LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- சொற்களின் பொருள் அறிவோம்

கொள்வனை கொடுப்பினை

ஏவல்பொருள் தரும் வினைச்சொற்களுடன் சுமார் இருபத்திரண்டு விகுதிகள் (பொருளற்ற ஓரெழுத்து ஈரெழுத்து அசைகள், சொல்லின் இறுதியில் இணைபவை அவை) சேர்ந்து தொழிற்பெயரை உருவாக்குகின்றன. அதன்படி

கொள் + வு = கொள்வு
கொடு + பு = கொடுப்பு

கொள்வும் கொடுப்பும் தொழிற்பெயராகிப் பெயர் சுட்டுகின்றன. இச்சொற்கள் மேலும் ’அனை’ என்ற விகுதியைப் பெற்று இன்னும் அழகாகின்றன.

கொள் + வு + அனை = கொள்வனை
கொடுப்பு + வு + அனை = கொடுப்பனை

கொடுப்பினையா, கொடுப்பனையா ?

கொடுப்பினை என்று எழுதப்படும் சொல் பாமர மக்கள் பேச்சுத் தமிழில் ‘கொடுப்பனை’ என்று உச்சரிக்கக் கேட்டிருப்பீர்கள். ‘அவனுக்குக் கொடுப்பன இல்லாமப் போச்சு’ என்பர். எழுத்தில் பிழையாகவும் பேச்சில் பிழையின்றியும் பயன்படுத்தப்படும் சொல் என்பதற்குக் கொடுப்பனை நல்ல எடுத்துக்காட்டு.

இது சரிதானா என்று பார்க்க இனமான மற்றொரு சொல்லை உரசிப்பார்த்தேன். படிப்பனை. படி+பு+அனை = படிப்பனை. நடைமுறையில் நாம் ‘படிப்பினை’ என்று எழுதுவது தவறு. படிப்பனை என்பதுதான் சரி. அகராதிகள் பலவற்றிலும் ‘படிப்பனை’ என்ற சொல் காணப்படுகிறது.

 

- கவிஞர் மகுடேசுவரன்

by Swathi   on 18 Dec 2014  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தொலைக்காட்சிகள் வருவதற்கு முன்பு கிராமங்களின் பொழுதுபோக்குகளாக எவை இருந்தன? தொலைக்காட்சிகள் வருவதற்கு முன்பு கிராமங்களின் பொழுதுபோக்குகளாக எவை இருந்தன?
தமிழ்மொழியை தொய்வான துறைகளில்  மீட்டெடுக்க தமிழ்மொழியை தொய்வான துறைகளில் மீட்டெடுக்க "தமிழியக்கம்" மிகப்பெரிய அளவில் தொடங்கப்பட்டது..
தமிழ் வயிற்று மொழி அல்ல, வாழ்க்கை மொழி!!.. தமிழ் வயிற்று மொழி அல்ல, வாழ்க்கை மொழி!!..
இலக்கணப் பிழை எது? இலக்கணப் பிழை எது?
இந்திய மொழிகளில்  தமிழில் கல்வெட்டுகள் எண்ணிக்கை  அதிகம் -தொல்லியல் துறை தகவல். இந்திய மொழிகளில் தமிழில் கல்வெட்டுகள் எண்ணிக்கை அதிகம் -தொல்லியல் துறை தகவல்.
தாட்டா (Tata) குழுமங்களின் தலைவர்  திரு நடராசன் சந்திரசேகர் தமிழ்வழி கல்வி கற்றவர்.. தாட்டா (Tata) குழுமங்களின் தலைவர் திரு நடராசன் சந்திரசேகர் தமிழ்வழி கல்வி கற்றவர்..
திரையிசைப் பாடல்களில் இலக்கணம் திரையிசைப் பாடல்களில் இலக்கணம்
தமிழை வளர்த்த இவர்களை நினையுங்கள்........ தமிழை வளர்த்த இவர்களை நினையுங்கள்........
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.