LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- அவ்வையார் நூல்கள்

கொன்றை வேந்தன்

 

கடவுள் வாழ்த்து
கொன்றை வேந்தன் செல்வன் அடியினை
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே.
நூல்
உயிர் வருக்கம்
1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று
3. இல் அறம் அல்லது நல் அறம் அன்று
4. ஈயார் தேட்டை தீயார் கொள்வர்
5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு
6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்
7. எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்
8. ஏவா மக்கள் மூவா மருந்து
9. ஐயம் புகினும் செய்வன செய்
10. ஒருவனைப் பற்றி ஓரகத்து இரு
11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்
12. ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு
13. அஃகமும் காசும் சிக்கெனத் தேடு
ககர வருக்கம்
14. கற்பு எனப் படுவது சொல் திறம்பாமை
15. காவல் தானே பாவையர்க்கு அழகு
16. கிட்டாதாயின் வெட்டென மற
17. கீழோர் ஆயினும் தாழ உரை
18. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை
19. கூர் அம்பு ஆயினும் வீரியம் பேசேல்
20. கெடுவது செய்யின் விடுவது கருமம்
21. கேட்டில் உறுதி கூட்டும் உடைமை
22. கைப் பொருள் தன்னில் மெய்ப் பொருள் கல்வி
23. கொற்றவன் அறிதல் உற்ற இடத்து உதவி
24. கோள் செவிக் குறளை காற்றுடன் நெருப்பு
25. கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை
சகர வருக்கம்
26. சந்ததிக்கு அழகு வந்தி செய்யாமை
27. சான்றோர் என்கை ஈன்றோட்கு அழகு
28. சிவத்தைப் பேணில் தவத்திற்கு அழகு
29. சீரைத் தேடின் ஏரைத் தேடு
30. சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்
31. சூதும் வாதும் வேதனை செய்யும்
32. செய்தவம் மறந்தால் கைத்தவம் ஆளும்
33. சேமம் புகினும் யாமத்து உறங்கு
34. சை ஒத்து இருந்தால் ஐயம் இட்டு உண்
35. சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர்
36. சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்
தகர வருக்கம்
37. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
38. தாயிற் சிறந்து ஒரு கோயிலும் இல்லை
39. திரை கடல் ஓடியும் திரவியம் தேடு
40. தீராக் கோபம் போராய் முடியும்
41. துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு
42. தூற்றும் பெண்டிர் கூற்று எனத் தகும்
43. தெய்வம் சீறின் கைதவம் மாளும்
44. தேடாது அழிக்கின் பாடாய் முடியும்
45. தையும் மாசியும் வையகத்து உறங்கு
46. தொழுது ஊண் சுவையின் உழுது ஊண் இனிது
47. தோழனோடும் ஏழைமை பேசேல்
நகர வருக்கம்
48. நல் இணக்கம் அல்லது அல்லல் படுத்தும்
49. நாடு எங்கும் வாழக் கேடு ஒன்றும் இல்லை
50. நிற்கக் கற்றல் சொல் திறம்பாவை
51. நீர் அகம் பொருந்திய ஊர் அகத்திரு
52. நுண்ணிய கருமமும் எண்ணித்துணி
53. நூன் முறை தெரிந்து சீலத்து ஒழுகு
54. நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை
55. நேரா நோன்பு சீர் ஆகாது
56. நைபவர் எனினும் நொய்ய உரையேல்
57. நொய்யவர் என்பவர் வெய்யவர் ஆவர்
58. நோன்பு என்பது கொன்று தின்னாமை
பகர வருக்கம்
59. பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்
60. பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண்
61. பிறன் மனை புகாமை அறம் எனத் தகும்
62. பீரம் பேணில் பாரம் தாங்கும்
63. புலையும் கொலையும் களவும் தவிர்
64. பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம்
65. பெற்றோர்க்கு இல்லை சுற்றமும் சினமும்
66. பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம்
67. பையச் சென்றால் வையம் தாங்கும்
68. பொல்லாங்கு என்பது எல்லாம் தவிர்
69. போனகம் என்பது தான் உழந்து உண்டல்
மகர வருக்கம்
70. மருந்தே ஆயினும் விருந்தோடு உண்
71. மாரி அல்லது காரியம் இல்லை
72. மின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை
73. மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது
74. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
75. மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்
76. மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு
77. மேழிச் செல்வம் கோழை படாது
78. மை விழியார் தம் மனை அகன்று ஒழுகு
79. மொழிவது மறுக்கின் அழிவது கருமம்
80. மோனம் என்பது ஞான வரம்பு
வகர வருக்கம்
81. வளவன் ஆயினும் அளவு அறிந்து அழித்து உண்
82. வானம் சுருங்கில் தானம் சுருங்கும்
83. விருந்து இல்லோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம்
84. வீரன் கேண்மை கூர் அம்பாகும்
85. உரவோர் என்கை இரவாது இருத்தல்
86. ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு
87. வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை
88. வேந்தன் சீரின் ஆம் துணை இல்லை
89. வைகல் தோறும் தெய்வம் தொழு
90. ஒத்த இடத்து நித்திரை கொள்
91. ஓதாதவர்க்கு இல்லை உணர்வோடு ஒழுக்கம்
கொன்றை வேந்தன் முற்றிற்று.

கடவுள் வாழ்த்து

கொன்றை வேந்தன் செல்வன் அடியினைஎன்றும் ஏத்தித் தொழுவோம் யாமே.

