LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

கயல் - திரைவிமர்சனம் !!

நடிகர், நடிகைகள்

சந்திரன் - ஆரோன்

ஆனந்தி - கயல்விழி

வின்சன்ட் - சாக்ரடீஸ்

பாடல்கள்    -  யுகபாரதி

இசை     -      D. இமான்                               

ஒளிப்பதிவு   -   V.மகேந்திரன்  

தயாரிப்பு     -   P.மதன்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் -  பிரபுசாலமன்                                                     


அரை வருடம் வேலை, அரை வருடம் ஊரைச் சுற்றுவது என ஜாலியாக திரியும், ஹீரோ ஆரோனும்(சந்திரன்), அவரது நண்பர் சாக்ரடிஸும், ஒரு சந்தர்ப்பத்தில் எதிர்பாராத விதமாக ஊரைவிட்டு ஓடி வரும் காதல் ஜோடியை சந்திக்கின்றனர்.

அவர்களின் குடும்ப பேக்ரவுன்ட் எதுவும் தெரியாமல் அவர்களுக்கு உதவி செய்யப்போய், பெண்ணின் குடும்பத்தினரிடம் வசமாக மாட்டிக்கொள்கின்றனர்.

ஓடி போன பெண்ணிற்கு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. தங்களிடம் மாட்டிய ஆரோனும், சாக்ரடிஸும் பெண்ணை கடத்திய கும்பலைச் சேர்ந்தவர்கள் என நினைத்து அவர்களைப் பற்றிய தகவல்களை பெற கட்டி வைத்து அடிக்கிறது அந்த சாதி வெறிப்பிடித்த கும்பல்.

ஓடி போனவர்களுக்கும், தங்களுக்கும் எந்த தொடர்புமில்லை என அவர்கள் கெஞ்சியும் அந்தக் கும்பல் நம்ப மறுக்கிறது. அவ்விருவரிடமும் உண்மையை வரவழைப்பதற்காக அவர்கள் வீட்டில் வேலை செய்யும் கயல் என்கிற பெண்ணை தூதாக அனுப்புகிறார்கள்.

இந்நிலையில், நம்ம ஹீரோ ஆரோனுக்கு, ஹீரோயின் கயலைப் பார்த்ததும் காதல் வருகிறது. பெண்ணைக் காணாமல் வெறியில் திரியும் அந்தக் கும்பலின் முன்பாகவே கயலை காதலிப்பதாக சொல்கிறான் ஆரோன்.

ஏற்கனவே சாதி வெறியினால் கொலைவெறியில் திரியும் இருப்பவர்களுக்கு இது இன்னும் ஆத்திரமூட்ட, அவனை கொலை செய்யும் முடிவுக்கு வருகிறார்கள். அந்நிலையில் ஓடிப்போன பெண் திரும்பக்கிடைக்க, அவனுக்கு உயிர்பிச்சைக் கொடுத்து அங்கிருந்து விரட்டி விடுகிறார்கள்.

இந்நிலையில் ஊரார், முன்னிலையில், தன்னைக் காதலிப்பதாக சொன்ன ஆரோன் மீது கயல் மனதில் காதல் முளைக்கிறது. காதல் கிறுக்கில் திரியும், கயலிடம் காதலனை தேடிச்செல்லுமாறு அவளது பாட்டி யோசனை சொல்ல, காதலனைத் தேடிப்புறப்படுகிறாள் கயல்.

கயல் தன்னைத்தான் தேடிக்கொண்டிருக்கிறாள் என்பதைப் பிறகு தெரிந்து கொண்ட ஆரோனும் மறுபுறம் கயலைத் தேடுகிறார். இறுதியில் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா..? என்பதே கயல் படத்தின் மீதிக்கதை.

ஹீரோவாக வரும் சந்திரனின் நடிப்பு சிறப்பாக இருந்தாலும், ஹீரோயின் ஆனந்தியின் நடிப்புடன் ஒப்பிடும் போது, கொஞ்சம் குறைவு என்று தான் சொல்ல வேண்டும் ஏனென்றால் அந்த அளவுக்கு கிராமத்து பெண்ணாக படத்தில் அசத்தி இருக்கிறார் ஆனந்தி. சாக்ரடிசாக வரும் நண்பர் செய்யும் காமெடி... ரசிகர்களை சிரிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறது.

சுனாமியை தத்ரூபமாக காட்டும் கடைசி 15 நிமிட காட்சிகள் தான் படத்தின் பலம் என்று சொல்லலாம்.

இமானின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் நன்றாக வந்திருக்கிறது.

மொத்தத்தில் கயல்... பார்க்கலாம்...

by Swathi   on 25 Dec 2014  1 Comments
Tags: கயல்   Kayal                 
 தொடர்புடையவை-Related Articles
கயல் - திரைவிமர்சனம் !! கயல் - திரைவிமர்சனம் !!
கிடைத்தது யு சர்டிபிகேட் !! கிறிஸ்துமஸ் அன்று வெளியாகிறது கயல் !! கிடைத்தது யு சர்டிபிகேட் !! கிறிஸ்துமஸ் அன்று வெளியாகிறது கயல் !!
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் விசாரணை !! வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் விசாரணை !!
பிரபு சாலமன் இயக்கும் கயல் !! பிரபு சாலமன் இயக்கும் கயல் !!
கருத்துகள்
30-Dec-2014 06:35:22 vijay said : Report Abuse
முதல் 20 நிமிடங்களை கொன்டு சென்ற பாதை.இல் இஈருந்து விலகி விட்டது கதை. .
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.