தேவையானவை :
கோவக்காய் - நீளமாக நறுக்கியது 2 கப் வெங்காயம் - சிறியது 1 பூண்டு - 4 காய்ந்த மிளகாய் - 4 பச்சை மிளகாய் - 3 தனியா - 1 டேபிள் ஸ்பூன் வெந்தயம் - 1 டேபிள் ஸ்பூன் புளி - சிறிது உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய்- 2 டேபிள் ஸ்பூன் கடுகு - அரை டேபிள் ஸ்பூன் கருவேப்பிலை - சிறிது
செய்முறை :
1.வெங்காயத்தை நீளமாக நறுக்கி கொள்ள வேண்டும் .
2.கோவக்காயை நன்கு அலசி விட்டு இருமுனைகளையும் நறுக்கி எடுத்து விடவும். பிறகு நீளவாக்கில் நன்றாக நறுக்கி கொள்ளவும்.
3.ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு நறுக்கிய கோவக்காய், வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், வெந்தயம், முழு தனியா மற்றும் புளி எல்லாம் சேர்த்து நன்கு வதக்கவும்.
4.கோவக்காய் நன்கு வதங்கியதும், அடுப்பை நிறுத்திவிட்டு எல்லாவற்றையும் நன்கு ஆற வைக்க வேண்டும் .
5.பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். நன்றாக உப்பு ருசி பார்த்து பிறகு
6.கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும். சுவையான கோவக்காய் சட்னி தயார். இந்த கோவக்காய் சட்னி இட்லி, தோசைக்கு நன்கு பொருந்தும். சாதத்துடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும்.
|