LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

கோச்சடையான் அறிந்ததும் !! அறியாததும் !! ஒரு சிறப்பு முன்னோட்டம் !!

தனது இரண்டாவது மகள் சவுந்தர்யா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடித்துள்ள படம் தான் கோச்சடையான். இந்த படத்தில் ரஜினியுடன் தீபிகா படுகோன், சரத்குமார், நாசர், ஷோபனா, ஆதி, ருக்மணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். 


மீடியா ஒன் குளோபல் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை ஈரோஸ் இன்டர்நேஷனல் மீடியா நிறுவனம் நாளை உலகம் முழுவதும் வெளியிடுகிறது. இந்நிலையில் கோச்சடையான் படம் குறித்த லேட்டஸ்ட் சுவையான விசயங்களை இப்போது பார்ப்போமா.....


கோச்சடையான் பெயர்க்காரணம் :


கோச்சடையான் என்பது பாண்டிய மன்னனின் பெயர் என்பது ஒருபுறமிருந்தாலும், படத்தை இயக்கும் சௌந்தர்யா அஸ்வின், இந்தப் பெயர் சிவபெருமானைக் குறிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் ராணாவுக்கு முந்தைய பாகம்தான் கோச்சடையான் என்றும் சௌந்தர்யா கூறியுள்ளார்


10 மொழிகளில் வெளியீடு :


சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் படம் தமிழ், இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் உள்பட 10 மொழிகளில் நேரடியாக வெளியாகிறது. 


இந்திய நட்சத்திரம் ஒருவரின் படங்கள் இத்தனை மொழிகளில் நேரடியாக வெளியாவது இதுவே முதல் முறை.


இந்தப் படம் தமிழ், இந்தி, தெலுங்கு, போஜ்புரி, மராத்தி, பெங்காலி, பஞ்சாபி, ஜப்பானிய மற்றும் ப்ரெஞ்சு மொழிகளில் வெளியாகிறது. ஆங்கிலத்தில் நேரடியாக இந்தப் படம் வெளியாகிறது. தமிழ், இந்தி, ஆங்கிலம், தெலுங்கு மொழிகளில் ரஜினியே டப்பிங் பேசியுள்ளார். ஜப்பானிய மொழியில் அவர் முதலில் டப் செய்வதாக இருந்து, பின்னர் வேறு நபர் மூலம் டப் செய்யப்பட்டுள்ளது.


இசை விமர்சனம் :


கோச்சடையான் படத்தில் மொத்தம் 9 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ஏ.ஆர். ரஹ்மான். ஒரு பாடலை வாலி எழுதியிருக்கிறார். மற்ற அனைத்துப் பாடல்களையும் வைரமுத்து எழுதியிருக்கிறார்.


எங்கே போகுதோ வானம் என்று துவங்கும் பாடலை எஸ்பி பாலசுப்பிரமணியம் பாடியிருக்கிறார். ஏற்கனவே இணையதளத்தில் வெளியாகி செம ஹிட்டடித்த பாடல் இது. பொதுவாகவே ரஜினி படங்களில் ஒரு தன்னம்பிக்கை ஊட்டும் பாடல் ஒன்று இடம்பெறுவது வழக்கம்.  இந்தப் பாடலும் ஒரு தன்னம்பிக்கை பாடலாகவே இருக்கிறது. 


ரஜினி படத்தில் ஓப்பனிங் பாடலை எஸ்பிபி பாடுவார் என்பதால் இந்தப் பாடல் படத்தின் முதல் பாடலாகவும் கூட இருக்கலாம்.


மெதுவாகத்தான் என்ற பாடலை எஸ்பி பாலசுப்ரமணியம் சாதனா சர்கம் இணைந்து பாடியிருக்கிறார்கள். இந்தப் பாடலை எழுதியிருக்கிறார் வாலி. 


மாற்றம் ஒன்றுதான் மாறாதது பாடலை ஹரிசரண் பாடியிருக்கிறார். இந்தப் பாடலின் துவக்கத்திலும் இடையிடையே ரஜினி அருமையான வசனங்களை பேசியிருக்கிறார். அத்தனையையும் எழுதியிருப்பவர் வைரமுத்துதான். வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய தத்துவங்கள் அவை.


காதல் கணவா உந்தன் கரம்விட மாட்டேன் சத்தியம் சத்தியம் இது சத்தியம் என்று துவங்கும் மணப் பெண்ணின் சத்தியம் பாடலை லதா ரஜினிகாந்த் பாடியிருக்கிறார். மனைவியாக இருந்து ஒரு பெண் எப்படியெல்லாம் தன் கணவனுடன் வாழவேண்டும் என்றும் ஆசைப்படுகிறாள் எப்படியெல்லாம் வாழ்க்கையை நகர்த்துவாள் என்பதைச் சொல்வதாக அமைந்திருக்கிருக்கிறது இந்தப் பாடல். கல்யாண வீடுகளில் இந்தப் பாடலுக்கு தனி இடம் இனிமேல் எப்போதும் உண்டு. 


