|
||||||||
கொத்தமல்லி இனிப்பு துவையல் (corainder sweet chutney) |
||||||||
தேவையானவை: கொத்தமல்லி தழை -ஒருகப் மிளகாய் வத்தல் - 5 புளி - நெல்லிக்காய் அளவு வெல்லம் - 50கிராம் உப்பு -தேவையான அளவு எண்ணெய் - 2ஸ்பூன் செய்முறை: 1.முதலில் அடுப்பில் கடாயை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் புளி,வத்தலை போட்டு நன்றாக வறுத்து தனியாக எடுத்து கொள்ளவேண்டும். 2.பிறகு அதே எண்ணெயில் நன்றாக கழுவி நறுக்கிய கொத்தமல்லித்தழையை போட்டு வதக்கி எடுத்து கொள்ளவேண்டும். 3.பின்பு அனைத்தையும் மிக்ஸியில் போட்டு சிறிது உப்பு சேர்த்து இரண்டு சுற்று சுற்றவிட்டு பின் 50கிராம் வெல்லத்தை அதனுடன் சேர்த்து நைசாக அரைத்து எடுத்து பரிமாறவும். |
||||||||
by vani on 06 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|