LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

கவிதைக்குள் ஒரு கதை

ஆஸ்ரமம் என்னும் பதாகை
 ஏந்திய ஒரு கூட்டம்
 கட்டியணைத்து வரவேற்றது.
 கூட்டத்தின் நடுவில் இருந்த
 பெரியவரை கால் தொட்டு
 வணங்கினான் வாலிபன்
 ஆஸ்ரமத்தில் வளர்ந்து ஐ.ஏ.எஸ்.
 தேறிய முதல் ஆள் நீ !

 உச்சி முகர்ந்து வாழ்த்து கூறினார்.
 சென்று கொண்டிருந்த வாகனம்
 பொ¢யவரால் நிறுத்தப்பட்டு வாலிபனை
 மட்டும் இறங்கி கூட்டிச்சென்றார் பெரியவர்
 பாதையோரம் இருந்த குப்பைத்தொட்டியை
 தொட்டு காட்டி இங்குதான்
 நீ பிறந்தாய் ! என்று சொல்ல
 கண்ணீருடன் எட்டிப்பார்த்து என்
 பெற்றோரும் இந்த குப்பைகள்தானே
 பெரூமூச்சுடன் சொல்லி திரும்பியவனை
 தம்பி ! என்று அழைக்கும்
 குரல் கேட்டு திரும்பியவன்
 குப்பை தொட்டியின் அருகில்
 படுத்திருந்த மூதாட்டி இரு கையையும்
 நீட்டினாள் !

 கால் சராயில் கையை  விட்டு
 கையில் வந்த பணம் முழுவதையும்
 அவள் கையில் திணிக்க
 வேண்டாம் தம்பி ! நீ நல்லா
 இருப்பே என்று திருப்பி கொடுத்தவள்
 கேவி கேவி அழுதாள்
 அம்மா அழுகாதே, எங்களுடன்
 வருகிறாயா? கேட்டவனை அன்புடன்
 பார்த்த மூதாட்டி பெரியவரின்
 காலை தொட்டு வணங்கினாள்.
 பதறிப்போன இருவரும் விலகி
 நிற்க, சட்டென ஓடி மறைந்தாள்
 அந்த மாது.

 ஏதும் புரியாத இருவரும்
 திரும்பி திரும்பி பார்த்து சென்றனர்.
 சற்று தொலைவில் ஒளிந்திருந்து
 பார்த்துக்கொண்டிருந்த மாது அன்று
 குப்பையில் போட்ட பையன்
 வாட்ட சாட்டமாய் போவதை கண்
 நிறைந்து பார்த்து நின்றாள்.
 தவறான வழியில் பெற்ற குழந்தையை
 தொட்டியில் போட்டு விட்டு
 குற்ற உணர்ச்சியில் தினம் தினம்
 அங்கேயே சுற்றி வந்த அந்த மாது
 பெரியவர் வாலிபனிடம் சொல்லி
 கொண்டிருந்ததை கேட்டவுடன் உள்ளத்தில்
 நிறைவு கொண்டுவிட்டாள்.

kavithaikkul oru kathai
by Dhamotharan.S   on 02 Jun 2016  0 Comments
Tags: Kadhai   Kavithai   Oru Kadhai   கவிதை   ஒரு கதை        
 தொடர்புடையவை-Related Articles
தூர் தூர்
நம்பிக்கையெனும் நெற்றிக்கண் திற.. நம்பிக்கையெனும் நெற்றிக்கண் திற..
அழகெனும் சொல்லுள் ஆதிக்கம் செய்பவள்.. - வித்யாசாகர்! அழகெனும் சொல்லுள் ஆதிக்கம் செய்பவள்.. - வித்யாசாகர்!
நீயே தாயுமானவள்.. - வித்யாசாகர் நீயே தாயுமானவள்.. - வித்யாசாகர்
தினம் வாடி துடிக்கிறேன்......! தினம் வாடி துடிக்கிறேன்......!
அ தரும் அழகுக்கவிதை அ தரும் அழகுக்கவிதை
ஆ - தரும் அழகுக்கவிதை ஆ - தரும் அழகுக்கவிதை
மூன்றாம் அறிவு - கவிப்புயல் இனியவன் மூன்றாம் அறிவு - கவிப்புயல் இனியவன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.