LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

பிரபலக்கவிஞரும், தமிழ்ப்பேராசிரியருமான கவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார்

பிரபலக்கவிஞரும், தமிழ்ப்பேராசிரியருமான கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் இன்று(ஜூன் 2)  அதிகாலை காலமானார். அவருக்கு வயது 80.


'கவிக்கோ' என்று போற்றப்படும் தமிழ்க் கவிஞர் அப்துல் ரகுமான், மதுரையில் 1937ம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தையும், தாத்தாவும் சிறந்த உருது கவிஞர்கள். கல்லூரியில் தமிழை சிறப்புப் பாடமாக எடுத்துப் பயின்று, இலக்கண, இலக்கியங்களை கற்று, கவிதை எழுதத் துவங்கினார். தமிழ், ஆங்கிலம், அரபி, உருது, பாரசீகம், இந்தி ஆகிய பல மொழிகளிலும் புலமை பெற்றிருந்த இவர், சமஸ்கிருதமும் பயின்றவர். அவர் 'பால்வீதி' என்ற கவிதைத் தொகுதி மூலம் தம்மை ஒரு சோதனைப் படைப்பாளியாக இனங்காட்டிக் கொண்டார். அத்தொகுதி வெளிவந்த போது கவிதையை நேரடியாகத் தராமல் உவமைகள், உருவகங்கள், படிமங்கள், குறியீடுகள் ஆகியவற்றின் வழி வெளியீட்டு முறையை அமைத்துக் கொண்டார்.

தமிழில் கவிதைக் குறியீடுகள் குறிந்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர். தமிழில் ஹைக்கூ, கஜல் ஆகிய பிறமொழி இலக்கியங்களை முனைந்ததிலும் பரப்பியதிலும் இவர் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.1960 க்குப் பின் கவிதை உலகுக்கு வந்த இவர் கவியரங்கக் கவிதைகளாலும் சிறப்படைந்துள்ளார். 'சிலேடை' வார்த்தைகளால் கேட்போரைக் கவர்வது இவரது பாணி.

வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் 20 ஆண்டுகள் தமிழ்ப் பேராசிரியராகப் பணி புரிந்தவர். கவிஞர் அறிவுமதி உள்ளிட்ட இளந்தலைமுறை கவிஞர்களுக்கு ஆசானாக விளங்கினார். 'ஆலாபனை' கவிதைத் தொகுப்பிற்காக சாகித்திய அகாடமி விருதைப்பெற்றவர்.கவியரசர் பாரிவிழா விருது, தமிழன்னை விருது, பாரதிதாசன் விருது, கலைமாமணி, கம்பர் விருது, உமறுப்புலவர் விருது உள்ளிட்ட பல விருதுகளையும் வென்றுள்ளார்

சமீபத்தில் 'இசைஞானி' இளையராஜா அவர்களுடன் பங்கேற்று நகைச்சுவையுடன் சுவைப்பட சிறப்புரையாற்றியது இறுதி விழாவாகும்.

2015 ஆம் ஆண்டு நடந்த கவிக்கோவின் பவளவிழாவில் 'கவிப்பேரரசு' வைரமுத்து அவர்கள் பாராட்டிப்பேசும் காணொளிக் காட்சியைக் காணலாம்.

by Swathi   on 01 Jun 2017  1 Comments
Tags: கவிக்கோ அப்துல் ரகுமான்   அப்துல் ரகுமான்   ரகுமான்   கவிக்கோ   ஆலாபனை   kaviko   abdul rahman  
 தொடர்புடையவை-Related Articles
பிரபலக்கவிஞரும், தமிழ்ப்பேராசிரியருமான கவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார் பிரபலக்கவிஞரும், தமிழ்ப்பேராசிரியருமான கவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார்
ரசிகர்களில் சூடான கேள்விகளுக்கு இசை புயல் ஏ.ஆர் ரகுமானின் பதில்கள் !! ரசிகர்களில் சூடான கேள்விகளுக்கு இசை புயல் ஏ.ஆர் ரகுமானின் பதில்கள் !!
தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் படங்களுக்கு இசை அமைக்க ஆர்வம் காட்டும் ஏ.ஆர்.ரகுமான் !! தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் படங்களுக்கு இசை அமைக்க ஆர்வம் காட்டும் ஏ.ஆர்.ரகுமான் !!
ஏ.ஆர்.ரகுமான் இசையை ரசித்த வேதிகா !! ஏ.ஆர்.ரகுமான் இசையை ரசித்த வேதிகா !!
அடுத்த ஆஸ்கருக்கு தயாராகும் ஏ.ஆர்.ரகுமான் !! அடுத்த ஆஸ்கருக்கு தயாராகும் ஏ.ஆர்.ரகுமான் !!
கருத்துகள்
10-Jun-2017 10:41:51 ஐபிசி தமிழ் said : Report Abuse
கவிக்கோ அப்துல் ரகுமான் இழப்பை சரி செய்வது மிகவும் கஷ்டம்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.