LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

தனுஷை தொடர்ந்து அஜீத்துக்கும் வில்லனான நவரச நாயகன் கார்த்திக் !!

தற்போது, தமிழ் சினிமாவில் முன்னால் நடிகர்களையெல்லாம் வில்லன்களாக மாற்றும் ட்ரெண்ட் வந்துவிட்டது போல. 

 

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் ஐ படத்தில் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் வில்லனாக நடிக்கிறார். அதுபோல தனுஷ் நடிக்கும் அனேகன் படத்தில் கார்த்திக் வில்லனாக நடித்து வருகிறார். 

 

தற்போது அஜித்தை வைத்து கெளதம் மேனன் இயக்கவிருக்கும் புதிய படத்திற்கும் கார்த்திக்தான் வில்லன் என்பது தற்போதைய பரபரப்பு தகவல். அஜீத், அனுஷ்கா நடிப்பில் கெளதம் மேனன் இயக்க இருக்கும் படத்தின் பூஜை வரும் 6ஆம் தேதி நடக்கிறது. இந்த படத்தை ஆரம்பத்தை தயாரித்த ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார்.அனிருத் இசையமைக்கிறார். 

 

இந்த படத்திற்கு வித்தியாசமான வில்லன் வேடத்தில் நடிக்க கெளதம் மேனன் நடிகரை தேடிக்கொண்டிருந்தபோது அனேகன் படத்தில் கார்த்திக் வில்லனாக நடிக்கும் தகவல் கிடைத்தது. உடனே நேரில் அவரை சென்று பார்த்த கெளதம் மேனன் அவரையே வில்லனாக ஒப்பந்தம் செய்துவிட்டார். கெளதம் மேனன் படத்திற்காக உடல் எடை சற்று அதிகரிக்க முடிவு செய்திருக்கிறார் கார்த்திக். இதற்காக தினமும் காலை ஒருமணி நேரம் ஜிம் செல்கிறார். இந்த இரண்டு படங்களுக்கு பின்னர் நான் மீண்டும் கோலிவுட்டில் வில்லனாக ஒரு ரவுண்டு வருவேன் என கார்த்திக் நம்பிக்கையுடன் கூறுகிறார்.

by Swathi   on 01 Feb 2014  0 Comments
Tags: Karthik   Negative Role   Karthik Ajith   Karthik Ajith Movie   தனுஸ்   கார்த்திக்   அஜீத்  
 தொடர்புடையவை-Related Articles
ரஜினிக்கு வில்லனாகிறாரா விஜய் சேதுபதி? ரஜினிக்கு வில்லனாகிறாரா விஜய் சேதுபதி?
கோணலா இருந்தாலும் என்னோடது படத்தின் மூலம் வில்லன் ஆகிறாராம் பவர்ஸ்டார் !! கோணலா இருந்தாலும் என்னோடது படத்தின் மூலம் வில்லன் ஆகிறாராம் பவர்ஸ்டார் !!
உறுதியானது அமரன் - 2 உறுதியானது அமரன் - 2
தள்ளிப்போன தனுஷ் படபிடிப்பு !! காரணம் என்ன ? தள்ளிப்போன தனுஷ் படபிடிப்பு !! காரணம் என்ன ?
கார்த்திக் சுப்பாராஜின் அடுத்த படம் இறைவி !! கார்த்திக் சுப்பாராஜின் அடுத்த படம் இறைவி !!
கௌதம் கார்த்திக், ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் ரங்கூன்.... கௌதம் கார்த்திக், ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் ரங்கூன்....
அல்லு அர்ஜூனுக்கு வில்லனாகிறார் ஆக்சன் கிங் அர்ஜூன் !! அல்லு அர்ஜூனுக்கு வில்லனாகிறார் ஆக்சன் கிங் அர்ஜூன் !!
தமிழ் படங்களில் வில்லன் வேடத்தில் வெளுத்து வாங்கும் வித்யுத் !! தமிழ் படங்களில் வில்லன் வேடத்தில் வெளுத்து வாங்கும் வித்யுத் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.