கட்டிலறையிலும் சமையலறையிலும் எப்போதும் புதுமைகள் செய்வேன் உன் கனவுகள் நிஜமாக எனையே தருவேன் என பாடலின் ஒவ்வொரு வரியும் மணப் பெண்ணை மனதில் வைத்தே இழைத்து இழைத்து எழுதியிருக்கிறார் வைரமுத்து.


இதயம் பாடலை சின்மயியும் ஸ்ரீனிவாசும் சேர்ந்து பாடியிருக்கிறார்கள். கோச்சடையான் எங்கள் கோச்சடையான் பாடல் பன்னிரு திருமுறைகளில் ஐந்தாம் திருமுறையில் வரும் பாடல் வரிகளான மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் என்னும் வரிகளை இணைத்து இந்த பாடல் எழுதப்பட்டுள்ளது. கோச்சடையானின் பெருமைகளை சொல்வதாக அமைந்திருக்கிறது இந்த பாடல்.


மணமகனின் சத்தியம் கண்ணே கனியே உனை கைவிட மாட்டேன் பாடலை ஹரிசரண் பாடியிருக்கிறார். கணவன் மனைவிக்கு சத்தியம் செய்து கொடுப்பது போன்ற பாடல் இது. அர்த்த ஜாம திருடன் போல அதிர்ந்து பேசேன், காமம் தீரும் பொழிதிலும் எந்தன் காதல் தீரேன் என பாடல் முழுவதும் வார்த்தைகளில் விளையாடியிருக்கிறார் வைரமுத்து.


ஆகாய மேகங்கள் பொழியும் போது என்று தொடங்கும் கர்ம வீரன் பாடலை ரஹ்மானும் ரைகானாவும் பாடியிருக்கிறார்கள். தோல்வியினால் துவண்டு விடாதே, வெற்றிகளாலே வெளி கொள்ளாதே என இந்தப் பாடல் முழுவதும் அர்த்தமுள்ள தன்னம்பிக்கை வரிகள் பரவிக் கிடக்கின்றன.


கதை :


கோச்சடையான் தென் தமிழகத்தில் சங்க காலத்தை ஒட்டி ஆண்ட ஒரு தமிழ் மன்னனின் வீரமிக்க படைத் தளபதி. அவரது மகன் ராணா. அப்பாவுக்கு வீரம் மட்டுமே சொத்து என்றால் மகனுக்கு வீரமும், நடனமும் சொத்து. 


முதல் பகுதியில் கோச்சடையானின் ஆதிக்கம் இருக்கும். ஆர்வ கோளாறினால் மகன் ராணா சில வீரதீர காரியங்களில் இறங்கி எதிரிகளிடம் மாட்டிக்கொள்ள அவரை தனி ஆளாக எதிரியின் கோட்டைக்குள் சென்று கோச்சடையான் மீட்கும் காட்சியில் அனல் பறக்கும். எதிரிகளால் தந்தை கோச்சடையான் கொல்லப்பட தளபதி பொறுப்புக்கு வரும் ராணா ஆடும் ஆக்ஷன் ஆட்டம்தான் படத்தின் இரண்டாம் பகுதி.


கோச்சடையான் ஜோடியாக ஷோபனா, ராணா ஜோடியாக தீபிகா படுகோனே. ராணாவின் டான்ஸ் மாஸ்டராக ருக்மணி. கோச்சடையானின் நண்பராக சரத்குமார், ராணாவின் நண்பராக ஆதி. வில்லன் ஜாக்கி ஷெராப். ராஜகுரு நாசர்.


ஷோபனாவுக்கும், ராணாவுக்கும் நடக்கும் போட்டி நடனம் அரங்கத்தை அதிர வைக்கும்.


படத்தின் ஆடை வடிவமைப்பு பொறுப்பை தேசிய விருது பெற்ற நீத்தாலுல்லு செய்திருக்கிறார். தமிழ் நாட்டின் பண்டைய ஆடைகளை கோவில் சிலைகளில் இருந்து படியெடுத்து வரைந்து கொடுத்திருக்கிறார். அதனையே பயன்படுத்தியிருக்கிறார்கள்.


படம் ஓடும் நேரம் 125 நிமிடங்கள். இண்டர்வெல் கிடையாது.


சிறந்த மோஷன் கேப்சர் படமாக உள்ளதாக பாராட்டு :


ஹாலிவுட்டில் வெளியாகும் மோஷன் கேப்சர் படங்களை விட எவ்வளவோ மேம்பட்டதாக உள்ளது ரஜினி நடித்துள்ள கோச்சடையான் படம், என்று பாராட்டியுள்ளார் ஹாலிவுட்டின் பிரபல மோஷன் கேப்சரிங் நிறுவனத் தலைவர் பில் ஸ்டில்கோ.


