LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus  youtube 
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF

கீழ்க்கணக்கு - நூல்நாற்பது தெரியுமா?

கீழ்க்கணக்கு - நூல்நாற்பது தெரியுமா?


இணைய நண்பர்களுக்கு வணக்கம். 
சில நாட்களாகவே என்னுடைய பதிவுகளில் சிறுகதைகளும், சமூகப் பார்வை பற்றிய பதிவுகளும் அதிகம் இடம்பெற்றிருந்தன. இவ்வழக்கத்திற்கு மாறாக சங்கத்தமிழின் சுவையை இணைய நண்பர்களுடன் பகிரலாம் எனத் தோன்றியது, அதன் பொருட்டு எழுந்ததே இப்பதிவு - ``நூல் நாற்பது தெரியுமா?’’.

நம்மில் பெரும்பாலும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைப் பற்றி அறிந்திருப்போம். அதில் முதல் நான்கு நூல்களைப் பற்றி இங்கு காண்போம்.

1).இன்னா நாற்பது               

2).இனியவை நாற்பது               

3).கார் நாற்பது               

4).களவழி நாற்பது


இந்நான்கு நூல்களுக்குமிடையில் உள்ள ஒற்றுமை யாதெனில், இந்நான்கும் நாற்பது பாடல்/செய்யுள்களைக் கொண்ட தொகுப்பு ஆகும்.  

(நூல்நாற்பதில் முதலில் வருவது `இன்னா`, ஏன் கார் நாற்பதையோ அல்லது களவழி நாற்பதையோ முதலில் வைக்கவில்லை?)உள்ளடக்கம் ஆசிரியர்
இன்னா நாற்பது அறம் பற்றியது துன்பந் தரும் நிகழ்ச்சிகளைக் கூறுவது கபில தேவர்
இனியவை நாற்பது அறம் பற்றியது இன்பந் தரும் நிகழ்ச்சிகளைக் கூறுவது பூதஞ் சேந்தனார்
கார் நாற்பது அகம் கார் காலத்தின் தோற்றம் பற்றிக் கூறுவது கண்ணங்கூத்தனார்
களவழி நாற்பது புறம் போர்க்களம் பற்றிக் கூறுவது பொய்கையார்

   
இந்நூட்களில் குறிப்பிட்டுள்ள பாடல்களை எடுத்துக்காட்டுடன் இங்குப் பார்ப்போம்.              

1) இன்னா நாற்பது – பாடல் மூன்று

``கொடுங் கோல் மற மன்னர் கீழ் வாழ்தல் இன்னா; நெடுநீர்ப் புணை இன்றி நீந்துதல் இன்னா; கடு மொழியாளர் தொடர்பு இன்னா; இன்னா, தடுமாறி வாழ்தல் உயிர்க்கு’’
 

விளக்கம்:
கொடுங்கோல் அரசனது கீழ் வாழ்தல் துன்பமாம் தெப்பம் இல்லாமல் பெரிய ஆற்றினைக் கடந்து செல்லுதல் துன்பமாம் வன்சொல் கூறுவோரது தொடர்பு துன்பமாம் உயிர்கள் மனம் தடுமாறி வாழ்தல் துன்பமாம்.

2)  இனியவை நாற்பது – பாடல் ஒன்று

பிச்சை புக்குஆயினும் கற்றல் மிக இனிதே; நல் சபையில் கைக்கொடுத்தல் சாலவும் முன் இனிதே; முத்து ஏர் முறுவலார் சொல் இனிது; ஆங்கு இனிதே, தெற்றவும் மேலாயார்ச் சேர்வு’’

விளக்கம்:
பிச்சையெடுத்தாவது கற்பது இனிது அப்படி கற்ற கல்வி நல்ல சபையில் உதவுவது மிக இனிது முத்தையொக்கும் மகளிரது வாய்ச்சொல் இனிது அதுபோல பெரியோர்களைத் துணையாகக் கொள்ளுதல் இனிது.

