துப்பாக்கி படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் படம் கத்தி. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். வரும் தீபாவளியை ஒட்டி வெளியாக இருக்கும் இந்த படத்தை பார்த்த தணிக்கை குழு ’யு’ சான்றிதழ் அளித்துள்ளனர்.
அதேபோல் தீபாவளிக்கு வரும் இன்னொரு படம் பூஜை. ‘தாமிரபரணி’ படத்திற்கு பிறகு விஷால், ஹரி மீண்டும் இணைந்துள்ள இந்த படத்தில் விஷால் ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை விஷால் தயாரித்துள்ளார். இந்த படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் படத்தில் நிறைய வன்முறை காட்சிகள் இருப்பதாக கூறி யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர்..
|