நூல்

உயிர் வருக்கம்

1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று3. இல் அறம் அல்லது நல் அறம் அன்று4. ஈயார் தேட்டை தீயார் கொள்வர்5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்7. எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்8. ஏவா மக்கள் மூவா மருந்து9. ஐயம் புகினும் செய்வன செய்10. ஒருவனைப் பற்றி ஓரகத்து இரு11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்12. ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு13. அஃகமும் காசும் சிக்கெனத் தேடு


ககர வருக்கம்

14. கற்பு எனப் படுவது சொல் திறம்பாமை15. காவல் தானே பாவையர்க்கு அழகு16. கிட்டாதாயின் வெட்டென மற17. கீழோர் ஆயினும் தாழ உரை18. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை19. கூர் அம்பு ஆயினும் வீரியம் பேசேல்20. கெடுவது செய்யின் விடுவது கருமம்21. கேட்டில் உறுதி கூட்டும் உடைமை22. கைப் பொருள் தன்னில் மெய்ப் பொருள் கல்வி23. கொற்றவன் அறிதல் உற்ற இடத்து உதவி24. கோள் செவிக் குறளை காற்றுடன் நெருப்பு25. கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை

சகர வருக்கம்

26. சந்ததிக்கு அழகு வந்தி செய்யாமை27. சான்றோர் என்கை ஈன்றோட்கு அழகு28. சிவத்தைப் பேணில் தவத்திற்கு அழகு29. சீரைத் தேடின் ஏரைத் தேடு30. சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்31. சூதும் வாதும் வேதனை செய்யும்32. செய்தவம் மறந்தால் கைத்தவம் ஆளும்33. சேமம் புகினும் யாமத்து உறங்கு34. சை ஒத்து இருந்தால் ஐயம் இட்டு உண்35. சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர்36. சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்

தகர வருக்கம்

37. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை38. தாயிற் சிறந்து ஒரு கோயிலும் இல்லை39. திரை கடல் ஓடியும் திரவியம் தேடு40. தீராக் கோபம் போராய் முடியும்41. துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு42. தூற்றும் பெண்டிர் கூற்று எனத் தகும்43. தெய்வம் சீறின் கைதவம் மாளும்44. தேடாது அழிக்கின் பாடாய் முடியும்45. தையும் மாசியும் வையகத்து உறங்கு46. தொழுது ஊண் சுவையின் உழுது ஊண் இனிது47. தோழனோடும் ஏழைமை பேசேல்

நகர வருக்கம்

48. நல் இணக்கம் அல்லது அல்லல் படுத்தும்49. நாடு எங்கும் வாழக் கேடு ஒன்றும் இல்லை50. நிற்கக் கற்றல் சொல் திறம்பாவை51. நீர் அகம் பொருந்திய ஊர் அகத்திரு52. நுண்ணிய கருமமும் எண்ணித்துணி53. நூன் முறை தெரிந்து சீலத்து ஒழுகு54. நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை55. நேரா நோன்பு சீர் ஆகாது56. நைபவர் எனினும் நொய்ய உரையேல்57. நொய்யவர் என்பவர் வெய்யவர் ஆவர்58. நோன்பு என்பது கொன்று தின்னாமை

பகர வருக்கம்

59. பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்60. பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண்61. பிறன் மனை புகாமை அறம் எனத் தகும்62. பீரம் பேணில் பாரம் தாங்கும்63. புலையும் கொலையும் களவும் தவிர்64. பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம்65. பெற்றோர்க்கு இல்லை சுற்றமும் சினமும்66. பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம்67. பையச் சென்றால் வையம் தாங்கும்68. பொல்லாங்கு என்பது எல்லாம் தவிர்69. போனகம் என்பது தான் உழந்து உண்டல்

மகர வருக்கம்

70. மருந்தே ஆயினும் விருந்தோடு உண்71. மாரி அல்லது காரியம் இல்லை72. மின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை73. மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது74. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்75. மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்76. மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு77. மேழிச் செல்வம் கோழை படாது78. மை விழியார் தம் மனை அகன்று ஒழுகு79. மொழிவது மறுக்கின் அழிவது கருமம்80. மோனம் என்பது ஞான வரம்பு

வகர வருக்கம்

81. வளவன் ஆயினும் அளவு அறிந்து அழித்து உண்82. வானம் சுருங்கில் தானம் சுருங்கும்83. விருந்து இல்லோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம்84. வீரன் கேண்மை கூர் அம்பாகும்85. உரவோர் என்கை இரவாது இருத்தல்86. ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு87. வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை88. வேந்தன் சீரின் ஆம் துணை இல்லை89. வைகல் தோறும் தெய்வம் தொழு90. ஒத்த இடத்து நித்திரை கொள்91. ஓதாதவர்க்கு இல்லை உணர்வோடு ஒழுக்கம்

கொன்றை வேந்தன் முற்றிற்று.

by Swathi   on 28 Mar 2012  4 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
28-Dec-2017 13:27:44 இளங்கோ கண்ணன் said : Report Abuse
அவ்வையாரின் சில பாடல்கள் காலத்துக்கு ஒவ்வாதவையாக இருந்தாலும் , பெரும்பாலானவை அருமை! அதிலும், இயந்திரங்களுக்கு முதலிடம் கொடுத்து, நன்னெறிகளைக் காற்றில் பறக்கவிட்டுக் கொண்டிருக்கும் இக்காலத்துக்கு மிகவும் தேவை!
 
12-May-2015 07:12:40 indradevy said : Report Abuse
I லைக் திஸ் சைட்
 
12-May-2015 07:10:09 indradevy said : Report Abuse
good
 
29-Oct-2013 04:28:30 N.Maran said : Report Abuse
i like very much in this site most valyou site
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.