைப்பேன். நாஞ்சில்நாடு வெள்ளாளர் சமூகத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க உதவுவேன்.
• அக்கம்பக்கம் குழுக்கள் அமைத்து மக்களுக்கு தன்னாட்சி கிடைக்கப் பாடுபடுவேன்.
• ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதி வாரியாக மக்களின் முக்கியப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பேன்.

[2] போக்குவரத்து:
• மாவட்டமெங்கும் சாலைகளைச் சீராக்கி, பாதுகாப்பான நடைபாதைகள் அமைத்து, பாதசாரிகளின், வாகன ஓட்டுனர்களின் பாதுகாப்பை உறுதி செய்வேன்.
• பொதுப் பேருந்துகளின் தரத்தை, பாதுகாப்பை மேம்படுத்துவேன்.
• மோசமான நிலையில் இருக்கும் சுசீந்திரம் பாலத்திற்கு பதிலாக மாற்றுப் பாலம் அமைப்பேன்.
• கன்னியாகுமரி-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புக்களை அகற்றி சாலை விரிவாக்கத்துக்கு உதவுவேன்.
• கன்னியாகுமரி பகுதியில் சிறு விமான தளம் அமைப்பேன்.
• குமரி ரயில்வேயை மதுரை டிவிஷன் கீழ் கொண்டுவந்து, இருவழி ரயில் பாதை அமைப்பேன்.
• கன்னியாகுமரியிலிருந்து திருவனந்தபுரம் வரை கடல் வழியாக நீர்வழிப் போக்குவரத்துக்கு ஆவன செய்வேன்.
• காலையிலும், மாலையிலும் பள்ளி மாணவருக்கென சிறப்புப் பேருந்துகள் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இயக்க ஆவன செய்வேன்.

[3] பொதுச் சுகாதாரம், உடல் நலம்:
• மாவட்டமெங்கும் இலவசக் கழிப்பறை வசதிகள் ஏற்படுத்துவேன்.
• ஒலி மாசை முற்றிலுமாகத் தடை செய்வேன்.
• நெகிழிப் பைகள், நெகிழிப் பொருட்களை ஒழிப்பேன்.
• குப்பைகள் சேகரித்தல், திடக்கழிவு மேலாண்மைக்கான ஏற்பாடுகள் செய்வேன்.
• தண்ணீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்து, ரசாயனங்களைப் பிரித்தெடுத்து, வினியோக அமைப்புகளை திருத்தியமைத்து, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வினியோகிப்பேன். ஏழைகளுக்கு பஞ்சாயத்து அலுவலகங்களில் குடிநீர் வழங்கிட ஆவன செய்வேன்.
• காற்றை மாசுபடுத்தும் ஆலைகள், தொழிற்சாலைகள் தொடங்குவதைத் தடை செய்வேன்.
• ஆரம்ப சுகாதார நிலையங்களை, அரசு மருத்துவமனைகளை தரமுயர்த்தி, உயர்தர மருத்துவ சிகிச்சைகள் ஏழை எளியோருக்கும் கிடைக்க ஆவன செய்வேன்.
• மாவட்டத்தின் மையப் பகுதியில் உயர்தர புற்றுநோய் மருத்துவமனை அமைப்பேன்.

[4] கல்வி, வேலை வாய்ப்பு:
• மார்ஷல் நேசமணி பெயரில் குழித்துறைப் பகுதியில் புதிய பல்கலைக்கழகம் அமைப்பேன்.
• திருமதி. லூர்தம்மாள் சைமன் பெயரில் மணக்குடியில் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைப்பேன்.
• திரு. எஸ். துரைசாமி பெயரில் கொட்டில்பாடு பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைப்பேன்.
• தோழர் ஜீவா பெயரில் பூதப்பாண்டி பகுதியில் விவசாயம், தென்னை, வாழை, ரப்பர், தோட்டக்கலை, வனவளம் போன்ற ஆராய்ச்சிப் பிரிவுகளைக் கொண்ட ஒரு விவசாயக் கல்லூரி தொடங்குவேன்.
• திரு. தாணுலிங்கனார் பெயரில் மருந்துவாழ் மலைப் பகுதியில் மருத்துவ மூலிகைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைப்பேன். அழிந்து வரும் மூலிகைகளைக் காத்து, பாரம்பரியமிக்க நமது சித்த வைத்தியத்திற்கு புத்துயிரூட்டி, இயற்கை வைத்தியத்தைப் பாதுகாப்பேன்.
• தியாகி சிதம்பரநாதன் பெயரில் நீண்டகரைப் பகுதியில் சட்டக் கல்லூரி அமைக்க ஆவன செய்வேன்.
• கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் & திருமதி மதுரம் பெயரில் இசைக் கல்லூரி ஒன்றை நிறுவவும் முற்சிப்பேன்.
• சதாவதானி செய்குத்தம்பி பாவலர் பெயரில் மாவட்டத்தின் அனைத்து மக்களுக்கும் பயன்படும் உயர்தர நவீன ஆய்வு நூலகம் ஒன்றை அழகியமண்டபம் பகுதியில் அமைப்பேன்.
• சிறுபான்மையினர் பயன்பெறும் மத்திய சிறுபான்மை அமைச்சகத்தின் IAS, IPS பயிற்சி மையம் அமைப்பேன்.
• ஐ.டி. தொழிற்நுட்பப் பூங்கா தொடங்க நடவடிக்கைகள் மேற்கொள்வேன்.
• காற்றாலை மின்உற்பத்தி அதிகமாக நடக்கும் ஆரல்வாய்மொழி பகுதியில், மாற்று வழி மின்சாரம் தொடர்பான தொழிற்பேட்டை மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைப்பேன்.

