கத்தி திரைப்படத்தின் வசூல் 100 கோடியை தாண்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து நடிகர் விஜயின் பி.ஆர்.ஒ பி.டி.செல்வகுமார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது,
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த தீபாவளியன்று வெளியான கத்தி திரைப்படம் இரண்டு வாரத்தில் 100 கோடியை தாண்டியது. இதுவரை வந்த தென்னிந்திய நடிகர்களின் வசூலை கத்தி முறியடித்துள்ளது என விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளார்கள். கத்தி திரைப்படம் தமிழ்நாட்டில் 65.1 கோடியும், இந்தியாவின் மற்ற மாநிலங்களில் 15.4 கோடியும், வெளிநாடுகளில் 20.2 கோடி ரூபாயும் வசூல் செய்த்துள்ளதாக விஜயின் பி.ஆர்.ஒ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.
|