|
|||||
கங்காவிலும் கலக்கும் கோவை சரளா !! |
|||||
கே.பாக்யராஜ் இயக்கத்தில் உருவான முந்தானை முடிச்சு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் கோவை சரளா. கோவை தமிழில் பேசி தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டார். ஒரு கட்டத்தில் கவுண்டமணி-செந்தில், வடிவேலு ஆகியோருடன் பல படங்களில் நடித்ததால் காமெடி நடிகையாக தன்னை நிறுத்திக்கொண்ட கோவை சரளா, தமிழ் சினிமாவின் பெண் காமெடி நடிகை என்ற பெருமைக்குரியவராகவும் திகழ்கிறார். குறிப்பாக, சதிலீலாவதி படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்து அவருடன் டூயட் பாடி தனது தரத்தை உயர்த்திக்கொண்ட கோவை சரளாவுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தேக்க நிலை ஏற்பட்டது. ஆனாலும், லாரன்ஸ் இயக்கி நடித்த முனி, காஞ்சனா படத்திற்கு பிறகு அவரது மார்க்கெட் மீண்டும் சூடு பிடித்தது. அப்படத்தில் அம்மா வேடத்தில் நடித்தபோதும் கோவை சரளாவின் காமெடி பெரிய அளவில் பேசப்பட்டது. குறிப்பாக, அதே படம் தெலுங்கிலும் வெளியானதால், தமிழை விட அங்குதான் அவருக்கு அதிகமான படங்களில் வாய்ப்புகள் கிடைத்தன. பெரும்பாலும் திகில் படங்களிலேயே நடித்த கோவை சரளா, தமிழிலும் சுந்தர்.சி இயக்கிய அரண்மனை என்ற திகில் படத்தில் நடித்தார். இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் கோவை சரளாவுக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. இந்நிலையில் தற்போது அதே ராகவா லாரன்ஸ் இயக்கி வரும் முனி-3 கங்கா படத்தில் நடித்து வருகிறார் கோவை சரளா. காஞ்சனா படத்தில் தேவதர்ஷினி, ஸ்ரீமனுடன் காம்பினேஷன் காட்சிகளில் நடித்த கோவை சரளா, இந்த படத்தில் ஸ்ரீமனுடன் இணைந்து நடித்துள்ளாராம். முக்கியமாக, காஞ்சனாவில் பேய் சம்பந்தப்பட்ட காட்சிகளில் ரசிகர்களை நடுநடுங்க வைக்கும் வகையில் நடித்து அவர் ஸ்கோர் பண்ணியிருந்ததால், இந்த படத்தில் இன்னும் கூடுதலான காட்சிகளை கோவை சரளாவுக்கு கொடுத்திருக்கிறாராம் லாரன்ஸ். |
|||||
by Swathi on 19 Nov 2014 0 Comments | |||||
Tags: கோவை சரளா முனி 3 கங்கா Ganga Muni 3 Ganga Kovai Sarala | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|