|
||||||||
கொள்ளு துவையல் ( horse gram thuvaiyal) |
||||||||
தேவையானவை:- கொள்ளு - கால் கப் மிளகாய் வத்தல் - 3 உளுந்து - 2 டீஸ்பூன் எண்ணெய் - 2 டீஸ்பூன் தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன் புளி - சிறு துண்டு பூண்டு - 2 பல் தேவையான உப்பு செய்முறை:- 1.கால் கப் கொள்ளை எடுத்து கொண்டு கடாயை சூடாக்கி அதில் கொள்ளைப் போட்டு நன்றாய பொரிஞ்சு மொறுமொறுப்பாகி, வாசனை வர்ற வரைக்கும் வறுத்து கொள்ள வேண்டும். 2.அதே கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெயை காய்ஞ்சதும் மிளகாய் வத்தல், உளுந்து ரெண்டையும் போட்டு வறுத்தெடுத்துக் கொள்ளவும். 3.பிறகு வறுத்த மிளகாய், உளுந்து, கொள்ளு எல்லாம் சூடு ஆறியதும், தேங்காய்த் துருவல், சிறு துண்டு புளி, பூண்டு, தேவையான உப்பு எல்லாவற்றையும் சேர்த்துக் கொஞ்சமா தண்ணிவிட்டுக் கரகரப்பா அரைக்கவும். 4.இந்த கொள்ளு, துவையலா மாறும்போது ருசி அருமையாக இருக்கும். |
||||||||
by vani on 06 Jun 2012 1 Comments | ||||||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|