|
|||||
தீபாவளிக்கு முன்பே வெளியாகிறதா கத்தி !! |
|||||
பல தடைகளை தாண்டி கத்தி திரைப்படம் வரும் தீபாவளியை ஒட்டி வெளியாக இருக்கிறது. துப்பாக்கி படத்தை அடுத்து, விஜய், ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாக்கி இருக்கும் அடுத்த படம் இதுவாகும். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். படத்தின் படபிடிப்பு காட்சிகள் அனைத்தும் முடிந்து விட்டதால், இறுதி கட்ட பணிகளில் மும்மரமாக ஈடுபட்டுள்ளது படக்குழு. இதற்கிடையே தியேட்டர் பிடிக்கிற வேலைகளும் துரிதமாக நடந்து கொண்டிருக்கிறது. ஷங்கரின் ஐ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகாது என்பதால், கத்தி படத்திற்கு இருந்த மிகப் பெரிய போட்டி நீங்கி விட்டது. இந்நிலையில், விஷாலின் பூஜை படம் கிட்டத்தட்ட தமிழகத்தில் உள்ள முக்கியமான சில மெகா தியேட்டர்களை இழுத்துக்கொண்டிருக்கிறது. இருப்பினும், வியாபார ரீதியாக விஜய் படமா? விஷால் படமா? என்று பார்க்கிறபோது விஜய் படமே எகிறி நிற்கும் என்பதால் கத்தி படத்தை வாங்குவதற்குதான் விநியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் பிரியப்படுகிறார்களாம். நிலைமை இப்படி இருக்க, தீபாவளிக்கு திரைக்கு வருகிற அத்தனை படங்களுமே ஒரே நாளில் தியேட்டர்களுக்கு முண்டியடிக்க வேண்டாம் என்று, இப்போது விஜய் படத்தை தீபாவளிக்கு 4 நாளைக்கு முன்பே அதாவது அக்டோபர் 18 ம் தேதியே படத்தை வெளியிடும் பேச்சுவார்த்தையும் நடந்து கொண்டிருக்கிறதாம். |
|||||
by Swathi on 08 Oct 2014 0 Comments | |||||
Tags: கத்தி ரிலீஸ் கத்தி Kaththi Kaththi Release Kaththi Diwali Release Kaththi Latest News | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|