LOGO
  முதல் பக்கம்    அரசியல்     Print Friendly and PDF
- காவிரி பிரச்சனை

சம்பா சாகுபடிக்காக தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடகா சம்மதம் !!

தமிழகத்தில் சம்பா சாகுபடிக்கு, 26 டி.எம்.சி., தண்ணீரை திறந்து விட, கர்நாடகா அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. 

 

காவிரி கண்காணிப்பு குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், காவிரி கண்காணிப்புக் குழுவின் தலைவர் அலோக் ராவத், தமிழக மற்றும் கர்நாடக அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

 

அரசிதழில் காவிரி இறுதி தீர்ப்பு :

 

கடந்த பிப்ரவரி, 2ம் தேதி, மத்திய அரசின் அரசிதழில், காவிரி இறுதி தீர்ப்பு வெளியானபோதும், அதில் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்கள் நிறைவேற்றப்படாமல் உள்ளது. கடைசியாக ஜூலை, 15ம் தேதி, கண்காணிப்பு குழு கூடியது. அதன் பிறகு, கூட்டப்படவில்லை. 

 

தமிழக அரசின் கோரிக்கைகள் :

 

நேற்று நடைபெற்ற காவிரி கண்காணிப்பு குழு கூட்டத்தில் தமிழக அரசு முன்வைத்துள்ள சில முக்கிய அம்சங்கள்

 

காவிரி இறுதி தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது போல், காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி ஒழுங்குமுறை அமைப்பையும் உடனடியாக அமைக்க வேண்டும்.

 

சம்பா பயிர்களை காப்பாற்றுவதற்காக, அடுத்த மூன்று மாதங்களுக்கு, இறுதி தீர்ப்பில் கூறப்பட்டுள்ள அளவு தண்ணீரை, தமிழகத்துக்கு, முழுமையாக திறந்து விட வேண்டும்.

 

கர்நாடக அரசின் முடிவு :

 

தமிழகத்தின் கோரிக்கைகளுக்கு பதிலளித்த கர்நாடக அரசு கூறியிருப்பதாவது, தமிழகத்திற்கு இதுவரையிலும், 214 டி.எம்.சி., அளவு தண்ணீர் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது, காவிரி கண்காணிப்பு குழுவின் உத்தரவின் படி, மாதந்தோறும், தமிழகம் கேட்கும் தண்ணீரின் அளவை தருவதற்கு ஒப்புக்கொள்கிறோம். அதன் படி, நவம்பர் மாதத்துக்கு, 15 டி.எம்.சி.,யும், டிசம்பர் மாதத்துக்கு, 8 டி.எம்.சி.,யும், ஜனவரி மாதத்துக்கு, 3 டி.எம்.சி.,யும், தண்ணீர் வழங்க போவதாக கர்நாடக மாநில தலைமைச் செயலர் ஹவுசிக் சட்டர்ஜி உறுதியளித்துள்ளார். 

 

காவிரி கண்காணிப்பு குழுவின் உத்தரவு :

 

இருமாநில அதிகாரிகளிடமும் ஆலோசனை நடத்திய, கண்காணிப்புக் குழுவின் தலைவர் அலோக் ராவத், தனது உத்தரவில் கூறியிருப்பதாவது,

 

தமிழக அரசின் கோரிக்கையின் படி, காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி ஒழுங்குமுறை அமைப்பும் விரைவில் அமைக்கப்படும். 

 

காவிரி இறுதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள படி, நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி ஆகிய மூன்று மாதங்களுக்கும் சேர்த்து, 26 டி.எம்.சி., தண்ணீரை, தமிழகத்துக்கு கர்நாடக அரசு, திறந்துவிட வேண்டும். 

by Swathi   on 08 Nov 2013  2 Comments
Tags: Kaviri   Cauvery Supervisory Committee   Karnataka   காவிரி பிரச்சனை   காவிரி ஆறு        
 தொடர்புடையவை-Related Articles
சம்பா சாகுபடிக்காக தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடகா சம்மதம் !! சம்பா சாகுபடிக்காக தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடகா சம்மதம் !!
கருத்துகள்
15-Dec-2015 05:35:29 vaitheeswaran said : Report Abuse
இப்படியே எத்தனை வருஷங்களுக்கு சொல்லிகொண்டயிருபீகள் இப்படிஎசென்றல் சுப்றேமே கோர்டின் தீர்ப்புக்கு மதிப்பில்லாமல் போய்விடும் சீக்ரமாக ஒரு முடிவிற்கு வாருங்கள்
 
07-May-2015 00:28:58 வ .காமராஜ் said : Report Abuse
நன்றி
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.