[5] மீனவர் நலம்:
• கடல் மீதும் கடற்கரை மீதுமுள்ள மீனவ மக்களின் பாரம்பரிய உரிமைகளைக் காப்பேன்.
• ஆபத்துக்குள்ளாகும் மீனவருக்கு உடனடியாக உதவ கன்னியாகுமரி மற்றும் குளச்சலில் ஹெலிகாப்டர் தளமும், விசைப்படகுத் தளமும் அமைப்பேன்.
• கடலுணவுத் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்வேன்.
• ஆங்காங்கே மீன் பதப்படுத்தும், பாதுகாக்கும் நிலையங்கள் அமைப்பேன்.
• குளச்சல் மீன்பிடித் துறைமுகம் வேகமாக அமைக்க உதவுவேன்.
• கல்வி, வேலை வாய்ப்பில் மீனவர்களுக்கு இட ஒதுக்கீடு பெற்றுத் தருவேன்.
• மீன் வளத்துறை வேலைகளில் மீனவர்களுக்கே முன்னுரிமை என்று வலியுறுத்துவேன்.
• உறுதியற்ற வீடுகளை அகற்றிவிட்டு உறுதியான வீடுகளும், குடியிருப்புகளும் கட்டித் தருவேன்.
• குமரி மீனவர்களிடம் கேரள அரசு ஆண்டுதோறும் வசூலிக்கும் ரூ. 60,000 சேமநிதியை நீக்கக் கோருவேன்.

[6] விவசாயிகள் நலம்:
• விவசாயத்தைக் காத்து உணவு உற்பத்தியைப் பெருக்குவேன்.
• விவசாயிகளின் விளை பொருட்களை நகரின் மையப்பகுதிகளில் சந்தைப்படுத்த ஏற்பாடு செய்வேன்.
• விளை நிலங்களை வீட்டு நிலங்களாக, தொழிற்பேட்டைகளாக மாற்றுவதைத் தடுப்பேன்.
• தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் பட்டா விளைநிலங்களையும், குடியிருப்புப் பகுதிகளையும் தனியார் காடுகள் என்று வகைப்படுத்துவதை ரத்து செய்வேன்.
• 2006 வன உரிமைச் சட்டம் காணி மக்கள் போன்ற ஆதிவாசிகளுக்கும், விவசாயிகளுக்கும் வழங்கும் நில உரிமைகளை மீட்டுத் தருவேன்.
• கஸ்தூரி ரங்கன் குழு அறிக்கையால் பாதிப்புக்குள்ளாகும் விவசாயப் பகுதிகளையும் பட்டா நிலங்களையும் பாதுகாப்பேன். விவசாய நிலங்கள் விலங்குகள் சரணாலயமாக அறிவிக்கப்படுவதைத் தடுப்பேன்.
• ஆகாயத் தாமரைகளை அகற்றி, குளங்களை தூர்வாரி ஆழப்படுத்துவேன்.
• மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளையும் ஆழப்படுத்துவேன்.
• முடங்கிக் கிடக்கும் நெய்யாறு இடதுகரை கால்வாய்க்குப் பதிலாக சிற்றாறு-II நீர்த்தேக்கத்திலிருந்து புதிய கால்வாய் அமைப்பேன்.
• திருப்பதிசாரம் விவசாய விரிவாக்க மையத்தை பாரம்பரிய விதைகளைக் காக்கும், இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி நிலையமாக மாற்றுவேன். மரபணு மாற்ற விதைகளைக் கடுமையாக எதிர்ப்பேன்.
• தேன் உற்பத்தி செய்யும் தொழிலை உயர்த்தும் விதமாக, மார்த்தாண்டத்தில் தேன் ஆராய்ச்சி நிலையம் அமைப்பேன்.
• ரப்பர் ஆராய்ச்சி நிலையம் ஒன்றை களியல் பகுதியில் அமைத்து, ரப்பருக்கான குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்து, ரப்பர் விவசாயிகளைக் காப்பேன்.
• தோவாளையில் மலர் ஏற்றுமதி மையம் அமைப்பேன்.