3) கார் நாற்பது – பாடல் ஒன்று


தோழி தலைவிக்குப் பருவம் காட்டி வற்புறுத்தியது.
``பொரு கடல் வண்ணன் புனை மார்பில் தார்போல், திருவில் விலங்கு ஊன்றி, தீம் பெயல் தாழ, 'வருதும்' என மொழிந்தார் வாரார்கொல், வானம் கரு இருந்து ஆலிக்கும் போழ்து?’’

விளக்கம்:

கரையை மோதுங்கடலினது நிறத்தினையுடைய திருமால் மார்பில் அணிந்த பூமாலைபோல, இந்திரவில்லைக் குறுக்காக நிறுத்தி இனிய பெயல் விழா நிற்க வருவேன் என சொல்லிப்போன தலைவர், மேகமானது கருத்து மழை பொழியும் காலத்து வாராரோ?

4) களவழி நாற்பது – பாடல் மூன்று

"ஒழுக்கும் குருதி உழக்கித் தளர்வார்,  இழுக்கும் களிற்றுக் கோடு ஊன்றி எழுவர்- மழைக் குரல் மா முரசின், மல்கு நீர் நாடன் பிழைத்தாரை அட்ட களத்து.’’ 

விளக்கம்:

இடிபோன்ற போர் முரசினை முழங்கி வெற்றி பெற்ற சோழனின் போர்க்களத்தில் வழிந்தோடும் இரத்தத்தைத் தங்கள் நடையால் சேறாக்கிச் சோர்ந்த வீரர்கள் நடக்க முடியாமல் வழுக்கி விழும் போது அருகில் வெட்டுப்பட்டு வீழ்ந்து கிடந்த யானையின் தந்தத்தை ஊன்று கோலாக்கி எழுந்து நடந்தார்கள்.

by varun   on 30 Jul 2016  0 Comments
Tags: Keelkanakku   கீழ்க்கணக்கு   நூல்நாற்பது   Noolnatpathu           
 தொடர்புடையவை-Related Articles
இந்த வார நட்சத்திர பலன்கள் (18 – 03 – 2018 முதல் 24 - 03 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (18 – 03 – 2018 முதல் 24 - 03 – 2018 வரை)
தினம் வாடி துடிக்கிறேன்......! தினம் வாடி துடிக்கிறேன்......!
முன்னாள் துணை குடியரசுத் தலைவருக்கும், தகவல் உரிமைப் போராளி அருணா ராய்க்கும் நேர்மைக்கான காயிதே மில்லத் விருது முன்னாள் துணை குடியரசுத் தலைவருக்கும், தகவல் உரிமைப் போராளி அருணா ராய்க்கும் நேர்மைக்கான காயிதே மில்லத் விருது
வட அமெரிக்காவில் குழந்தைகளுக்கு வட அமெரிக்காவில் குழந்தைகளுக்கு "கதைசொல்லி" குழுமம் மிகப்பெரிய வரவேற்புடன் தொடங்கியது..
செல்வராகவன் - சூர்யா படத்தின் பெயர் என்.ஜி.கே - சேகுவேரா தோற்றத்தில் சூர்யா - தீபாவளிக்கு வெளியாகிறதாம்!! செல்வராகவன் - சூர்யா படத்தின் பெயர் என்.ஜி.கே - சேகுவேரா தோற்றத்தில் சூர்யா - தீபாவளிக்கு வெளியாகிறதாம்!!
இந்த வார நட்சத்திர பலன்கள் (04 – 03 – 2018 முதல் 10 - 03 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (04 – 03 – 2018 முதல் 10 - 03 – 2018 வரை)
ரஜினிக்கு வில்லனாகிறாரா விஜய் சேதுபதி? ரஜினிக்கு வில்லனாகிறாரா விஜய் சேதுபதி?
பால் - தயிர் எதில் கால்சியம் அதிகம்? பால் - தயிர் எதில் கால்சியம் அதிகம்?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.