LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

கொம்பன் படத்தில் நடித்த அனுபவம் குறித்து மனம் திறந்த கார்த்தி !!

அம்மா மட்டுமே வளர்த்த ஒரு பையன் அப்பா மட்டுமே வளர்த்த ஒரு பொண்ணு. இவங்களுக்கு கல்யாணம் ஆகுது. பொதுவா நம்மாளுங்க மாமனாருக்கு செம லந்து குடுப்போம்ல.. என்ன உங்கப்பன் சாப்ட்டானா? மென்னு திங்க சிரமமா இருக்கும்... கறியை மிக்ஸில அடிச்சு வெச்சிருக்கலாம்ல! வருஷத்துக்கு ஒரு தடவைதானே குளிப்பாங்க உங்க பரம்பரைல ! அப்படி இப்படினு கட்டையைக் குடுப்போம். பொண்ணுங்களும் அதைப் போய்க் கோபத்தோடு ரசிப்பாங்க. அப்படிப் பேசிட்டு இருக்கும் போது மாமனாரே வந்து நின்னார்னா, எப்படி இருக்கும்? தர்மசங்கடமும் அசட்டுச் சிரிப்புமா... நம்ம முகம் களைகட்டும்ல. இப்படி எனக்கும் ராஜ்கிரண் சாருக்கும் படம் முழுக்க ரண்டக்க ரண்டக்கதான். 


கொம்பன் என்னை மனசுல வெச்சு எழுதின கதை. ஆட்டு வியாபாரி கொம்பையா பாண்டியனுக்கு பெத்த அம்மா எந்தளவுக்கு முக்கியமோ, அதே அளவு ஊரும் முக்கியம். ஊருக்குள்ள விஷேசமோ, பஞ்சாயத்தோ.. முதல் குரல் கொம்பனோடது தான். ஊருக்கு ஒரு புள்ளை. ஊருக்கான புள்ளை அப்படி ஒரு கதை !!  


குட்டிப்புலி பண்ண முத்தையா தான் கொம்பன் இயக்குனர். அவர் ஸ்க்ரிப்ட் சொன்னப்பவே இராமநாதபுரத்துக்கும், மதுரைக்கும் இவ்வளவு வித்தியாசங்கள் இருக்குதானு ஆச்சர்யப்பட்டேன். ஏன்னா, சென்னையில் இருந்து பார்த்தா, தென் தமிழ்நாடு முழுக்க மதுரை மாதிரிதான் தெரியும் நமக்கு. ஆனா, கலாசாரம், வட்டார வழக்குனு மதுரைக்கும் இராமநாதபுரத்துக்கும் ஊருபட்ட வித்தியாசங்கள். முக்கியமா படத்தில் ரொம்ப நல்லவனா நடிக்க வேண்டிய கேரக்டர். சரக்கு சைட்டிஷ்னே நடிச்சுட்டு இருந்துட்டேன். ஆனா, இந்தப் படத்தில் அப்படி எந்த நெகடிவ் ஷேடும் இருக்காது.


கிராமம், குடும்பம், உறவுக்குள் நடக்கும் விஷயங்கள், பங்காளிப் பகைனு வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் விஷயங்கள் இருக்கும். நிறையை அன்போடும் கொஞ்சம் அந்நியமாக இருக்கிற மாமனார் மருமகன் உறவுதான் படத்தின் மெயின் கதை. பொதுவா மாமனார்-மருமகன் இடையிலான பாச நேசம் தமிழ் சினிமாவில் பெருசா பேசப்பட்டது இல்லை. இத்தனைக்கும் அவங்க ரொம்ப பாசமா இருப்பாங்க. ஆனாலும் ஏதோ  ஒரு சங்கடம் அவங்களுக்குள் இருக்கும். அந்த அன்பையும் மரியாதையையும் ரொம்ப இயல்பா கொண்டுவந்திருக்கோம். சிலர் கிட்ட நல்ல கதை இருக்கும். ஆனா அதை அவங்க எப்படி எடுப்பாங்கன்னு நமக்குப் பயமா இருக்கும். முத்தையாகிட்ட நல்ல கதைகளும் இருக்கும், அதை அச்சு அசலா அப்படியே பிரசன்ட் பண்றார். அதுதான் இந்த சப்ஜெட்டின் பலம். 


நான்லாம் என் ராசாவின் மனசிலே பார்த்துட்டு ராஜ்கிரண் நேரிலும் அப்படித்தான் இருப்பார்னு மிரண்டுட்டு இருந்தவன். இப்போ அவரே ஸ்பாட்ல என்னைப் பார்த்து, உங்களுக்கு இந்தக் கிராமத்து கேரக்டர்லாம் நல்லா பொருந்துது தம்பினு சொல்றார். விநியோகஸ்தர், தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர்னு ஒரு சினிமாவின் மொத்த டிராவலையும் புரிஞ்சு வெச்சிருக்கிறவர்கிட்ட இருந்து வர்ற வார்த்தைகள்... அவ்ளோ சந்தோசம் கொடுத்துச்சு !!


படத்தில் லட்சுமிமேனன் கேரக்டர் பேர் பழநி. இந்த இடத்தில் ஒரு பார்வை பார்த்தாலே போதும்னு சொன்ன, கரெக்டா புரிஞ்சிக்கிட்டு செம ஷார்ப்பா பண்ணிடுறாங்க. அவங்க இடத்தில் வேற யார் நடிச்சிருந்தாலும் இது சினிமான்னு ஞாபகம் வந்திருக்குமோன்னு தோணுது. அவ்வளவு நல்லா நடிச்சிருக்காங்க.

Actor Karthi Photos in Komban Movie
by Swathi   on 31 Oct 2014  0 Comments
Tags: கொம்பன்   கார்த்தி   Komban   Karthi   Actor Karthi        
 தொடர்புடையவை-Related Articles
கொம்பன்; ஆம் கொம்பன் தான்.. (திரை விமர்சனம்) வித்யாசாகர் கொம்பன்; ஆம் கொம்பன் தான்.. (திரை விமர்சனம்) வித்யாசாகர்
கொம்பனுக்கு புதிய சிக்கல் !! கொம்பனுக்கு புதிய சிக்கல் !!
எதிர்பார்ப்பை கூட்டும் ஏப்ரல் 2 !! எதிர்பார்ப்பை கூட்டும் ஏப்ரல் 2 !!
மீண்டும் தள்ளிப்போகிறது கொம்பன் ரிலீஸ் !! மீண்டும் தள்ளிப்போகிறது கொம்பன் ரிலீஸ் !!
பருத்திவீரனுக்கு நேர் எதிரானது கொம்பன் கதாபாத்திரம் !! பருத்திவீரனுக்கு நேர் எதிரானது கொம்பன் கதாபாத்திரம் !!
ஒரே நாளில் கொம்பன், வாலு ரிலீஸ் !! ஒரே நாளில் கொம்பன், வாலு ரிலீஸ் !!
காஷ்மோராவில் வடிவேலுக்கு பதிலாக விவேக் !! காஷ்மோராவில் வடிவேலுக்கு பதிலாக விவேக் !!
ஏப்ரலில் களம் இறங்கும் கொம்பன் !! ஏப்ரலில் களம் இறங்கும் கொம்பன் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.