[7] வர்த்தகர், தொழிலாளர், பெண்கள் நலம்:
• சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டைத் தடுப்பேன்.
• கட்டிடத் தொழிலாளர்கள் நலம் பேணும் வாரியம் மற்றும் அவர்களுக்கானப் பள்ளிகள் அமைக்க ஆவன செய்வேன்.
• வெளிநாடுகளில் வேலை செய்யும் குமரி மாவட்டத்தவர் வசதிக்காக பாஸ்போட் மையம், வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆட்கள் அனுப்பும் அரசு நிறுவனத்தின் பிரிவு, அவர்கள் பாதுகாப்புக்கான ஏற்பாடுகள் நாகர்கோவிலில் அமைப்பேன்.
• அமைப்புசாரா தொழிலாளர் நலம் பேண வழிவகை செய்வேன்.
• பெண்களுக்கும் சம ஊதியம் கிடைக்க ஆவன செய்வேன்.
• சுய உதவி குழுக்களிலுள்ள பெண்களுக்கு சிறு தொழில் பயிற்சி மூலம் வேலைவாய்ப்பு மற்றும் அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு கொள்முதல் நிலையங்கள், விற்பனை மையங்கள் அமைக்க உதவுவேன்.
• கிராமப்புறப் பெண்களுக்கு கணினிப் பயிற்சி வழங்க ஆவன செய்வேன்.
• மாற்றுத்திறனாளிகளின் சமூக-பொருளாதார, அரசியல் விடுதலைக்கானப் போராட்டத்தில் அவர்களுக்கு உறுதுணையாய் இருந்து உதவுவேன்.

[8] சுற்றுலா மேம்பாடு:
• சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தி, மக்களுக்கான வசதிகளைப் பெருக்கி, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான பாதுகாப்பை அதிகரித்து, சுற்றுலாச் சேவையை விருத்தி செய்வேன்.
• கன்னியாகுமரி, சொத்தவிளை, திற்பரப்பு போன்ற சுற்றுலாத் தலங்களில் தேர்ச்சி பெற்ற உயிர்காப்போர் (Life Guards) நியமிப்பேன்.
• கொட்டாரம் பகுதியில் உலகத்தரம் வாய்ந்த அறிவியல் மையம் மற்றும் கோளரங்கம் அமைப்பேன்.
• குளச்சல் போர் வெற்றித்தூணை இந்திய அரசு வரலாற்றுச் சின்னமாக அறிவிக்க நடவடிக்கை எடுப்பேன்.

என்னைத் தொடர்பு கொள்ள:
சுப. உதயகுமார், 42/27 இசங்கன்விளை மணி வீதி, பறக்கை ரோடு சந்திப்பு, கோட்டார், நாகர்கோவில் 629 002, கன்னியாகுமரி மாவட்டம்; Email: spudayakumar@gmail.com; skype: spudayakumar; Facebook: spudayakumaran; Twitter: spudayakumar.

by Swathi   on 18 Mar 2014  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
அரசியல் ஆர்வமுள்ள இளைஞர் மற்றும் மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சி -ஜோதிமணி எம்பி அரசியல் ஆர்வமுள்ள இளைஞர் மற்றும் மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சி -ஜோதிமணி எம்பி
அரசியல் பேசுங்கள் ! அரசியல் பேசுங்கள் !
இட ஒதுக்கீடு பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் அதற்கான பதில்களும் (FAQ): இட ஒதுக்கீடு பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் அதற்கான பதில்களும் (FAQ):
நவம்பர் 1 மொழிவழி மாநிலங்கள் அமைந்த நாள் நவம்பர் 1 மொழிவழி மாநிலங்கள் அமைந்த நாள்
பெரியாரும்,சிவாஜியும் ! பெரியாரும்,சிவாஜியும் !
நான் பார்த்த தமிழகத் தலைவர்கள் நான் பார்த்த தமிழகத் தலைவர்கள்
சி.என். அண்ணாதுரையின் கோரிக்கையை போப் ஆண்டவர் ஏற்றாரா? சி.என். அண்ணாதுரையின் கோரிக்கையை போப் ஆண்டவர் ஏற்றாரா?
ஏன் இப்படி ஆனோம்...? ஏன் இப்படி ஆனோம்...?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.