LOGO
  முதல் பக்கம்    மற்றவை    சிறப்புக்கட்டுரை Print Friendly and PDF

சாதி வெறியின் (கௌரவக்) கொலைகள்

சில மாதங்களுக்கு முன் உடுமலைப்பேட்டையில் நடந்த சாதிக் கொலைச் சம்பவத்தை நம்மில் யாரும் எளிதில் மறந்திருக்க முடியாது. சாதி என்ற பெயரில் அரங்கேரிய அந்த மனிதாபிமானமற்ற செயலைப் பற்றிய செய்திகள் ஊடகங்களிலும் நாளிதழ்களிலும் சில நாட்களுக்கு வந்து சென்றன. தமிழகத்தின் முக்கியக் கட்சிகள் இவ்வநீதியை எதிர்த்து குரல் கொடுக்க முன்வரவில்லை.   
ஒருபுறம் அறிவியல், தொழில்நுட்பங்கள் என்று இச்சமூகம் வளர்ச்சியடைந்து வந்தாலும், மறுபுறம் இதுபோன்று சாதி வெறியின் கொடூரங்களும் ஆங்காங்கே நிகழ்ந்த வண்ணமுள்ளன. இதுபோன்ற அநியாயக் கொலைகளுக்கு என்னதான் தீர்வு? 
கடுமையான நீதிமன்றச் சட்டங்களினால் இதுபோன்றக் குற்றங்களைத் தடுக்க முடியுமா? கொடுமையான தண்டனைகளின் மூலம் இவற்றை குறைக்க முடியுமா? இதில் அரசு, போலீஸ் மற்றும் வழக்கறிஞர்களின் பங்கு என்ன? இவர்கள் மட்டும்தான் இதற்குக் காரணமா, குடிமக்களாகிய நாம் இவற்றை எதிர்த்து என்ன செய்தோம்? நல்ல வேளை நம் வீட்டில் இதுபோன்று எதுவும் நிகழவில்லை என்ற மெத்தனப் போக்கில் வாழ்கிறோமா?
சாதிக் கொலைகள் தமிழகத்தில் மட்டுமின்றி ஏனைய பிற மாநிலங்களிலும் நடந்து வருகின்றன. ஹரியானா, உத்திரப் பிரதேசம், பீகார், ஆந்திரா, கேரளா, மகாராஸ்டிரா, ஒரிஸ்ஸா மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் குறிப்பாக கிராமங்களில் இவை அதிக அளவில் நடைபெற்று வருகின்றன.
இன்று தமிழகத்தில் சாதிக் கட்டிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகின்றன.  சாதிக் கட்சிகள் என்று தம்மை அடையாளம் காட்டிக்கொள்ள பயந்த நிலை மறைந்து, கலர் கலரான கொடிகளும், கட்சிக் கூட்டங்களும் புற்றீசல் போல் நடைபெற்று வருகின்றன. இதுபோன்ற சாதிக்கட்சிகளினால் அவர்களுக்கு எவ்வித முன்னேற்றமும் ஏற்படுவதில்லை, மாறாக இதுபோன்ற கட்சிகள் வெறும் ஓட்டு வங்கிகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் கருவிகளாக உள்ளன. படித்த கல்வியாளர்களும் சாதிப்பற்றுடன் அவரவர் தம் சாதிக்கு ஆதரவளித்து இந்த அலங்களை  மேலும் மேலும் வளர்த்து வருகின்றனர். 
எங்கிருந்து வந்தது இந்தச் சாதியும், பேதமும்??
காதல் திருமணம், கலப்புத் திருமணம், சாதி மறுப்புத் திருமணம் – இவைகளில் எத்தலைப்பு இது போன்ற திருமணங்களுக்குப் பொருந்தும் என்பது போன்ற பயனற்ற விவாதங்கள் அரங்கேறும் அவலமிகு மாநிலமாக நம் தமிழகம் விளங்கி வருகிறது. 
சாதி எதிர்ப்பைப் பற்றிப் பேசும் இன்றைய அரசியல் கட்சித் தலைவர்களும் பிரபலங்களும், மறுபக்கம் ஆடம்பரத் திருமணங்களுக்குச் சென்று தலைமை தாங்கி வருகின்றனர். நாளிதழ்களும், தொலைக்காட்சி சேனல்களும் இதுபோன்ற செய்திகளை சரியான முறையில் பயன்படுத்தி  தங்களின் TRP வரிசையை உயர்த்திக் கொள்வதோடு நின்று விடுகின்றன. இவர்களால் இங்கு எவ்வித முன்னேற்றமும் ஏற்படப் போவதில்லை. 
இதுபோன்ற திருமணங்கள் நம் வீட்டில் நடந்தால் நாம் அதை ஏற்றுக் கொள்வோமா? ஆதரிப்போம் என்ற நிலை வருமேயானால் அன்றுதான் இதுபோன்ற கொடுமைகள் அழியும். 
எனது பார்வையில் சாதி/மதம் என்ற பெயரில் நிகழும் இக்கொடூரங்கள் மறையும் காலம் வெகுதொலைவிலில்லை, இவை மெல்ல மெல்லக் குறைந்து வருவதாகவே தோன்றுகிறது. நான் பள்ளி/கல்லூரியில் படித்த காலத்தில் என்னுடன் பயின்ற நண்பர்களின் சாதியை இதுவரை நான் அறியேன், அதே நிலைப்பாடுதான் அவர்களிடத்தும். பள்ளியிலும் சரி, கல்லூரி விடுதியிலும் சரி அதைப் பற்றி நண்பர்களிடத்தில் பேசியதில்லை.  
கல்வியினால் இச்சமூகம் சிறப்படையும், அது சாதியை அழிக்கும் என்பதற்கு இதுவே மிகச்சிறந்தச் சான்றாகும்.
இன்று என்னுடன் படித்த, அலுவகத்தில் வேலை செய்துவரும் பல நண்பர்களும் காதல் திருமணம் செய்துள்ளனர். அவர்களில் பெரும்பாலும் வேற்று சாதியினரை மணமுடித்து வாழ்ந்து வருகின்றனர் (நிச்சயம் இத்திருமணங்களில் எதிர்ப்பில்லாமல் இருந்திருக்காது).
இன்று கற்றவர்கள் பலரும் சாதிப் பேய் என்ற போர்வையினுள் உள்ளனர் என்பதை இத்தருணத்தில் நினைவு கூற வேண்டும். காதலும் கல்வியும் ஒன்றல்ல, எனினும் இக்காதலும் ஒருநாள் சாதியை அழிக்கும். சாதியினால் அழியும் இதுபோன்ற காதலும் திருமணங்களும், நாளை அந்தச் சாதியையே ஒழித்தழிக்கும்.  
சாதி, மதவெறியை பிரசவிக்கும் இன்றைய சாதிக்கட்சிகள் நாளைய கல்விக் கடலில் நிச்சயம் அழியும்.

