LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சுட்டிக்கதைகள் - Kids Stories Print Friendly and PDF
- ஜி.ராஜேந்திரன்

கடவுளுக்கு ஒரு கடிதம்..

நேரம் இராத்திரி பத்து மணி இருக்கும். கமலா தன்னோட அறையிலிருந்து புயல் போல வெளியே வந்தாள்... முன்னறையில் கணவன் ராகேஷ் தொலைக்காட்சியில் ஏதோ ஒரு தொடர் பார்த்திட்டிருந்தான்.

 

வெளியே வந்த கமலாவோட கையில் ஒரு கத்தரிக்கோல் இருந்தது. டக்குண்ணு டீவியோ வயரைப் படக்குணு இழுத்தாள். கையில் இருந்த கத்திரக்கோலால் அந்த வயரை கசமுசாண்ணு வெட்டினாள்.

 

"ஏய் கமலா உனக்கென்ன பைத்தியம் புடிச்சிருச்சா?'' என்று கத்திக்கொண்டே கமலாவோட முகத்தைப் பார்த்தவன் ஒரு நிமிடம் கலங்கிப் போய்விட்டான். கமலாவேட முகம் அழுது அழுது வீங்கிக் கிடக்கு. கண்கள் சிவந்து கிடக்கு. இப்பவும் கண்ணீர் வழிஞ்சுகிட்டே இருக்கு.

 

"ஏய் என்னாச்சு உனக்கு? ஏன் இப்படி அழுதிருக்கே?'' ராகேஷ் கேட்டான்.

 

கமலா அழுது கலங்குனதுக்கான காரணம் சொல்றதுக்கு முன்னாடி அவங்க யார்? எப்படி வாழறாங்க அப்படீங்கறது பாக்கலாம்.

 

கமலா ஒரு தனியார் பள்ளியிலே ஆசிரியை வேலை செய்யறாங்க. ராகேஷ் ஒரு தனியார் கம்பனியில் கணினிப் பிரிவிலே வேலை செய்யறாரு. அவர் காலையில் எட்டு எட்டரைக்கு வீட்டிலிருந்து கிளம்பினா இரவு ஒன்பது மணியளவில் தான் வீடு திரும்புவார். கமலா ராகேஷ் தம்பதியருக்கு ஒரே மகள் மதுமிதா ஐந்தாம் வகுப்பில படிக்கறாங்க. அம்மா அவங்களுக்கு பாடம் நடத்தறாங்க.

 

ஐந்தாம் வகுப்பில் படிக்கிற மதுமிதாவும் பள்ளியை விட்டு வீட்டுக்கு வருவதற்கு எட்டு மணியாயிரும் ஏன் என்று  கேட்கிறீங்களா. அவளுக்கு மூன்று டுயூஷன் இருக்கு.

 

மட்டுமல்ல வீட்டுக்கு வந்தாள் நேரா நோட்டுப் புக்குகளை திறந்து  வைத்து வீட்டுப்பாடம் செய்யத் தொடங்கி விடுவாள். பள்ளிக்கூடத்தில் கொடுக்கிற வீட்டுப்பாடம் அப்புறம் டூயூஷன்ல கொடுக்கிற வீட்டுப்பாடம் அப்படி இரண்டு வகையான வீட்டுப்பாடம் செய்யறதுக்குள்ளே குழந்தை தளந்து போயிவிடும். அம்மா கொடுக்கிறதை எதையாவது வாரித்தின்னிட்டு படுத்தருவாள். சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் நீச்சல், நடனம்ணு அதுவேற தனியாக இருக்கும்.

 

பள்ளிக்கூடத்தில் வகுப்புக்குப் பிறகு கமலாவும் குழந்தைகளுக்கு டூயூஷன் எடுக்கறாங்க. டூயூஷனை முடிச்சிட்டு வீட்டுக்கு வந்து  பாத்திரங்களெல்லாம் கழுவி வைத்து, ராத்திரிக்குத் தேவையான சாப்பாடு சமைத்து துணிமணியெல்லாம் துவைத்து எல்லாருக்கும் சாப்பாடு கொடுத்து... இப்படித்தான் நாட்கள் போயிட்டிருக்கு. இப்ப கமலா அழுததுக்கான காரணத்தைப் பாரப்போம். அன்றைக்கு இராத்திரி மகள் மதுமதிக்குச் சாப்பாடு கொடுத்து, படுக்கையை சரி செய்து கொடுத்து, ராகேஷூக்கும் சாப்பாடு கொடுத்து தானும் கொஞ்சம் சாப்பிட்டு தன்னோட அறைக்குள் நுழைஞ்சாள். ராகேஷ் டிவியில் ஏதோ தொடர் பார்க்கத் தொடங்கிட்டார். மதுமிதா அவளோட அறைக்குள்ளே தூக்கத்தின் மடியில் வீழ்ந்திருந்தாள்.

 

கமலாவோட மேசைமேல் கட்டுரை நோட்டு அடுக்கி வச்சிருந்தது.  ஒவ்வொண்ணா எடுத்துத் திருத்தி கொண்டு இருந்தாங்க. கடவுள்கிட்ட கடிதம் மூலம் உங்க ஆசையைச் சொல்வதுதான் கட்டுரையோடு சுருக்கம்.

