நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனான லீக் ஆட்டத்தில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நான்கு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மொகாலி, பஞ்சாப் கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீசியது. முதலில் பேட்டிங் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மன்பிரீத் கோனியின் ருத்திர தாண்டவத்தால் நிர்ணயிக்கப்பட்ட இருபது ஓவர்களில் 157 ரன் குவித்தது. இதனை அடுத்து விளையாடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட இருபது ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 153 ரன் எடுத்து 4 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
|