இன்றைய கலப்பு மணங்கள் நேற்றைய சாதியை அழித்து நாளைய சமூகத்தை ஒன்றிணைக்கும்! எனக்கு நம்பிக்கையுள்ளது!

by varun   on 18 Jul 2016  2 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழ்ச் சமூகத்தில் தேங்கியுள்ள ஆங்கில மோகமும், நம் தாய்மொழி சந்திக்கும் சவால்களும் தீர்வுகளும் தமிழ்ச் சமூகத்தில் தேங்கியுள்ள ஆங்கில மோகமும், நம் தாய்மொழி சந்திக்கும் சவால்களும் தீர்வுகளும்
தமிழின அடையாளங்களின் இன்றைய நிலையும் செல்லவேண்டிய திசையும் ..ச.பார்த்தசாரதி தமிழின அடையாளங்களின் இன்றைய நிலையும் செல்லவேண்டிய திசையும் ..ச.பார்த்தசாரதி
[ம.சு.கு]வின் :  மனித உறவுகள் மேம்பாடு – இரகசியம் [ம.சு.கு]வின் : மனித உறவுகள் மேம்பாடு – இரகசியம்
கொரியாவில் இயங்கலையில் இனிதே நடைபெற்ற தமிழர் திருநாள் 2021 பொங்கல் நிகழ்வு கொரியாவில் இயங்கலையில் இனிதே நடைபெற்ற தமிழர் திருநாள் 2021 பொங்கல் நிகழ்வு
கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் 2021 தலைவர் உரை கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் 2021 தலைவர் உரை
“இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் அதிகம் பாதிப்பது இளையோரையா? முதியோரையா?” “இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் அதிகம் பாதிப்பது இளையோரையா? முதியோரையா?”
வீடு மற்றும் பொது இடங்களில் மழைநீரைச் சேகரித்துப் பயன்படுத்துதல் குறித்த விரிவான கையேடு வீடு மற்றும் பொது இடங்களில் மழைநீரைச் சேகரித்துப் பயன்படுத்துதல் குறித்த விரிவான கையேடு
நிகழ்த்துக்கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா நிகழ்த்துக்கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா
கருத்துகள்
13-Dec-2018 10:58:04 பாரதிராஜ்.s said : Report Abuse
ஜாதி வெறியர்கள் என்று நாம் மற்றவர்களை குறை சொல்லுவதோடமல் நாம் நம் வீட்டில் இருக்கிற தங்கச்சி,அக்கா காதல் செய்தால் எதிர்க்கிறோம் இதற்கு ஜாதியும் ஒரு காரணமே ஆகும். பெண் பிள்ளை வீட்டில் அந்த பெண் தன் காதலை வெளிப்படுத்த எவ்வளவு சிரம படுகிறாள் என்று அதை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.ஒரு ஆண் மகன் காதல் செய்தால் எந்த தவறும் இலை ஆனால் ஒரு பெண் பிள்ளை தவறு செய்தால் ஜாதி என்கிற ஓன்று இதற்கு தடையாக இருக்கிறது. சமீபத்தில் சில மாதங்களுக்கு முன்பு உடுமலைப்பேட்டை நடந்த கொடூரம் பற்றி நான் மிகவும் வறுத்த மடைகிறேன்..
 
22-Oct-2016 00:53:38 Megaya said : Report Abuse
Appa thittuvaaru, amma kovichippanga, annan anni varamaatanga, mama athai, sondhakaranga pesamaatanga, nu pona thalaimurai kadapudicha muttal thanatha naamalum kadapudikkurom. Athu namakulla ooripoidudhu. Apram adhey vishathai (jathi) namma adutha thalaimurai la vethachittu poidrom. Jathi oliyama irukkuradhukku idhaan kaaranam. Un thalaimurai la nee thalarthina, aduthadula adhu maranchidum, aduthadula athu olinchigum. Matram unkitta irunthu thaan thodanganum.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.