LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

டெல்லி காவல்துறைக்கு முதல்வர் கெஜ்ரிவால் எச்சரிக்கை !!

அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்காத டெல்லி போலீசார் பற்றி கவர்னரிடம் இன்று முறையிடுவேன் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

 

டெல்லியில் கடந்த சில வருடங்களாக பாலியல் தொடர்பான குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதை தடுக்க டெல்லியில் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் ஆம் ஆத்மி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில் டெல்லி அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் ராக்கி பிர்லா, தனக்கு வந்த வரதட்சணை பலி புகார் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு போலீசுக்கு உத்தரவிட்டார். ஆனால் அந்த உத்தரவை ஏற்க போலீஸ் அதிகாரி மறுத்து விட்டார்.

 

அதேபோல், தெற்கு டெல்லியின் கிர்கி பகுதியில் பாலியல் தொழில் மற்றும் போதை பொருள் விற்பனை, போலீஸ் ஒத்துழைப்புடன் நடப்பதாக வந்த புகாரை தொடர்ந்து அந்த பகுதிக்கு சட்ட அமைச்சர் சோம்நாத் பாரதி நேரடியாக சென்று ஆய்வு நடத்தினார். அப்போது இளம்பெண் ஒருவரிடம் ஒரு போலீஸ்காரர் தவறாக நடந்தபடி தகராறு செய்து கொண்டிருந்தார். அந்த காட்சியை அமைச்சர் சோம்நாத் பாரதி தனது கேமிராவில் பதிவு செய்து கொண்டார். அதன்பின், மக்களிடம் குறை கேட்ட அமைச்சரிடம், சட்டம் ஒழுங்கு பிரச்னையில் போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை என்று பொதுமக்கள் சரமாரியாக குற்றம் சாட்டினர். இந்த விவரங்களை 2 அமைச்சர்களும், முதல்வர் கெஜ்ரிவாலுக்கு கடிதம் மூலம் தெரிவித்தனர்.

 

இந்நிலையில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று நிருபர்களை சந்தித்தார். அப்போது, ''குற்றங்கள் விஷயத்தில் டெல்லி போலீசார் சமரசம் செய்து கொள்கின்றனர். அவர்கள் டெல்லி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தவறி விட்டனர். டெல்லி அமைச்சர்கள் ராக்கி பிர்லா மற்றும் சோம்நாத் பாரதி சுட்டிக்காட்டிய விவகாரங்களில் இரண்டு போலீஸ் நிலைய அதிகாரிகளையும், 2 உதவி கமிஷனர்களையும் இடைநீக்கம் செய்யுமாறு கோரி இருந்தோம். ஆனால், இதுவரை அதை நிறைவேற்றவில்லை. தங்கள் செயல்பாடுகளில் அமைச்சர்கள் தலையிடுவதாக டெல்லி போலீசார் கூறுகிறார்கள். அவர்கள் செயல்படுவதே இல்லையே, பிறகு எப்படி அமைச்சர்கள் தலையிடுவதாக கூற முடியும்?

 

நான் நாளை(வெள்ளிக்கிழமை) காலை கவர்னர் நஜீப் ஜங்கை சந்திக்க உள்ளேன். அப்போது, அவரிடம் இப்பிரச்சினையை கூறுவேன்.  அதன்பிறகும், போலீசாரின் நடவடிக்கையில் முன்னேற்றம் இல்லையென்றால், நானும், டெல்லி மக்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் என்று கடுமையாக எச்சரித்தார்.

by Swathi   on 16 Jan 2014  0 Comments
Tags: Aravind Kejriwal   Delhi Police   Blame   டெல்லி காவல்துறை   அரவிந்த் கெஜ்ரிவால்   எச்சரிக்கை     
 தொடர்புடையவை-Related Articles
இந்திய அரசியல் வரலாற்றில் அழுத்தமாக தன்னை பதிவுசெய்துகொண்ட திரு.அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி தொண்டர்களுக்கும் இதயப்பூர்வமான  வாழ்த்துக்கள்.... இந்திய அரசியல் வரலாற்றில் அழுத்தமாக தன்னை பதிவுசெய்துகொண்ட திரு.அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி தொண்டர்களுக்கும் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்....
பிரதமர் பதவியை நோக்கி அரவிந்த் கெஜ்ரிவால். அதிர்ச்சியில் மோடி...! பிரதமர் பதவியை நோக்கி அரவிந்த் கெஜ்ரிவால். அதிர்ச்சியில் மோடி...!
வீரப்ப மொய்லி, முரளி தியோரா, முகேஷ் அம்பானி மீது வழக்கு பதிவு செய்ய கெஜ்ரிவால் உத்தரவு !! வீரப்ப மொய்லி, முரளி தியோரா, முகேஷ் அம்பானி மீது வழக்கு பதிவு செய்ய கெஜ்ரிவால் உத்தரவு !!
டெல்லி காவல்துறைக்கு முதல்வர் கெஜ்ரிவால் எச்சரிக்கை !! டெல்லி காவல்துறைக்கு முதல்வர் கெஜ்ரிவால் எச்சரிக்கை !!
டெல்லி முதல்வராக சனிக்கிழமை பதவி ஏற்கிறார் கெஜ்ரிவால்! டெல்லி முதல்வராக சனிக்கிழமை பதவி ஏற்கிறார் கெஜ்ரிவால்!
டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: ஷீலா தீட்சித்தை தோற்கடித்தார் கெஜ்ரிவால்! டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: ஷீலா தீட்சித்தை தோற்கடித்தார் கெஜ்ரிவால்!
டெல்லி மக்களுக்கு இலவச குடிநீர் திட்டம் நாளை முதல் அமல்படுத்தப்படும் - அரவிந்த் கெஜ்ரிவால் !! டெல்லி மக்களுக்கு இலவச குடிநீர் திட்டம் நாளை முதல் அமல்படுத்தப்படும் - அரவிந்த் கெஜ்ரிவால் !!
டெல்லி மக்களின் பிரச்சனைகளை தீர்க்க 10 நாளில் முறையான கட்டமைப்பு ஏற்படுத்தப்படும் - அரவிந் கெஜ்ரிவால் !! டெல்லி மக்களின் பிரச்சனைகளை தீர்க்க 10 நாளில் முறையான கட்டமைப்பு ஏற்படுத்தப்படும் - அரவிந் கெஜ்ரிவால் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.