 

ஒவ்வொரு நோட்டாப் படிச்சிட்டு தவறுகளுக்கு அடிக்கோடு போட்டு, இடப்பக்கம் ஓரமாக மதிப்பெண் போட்டுட்டு இருந்தாங்க. சில நோட்டுகளைப்படிச்சு கமலா டீச்சரோட மொகத்தில் புன்சிரிப்பு மின்னி மறைந்தது.

 

அடுத்தது மதுமிதாவோட குறிப்பேடு. பெயரைப் படிச்சதும் கமலா டீச்சர் நிமிர்ந்து உட்கார்ந்தாங்க. மகள் எப்படி எழுதியிருக்காள்? எத்தனை தப்பு வந்திருக்கு?

 

அப்படீங்கறதை நினைத்து கொண்டே குறிப்பேட்டைத் திறந்து கட்டுரையைப் படிக்க ஆரம்பித்தாங்க.

 

சிரிச்ச முகத்தோட வாசிக்க ஆரம்பிச்ச டீச்சரோடு முகம் வாசிக்க வாசிக்க அப்படியே வாடிப்போயிருச்சு, கட்டுரையிலிருக்கிற தவறுகளைத் திருத்தி மதிப்பெண் போட தயாரா இருந்தவங்க கண்ணிருந்து தாரை தாரையாக கண்ணீர் ஒழுகியது.

 

குறிப்பேடு மேல் முகத்தை வைத்து கொண்டு விம்மி விம்மி அழுதாங்க. நோட்டு புக்கெல்லாம் கண்ணீரால் நனைந்தது, அதிலுள்ள எழுத்துகளெல்லாம் அழிந்து போனது. அப்ப ஏற்பட்ட கோபத்தில் தான் கையில் கத்தரிக்கோலோட ஓடிவந்து டிவியோட வயரைக் கசமுசாண்ணு வெட்டக்காரணம்.

 

கோபமும், வருத்தமும் வந்தாள் எதுக்கு டிவியோட வயரை வெட்டணும்ணு கேட்கிறீங்களா. அதுக்கு மதுமிதாவோட கட்டுரைதான் காரணம். கடவுளுக்கு அவள் எழுதின கடிதம்தான் காரணம்.

 

கேட்டதைத் தரும் கடவுளுக்கு

 

வணக்கம்,

 

என் பெயர் மதுமிதா.

 

நான் ஐந்தாம் வகுப்பில் படிக்கிறேன்.

 

எனக்கு ஒரே ஒரு வேண்டுகோள் தான் இருக்கு.

 

என்னை ஒரு தொலைக்காட்சிப் பெட்டியாக மாற்றி விடுங்க. அப்பாவும் , அம்மாவும் இருக்கிற கொஞ்ச நேரத்தையும் அதைத்தான் பார்க்கிறாங்க.

 

அதில் சானலுக்குப் பைசா தீர்ந்தால் அடுத்த நிமிடமே பணத்தை அடைக்கிறாங்க.

 

டிவிக்கு எதாவது கேடு வந்தா உடனை ஆளக் கூப்பிட்டு சரி செய்யறாங்க. டிவிக்கு எப்பவும் கரண்டு வேண்டும் என்பதற்காக இன்வெர்டர்ணு ஒரு கருவி வாங்கி வைத்திருக்காங்க.

 

ஆனா என்னை யாருமே கண்டுக்கிறதில்லை. என் கூடச் சிரிச்சுப் பேசு வதில்லை. நான் நல்லா நடனம் ஆடறேன்ணு டீச்சர் பாராட்டினாங்க அப்படீண்ணு சொன்னா ஒ அப்படியாண்ணு மட்டும் சொல்லிட்டு மறுபடியும் டிவி பாக்கத் தொடங்கிருவாங்க.

 

ஆனா எனக்கு என் அம்மாவையும் ,அப்பாவையும் ரொம்ப புடிக்கும். அதனால் அவங்க இருக்கிற வீட்டிலேயே என்னை ஒரு டிவிப் பெட்டியாக மாற்றி விடுங்க.

இப்படிக்கு மதுமிதா.

by Swathi   on 11 Mar 2018  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
மந்திரியான காக்கை அண்ணாச்சி மந்திரியான காக்கை அண்ணாச்சி
நான் சம்பாதிக்கும் பணம் நான் சம்பாதிக்கும் பணம்
ஏதோ ஒரு உதவி ஏதோ ஒரு உதவி
ஆன் லைன் வகுப்பு ஆன் லைன் வகுப்பு
திரும்பி வந்த பூ செடிகள் திரும்பி வந்த பூ செடிகள்
விலங்குகளின் அன்பு விலங்குகளின் அன்பு
தானாக வந்த திறமை தானாக வந்த திறமை
செய்த உதவி செய்த உதவி
கருத்துகள்
17-Jul-2019 08:34:24 avinash said : Report Abuse
நன்றாக irunthathu
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.