LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

பேரவை விழாவின் மையப்பொருள் 'கீழடி நம் தாய்மடி'

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக தமிழகத்தில் மிகவும் பண்பட்ட ஒரு நகர நாகரீகம் இருந்ததற்கான சான்றுகள் இதுவரை நம் சங்க இலக்கியங்களில் காணப்பட்டாலும் முதன்முதலாக அதற்கான அறிவியல் அடிப்படையிலான சான்றுகளைக் கொண்டிருக்கும் இடமே கீழடி. மதுரைக்குத் தென்கிழக்கில் 12 கி.மீ தொலைவில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்திருக்கும் சிற்றூரான கீழடியில் 2013 இல் தொடங்கப்பட்ட தொல்லியல் ஆய்வுகள் இந்திய வரலாற்றில் ஒரு முக்கிய முடிச்சை அவிழ்க்கின்றன என்று சொல்லலாம். தமிழகத்தில் முன்பெல்லாம் நடந்த அகழ்வாராய்ச்சிகளில் முதுமக்கள் தாழிகளும், மட்பாண்டங்களும் மட்டுமே கண்டெடுக்கப்பட்டதால் தமிகத்தில் மக்கள் வாழிடங்களுக்கான சான்றுகள் இல்லையென்று சொல்லப்பட்டு வந்தது. தமிழகம் மட்டுமல்ல, தென்னிந்தியாவில் அகழாய்வு நடத்தப்பட்ட எந்த இடத்திலும் மனிதர்கள் வாழ்ந்ததற்கான கட்டிடச்சான்றுகள் கிடைத்ததில்லை. அதனை உடைத்திருக்கிறது கீழடி அகழாய்வு. மேலும் இந்தியாவில் உள்ள கல்வெட்டுகளில் பெரும் பாலானவை தமிழ் மொழியில் எழுதப்பட்டவையென்றாலும் தமிழகத்தில் இதுவரை கண்டறியப்பட்ட கல்வெட்டுகள் எல்லாமே, இந்த மண்ணில் வாழ்ந்த அரசர்களின் பெருமைகளைத் தாங்கிய ஆவணங்களாகவே இருந்துவந்திருக்கிறது. ஆனால், கீழடியில் கிடைத்த பொருட்கள் மட்டுமே மக்களின் வாழ்க்கையைச் சொல்பவையாக இருக்கின்றன என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்....

 

மேலும் விவரங்களுக்கு , விழாவில் கலந்துகொள்ள, அனைத்து அறிவிப்புகளுக்கும்  இணையதளத்தை பார்க்கவும். 


https://fetnaconvention.org/keezhadi/

by Swathi   on 12 Mar 2019  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் தெற்காசியப் படிப்பு மையம்- தமிழ் வகுப்புகள் தொடக்கம் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் தெற்காசியப் படிப்பு மையம்- தமிழ் வகுப்புகள் தொடக்கம்
தொடர்ந்து பயணித்து தமிழ்ப்பணி செய்யும்  முனைவர்.மு.இளங்கோவன் உள்ளிட்ட நால்வருக்கு சிகாகோ மாநாட்டில் விருது.. தொடர்ந்து பயணித்து தமிழ்ப்பணி செய்யும்  முனைவர்.மு.இளங்கோவன் உள்ளிட்ட நால்வருக்கு சிகாகோ மாநாட்டில் விருது..
V.G.சந்தோசம் அவர்கள் இலண்டன் பல்கலைக்கழக வளாகத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மாலையணிவித்தார் V.G.சந்தோசம் அவர்கள் இலண்டன் பல்கலைக்கழக வளாகத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மாலையணிவித்தார்
சிங்கப்பூரில் ”வாசிப்பு மாதம்” சிங்கப்பூரில் ”வாசிப்பு மாதம்”
அமெரிக்க வாழ் தமிழர் தன்  தந்தையின் பெயரில் அறக்கட்டளை தொடங்கி தமிழில் முதல் மதிப்பெண் எடுக்கும்  மாணவர்களுக்கு விருது அமெரிக்க வாழ் தமிழர் தன் தந்தையின் பெயரில் அறக்கட்டளை தொடங்கி தமிழில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு விருது
புதிய பார்வையில் திருக்குறள் - The Ageless Wisdom புதிய பார்வையில் திருக்குறள் - The Ageless Wisdom
சிகாகோவில் நடைபெறும் பெட் னா   மாநாட்டில் தமிழியக்கம் பதிப்பித்த தமிழ் பெயர்களின்   மிகப்பெரிய தொகுப்பான நூலை  தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் வெளியிட்டார்.   சிகாகோவில் நடைபெறும் பெட் னா   மாநாட்டில் தமிழியக்கம் பதிப்பித்த தமிழ் பெயர்களின்   மிகப்பெரிய தொகுப்பான நூலை  தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் வெளியிட்டார்.  
அமெரிக்காவின் சிகாகோ நகரில் 10-வது உலகத் தமிழ் மாநாடு இன்று தொடங்கி  7-ந் தேதி வரை நடக்கிறது அமெரிக்காவின் சிகாகோ நகரில் 10-வது உலகத் தமிழ் மாநாடு இன்று தொடங்கி 7-ந் தேதி வரை நடக்கிறது
கருத்துகள்
15-Mar-2019 05:26:34 வெ தி முருக வினோத் குமார் said : Report Abuse
வணக்கம். சிவகங்கைமாவட்டமான கீழடியில், காணப்படுகின்ற. பழங்கால குடியிருப்புகள், கல் தோன்றி மண் தோன்றாகாலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ்குடி என்பதை உலகிற்கு பறைசாற்றுகின்றது.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.