LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சுட்டிக்கதைகள் - Kids Stories Print Friendly and PDF
- ஜி.ராஜேந்திரன்

நன்றி என்னும் மந்திர சொல்

நாலைந்து வருடமா மழையே பெய்யவில்லை.

 

ஏரி குளம் எல்லாம் வற்றி வறண்டு போனது. ஆறு கிணறெல்லாம் காய்ந்து கறுகிப் போனது. செடி கொடி எல்லாம் காய்ந்து நிற்க்குது. பலமா காத்தடிச்சா அப்படியே காத்தில் பறந்து போகுது.

 

ஆ.. நான் சொல்ல மறந்து விட்டேனே. அன்றைகெல்லாம் தாமரையும் தரையில் தான் இருந்தது.

 

தாமரை தலையை திருப்பி அப்படியும் இப்படியும் பார்த்தது. எல்லாரும் செத்து கொண்டிருக்காங்க. நானும் அப்படி ஆயிருவனா என்று தன்னோட உடம்பைப் பார்த்தது.

 

தண்டெல்லாம் மெலிந்து கிடக்குது.  இலையெல்லாம் வாடி வதங்கி தலை சாய்ந்து கிடக்குது. நல்ல பலமா காற்று வீசினா நானும் சாகப்போறேன் கடவுளே என்று நினைத்தது.

 

கடவுளே காப்பாற்று என்று மனமுருகி வேண்டியது.

 

அன்று சாயங்காலம் ஓர் அதிசயம் நடந்தது. வானத்தை மேகம் மூடியது, மின்னல் மின்னியது.  இடி இடித்தது. மழை கொட்டோ கொட்டுண்ணு கொட்டியது.

 

ஆகா தாமரைக்கு சந்தோஷம் தாங்க முடிய வில்லை. எவ்வளவு தண்ணி குடிக்க முடியுமோ அவ்வளவு தண்ணி குடிதத்து. உடம்பில் புதுத் தெம்பு வந்தது.

 

நல்லா நிமிர்ந்து நின்றது. மற்ற செடிகளும் உயிர் பிழைத்து மகிழ்ச்சியாக நின்றது.

 

ஆனா வேறு யாரும் செய்யாத ஒன்றை தாமரை செய்தது. அது தண்ணீரை கூப்பிட்டு நன்றி சொல்லியது.

 

ஏய் தண்ணீரே நீ என் உயிரை காப்பாத்தீட்ட. உனக்கு எப்படி நன்றி சொல்லுவது என்றே தெரிய வில்லை. என்று  சொல்லியது.

 

தண்ணீருக்கு ஆச்சரியமாப் போனது. எத்தனையோ வருஷமா நான் இந்த வேலையைச் செய்து கொண்டிருக்கிறேன். யாருமே எனக்கு நன்றி சொன்னதில்லை. நீதான் முதல்ஆளு. உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்குது '' என்று சொல்லியது.

 

"எனக்கும்தான்" தாமரையும் சொல்லியது. இரண்டு பேரும் ரொம்ப நெருக்கமாயிட்டாங்க. 

 

தண்ணீர் சல சல என்று ஓடி வரும். தாமரையைத் தாலாட்டும். தாமரையும் உடம்பை ஆட்டி அப்படியும் இப்படியும் ஆடும். தாமரைப் பூமேல தண்ணீரை விசிறியடிக்கும். தாமரையோட உடம்பு புல்லரிச்சுப் போகும்.

 

அப்படி இருக்கும் போது மழை நின்று போனது. தண்ணீர் ஏரி குளத்தில் வாழப் போனது. வாய்க்காலிலெ தண்ணீ ஓடறதும் நிண்ணு போச்சு.

 

தாமரைக்குத் தண்ணீரைப் பார்க்கணும்போல இருந்தது. தண்ணீருக்குத் தாமரயை பாக்கணும்போல இருந்தது. ஆனா என்ன வழி வீசுற காற்றிடம் செய்தி சொல்லியனுப்பலாம் என்று பார்த்தால் காற்று மரத்து மேலேயும், பாறை மேலயும் மோதி  சிதறிப் போயிருமே என்ன செய்யவது என்று  நினைத்து வருத்தப்பட்டது.

 

இரண்டு பேரும் மழை பெய்த போது அவர்கள் விளையாடியதை நினைத்து கொண்டிருந்தாங்க. அப்படியே ஆறு மாசம் போனது. மறுபடியும் மழை பெய்தது.

 

அவ்வளவுதான் தண்ணிர் சல சல என்று ஓடி வந்தது.

 

"ஒன்ன பாக்காமல் என்னால் இருக்க முடியவில்லை. வா என்னோடு வா. என் வீட்டில் வாழலாம்" என்று தண்ணீர் கூப்பிட்டது.

 

"ஆமா நானும் அதையேதான் நினைத்து கொண்டிருகிறேன். உன்னை பார்ல்க்காம என்னாலையும் இருக்க முடியாது''  தாமரை ,தண்ணிருடன்  அதோடு வீட்டுக்குப் போனது.

 

தண்ணிகூடவே இருக்க முடிவு செய்தது.

 

தண்ணியும் தாமரையும் ரொம்ப நெருக்கமானவங்க. தண்ணீர்க்கு ஏதாவது ஒண்ணுன்னா தாமரையால் தாங்க முடியாது. தாமரைக்கு ஏதாவது ஒண்ணுன்னா தண்ணியால் தாங்க முடியாது.

 

தண்ணீர் வத்தும் போது பாத்திருக்கீங்களா. தாமரையும் வளர்ச்சியைக் குறைத்து கொள்ளும். தண்ணீர் கூடும்போது அதுக்குத் தகுந்த மாதிரி தாமரையும் வளர்ந்து கொள்ளும்.

 

நண்பர்கள் என்றால் இவர்களை போல் இருக்கணும் இல்லையா?

by Swathi   on 11 Mar 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஊருக்காக செய்த உதவி ஊருக்காக செய்த உதவி
வளையல் வளையல்
பலவீனமே பலம் பலவீனமே பலம்
சிறு துளி சிறு துளி
பகைவர்கள் செய்த உதவி பகைவர்கள் செய்த உதவி
புத்திசாலி குரங்குகள் புத்திசாலி குரங்குகள்
கலப்படம் கலப்படம்
கரடியாரின் உதவி கரடியாரின் உதவி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.