LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    சிந்தனைகள் Print Friendly and PDF
- கிருபானந்த வாரியார்

கிருபானந்த வாரியாரின் ஆன்மிக சிந்தனைகள்

எதனையும் பலமுறை மனதில் சிந்தனை செய்யுங்கள். ஒருவர் போன வழியில் சிந்திக்காமலேயே பின்பற்றிச் செல்வது மூடத்தனம்.

எங்கும் நிறைந்த இறைவனை எளிதாகக் கிடைக்கும் பூவினாலும், நீராலும் நாம் வழிபாடு செய்ய வேண்டும். அன்பும், ஆசாரமும் இரண்டு கண்கள் போன்றவை.

சுகமாக வாழும் காலத்திலேயே துக்கத்தையும் பழகிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் வாழ்வும் தாழ்வும் மனிதனுக்கு மாறி மாறி வரும்.

நாவின் சுவைக்காக நல்லுணவைத் தேடி அலையாதீர்கள். இறையருளால் அன்றாடம் கிடைக்கும் எளிய உணவையும் உண்டு திருப்தி கொள்ளுங்கள்.

தேனீயைப் போலவும், எறும்பைப் போலவும் உழைத்து உண்ணுங்கள். அது உங்களுக்கு அமைதியையும், அன்பையும் தரும்.

இளமையில் வளையாவிட்டால் முதுமையில் அல்லல்படவேண்டி வரும். இளமைப்பருவம் உழைப்பதற்கு ஏற்றது. அதன் அருமையை உணர்ந்து பணியாற்றுங்கள்.

உடம்பில் எத்தனையோ உறுப்புக்கள் இருந்தாலும் கண் மிக முக்கியமானது. கண்ணுக்கு அணிகலன் தாட்சண்யம். கண்ணைப் பார்த்தாலே ஒருவனின் குணத்தை அறிந்து கொள்ளலாம்.

தன்னுடைய புத்தகம், பெண், பணம் இவை பிறரிடம் கொடுத்தால் போனது போனதுதான். ஒருவேளை திரும்பி வருவதாயின் புத்தகம் கிழிந்தும், பெண் மாசுபடிந்தும், பணம் அளவு குறைந்தும்தான் வரும்.

முதலை வாய்ப்பட்ட மணியை எடுத்து விடலாம். அலைபாயும் கடலையும் அப்புறமாகத் தாண்டிடலாம். பாம்பையும் மாலையாக கழுத்தில் அணிந்திடலாம். ஆனால் மூடனைத் திருத்த யாராலும் இயலாது.

ஆறு தரம் பூமியை வலம் வருதலும், பதினாராயிரம் தடவை காசியில் குளித்தலும், பலநூறு தடவை சேது ஸ்நானம் செய்தாலும் ஆகிய இவற்றால் கிடைக்கும் புண்ணியம், தாயைப் பக்தி பூர்வமாக ஒரு தரம் வணங்கினால் கிடைக்கும்.

விளக்கு நமக்கு எத்தனை வண்ணமாக உதவி செய்கிறது என்பதை நாம் அது இல்லாதபோதுதான் உணர முடியும். தாய் நம்மை எப்படியெல்லாம் வளர்க்கின்றாள் என்பதை தாய் இல்லாத போதுதானே உணர முடிகிறது.

பறவைகட்கு இரு சிறகுகள்; மனிதனுக்கு இரு கால்கள், இரு கைகள், இரு கண்கள். புகை வண்டிக்கு தண்டவாளங்கள் இருப்பதுபோல் மாணவர்களுக்கு இரு குணங்கள் இருக்க வேண்டும். ஒன்று அடக்கம், மற்றொன்று குருபக்தி. இந்த இரு குணங்கள் உள்ள மாணவன்தான் முன்னேற்றமடைவான்.

இன்பமான சொல்லும், சிரித்த முகமும், பார்வையும், நண்பர்களின் சொல்லைக் கேட்க வேண்டுமென்ற எண்ணமும், அவர்களைக் கண்டவுடன் சந்தோஷப்படுதலும் ஆசையில்லாதவனின் லட்சணங்களாகும்.

தீப்பந்தத்தைக் கீழ்நோக்கிப் பிடித்தாலும் அதன் ஜுவாலை மேல்நோக்கி எழுவதுபோல் உயர்ந்த குணத்தை கீழ்ப்படுத்த சொப்பனத்திலும் முடியாது

by Swathi   on 02 Mar 2013  0 Comments
Tags: ஆன்மீக சிந்தனைகள்   கிருபானந்த வாரியார்   Spirituality Quotes              
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.