6000 திரையரங்குகளில் வெளியீடு :


ஹாலிவுட் படங்களுக்கு அடுத்து, அதிக அரங்குகளில் வெளியாகும் படம் கோச்சடையான்தான்! 


ரஜினியின் எந்திரன் 3300 அரங்குகளில் வெளியானதாக அறிவிக்கப்பட்டது. அதற்குப் பின் வந்த சில பாலிவுட் படங்கள் - க்ரிஷ் 3, தூம் 3- கிட்டத்தட்ட 4000 அரங்குகளில் வெளியானதாக அறிவிக்கப்பட்டன. இப்போது அத்தனை படங்களின் சாதனைகளையும் ஒன்றுமில்லாமல் செய்யும் விதத்தில் ரஜினியின் கோச்சடையான் 6000 ப்ளஸ் திரையரங்குகளில் வெளியாகவிருப்பதாக ஈராஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 


நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் இந்தப் படத்தின் ஆங்கில மொழியாக்கம் வெளியாகவிருக்கிறது. மற்ற மொழிகளில் தயாராகியிருக்கும் கோச்சடையானும் வெளியாகிறது. தென்கிழக்காசிய நாடுகளான ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், சீனா, கொரியாவில் அதிக அரங்குகளில் கோச்சடையான் வெளியாகவிருக்கிறது. 


உலகம் முழுக்க சுமார் 6000 தியேட்டர்களில் கோச்சடையான் வெளியாக இருக்கிறது. 


இதில் தமிழகத்தில் மட்டும் சுமார் 450 தியேட்டர்களிலும், கேரளாவில் 140 தியேட்டர்களிலும், ஆந்திராவில் 650 தியேட்டர்களிலும், கர்நாடகாவில் 300 தியேட்டர்களிலும், போஜ்புரி, பஞ்சாபி, இந்தி, குஜராத்தி உள்ளிட்ட மொழி பேசும் மாநிலங்களில் 1200 தியேட்டர்களிலும் ஆக மொத்தம் இந்தியாவில் மட்டும் 3000 தியேட்டர்களிலும், வெளிநாடுகளில் 3000 தியேட்டர்களிலும் கோச்சடையான் ரிலீஸ் ஆக இருக்கிறது. நேற்றே வெளிநாடுகளுக்கான தேவையான 3000 பிரிண்ட் காப்பிகளும் அனுப்பி வைக்கப்பட்டு விட்டன. 


தமிழகம் மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களில் பிரிண்ட் காப்பிகள் அனுப்பி வைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

by Swathi   on 22 May 2014  0 Comments
Tags: Kochadaiyaan   Kochadaiyaan Review   கோச்சடையான்   கோச்சடையான் விமர்சனம்           
 தொடர்புடையவை-Related Articles
ஆஸ்கார் ரேஸில் ஏ.ஆர்.ரஹ்மானின் மூன்று படங்கள்.. கோச்சடையானும் இருக்கிறது !! ஆஸ்கார் ரேஸில் ஏ.ஆர்.ரஹ்மானின் மூன்று படங்கள்.. கோச்சடையானும் இருக்கிறது !!
உலக பட விழாக்களில் கோச்சடையான் திரையிடப்படுகிறது !! உலக பட விழாக்களில் கோச்சடையான் திரையிடப்படுகிறது !!
கோச்சடையான் 2ம் பாகம் பற்றி தயாரிப்பாளர் பதில்!! கோச்சடையான் 2ம் பாகம் பற்றி தயாரிப்பாளர் பதில்!!
கோச்சடையான் வெற்றி படமா !! தோல்வி படமா !! தயாரிப்பாளரின் பளிச் பதில்கள் !! கோச்சடையான் வெற்றி படமா !! தோல்வி படமா !! தயாரிப்பாளரின் பளிச் பதில்கள் !!
கோச்சடையான்-2 சௌந்தர்யாவின் சீக்ரட் பிளான் !! கோச்சடையான்-2 சௌந்தர்யாவின் சீக்ரட் பிளான் !!
கோச்சடையான் ஹாலிவுட் தரத்தில் இல்லை - சொல்கிறார் சிம்பு !! கோச்சடையான் ஹாலிவுட் தரத்தில் இல்லை - சொல்கிறார் சிம்பு !!
கோச்சடையான் - திரை விமர்சனம் !! கோச்சடையான் - திரை விமர்சனம் !!
கோச்சடையான் அறிந்ததும் !! அறியாததும் !! ஒரு சிறப்பு முன்னோட்டம் !! கோச்சடையான் அறிந்ததும் !! அறியாததும் !! ஒரு சிறப்பு முன்னோட்டம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.