LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- சிந்துப்பாவியல்

கும்மி

எண்சீர் அடிகள் இரண்டொரு தொடையாய்
ஐந்தாஞ் சீர்தொறும் மோனை அமைந்தே
ஈரசை இகவா தியலும் தனிச்சொல்
அரையடி இறுதியில் அமையப் பெற்று
மும்மையின் நடப்பது கும்மி யாகும்.
கருத்து : இரண்டு எண்சீர் அடிகள் ஒரு தொடையாக அமைந்தும், ஒவ்வோர் ஐந்தாம் எண்ணிலும் மோனை அமைந்தும், அரையடியின் இறுதியில் இரண்டு அசைக்கு மிகாத தனிச்சொல்லைப் பெற்றும் மும்மை நடையில் நடப்பது கும்மிப் பாடலாகும். 
விளக்கம் : ஆட்டத்தின் பெயர் அதில் பாடப்படும் பாட்டுக்கு ஆவதுண்டு. கும்மியென்பது கும்மி கொட்டுதலைக் குறிக்கும். 
கூற்றம் புறங்கொம்மை கொட்டினார் இல் (பழமொழி நானூறு.291) அதுவே கும்மி கொட்டிப் பாடும் பாடலுக்கு ஆகி வந்தது. 
காட்டு : கும்மி
மானைப்ப ழித்தவி ழியுடை யாள் - ஒரு
மாமயில் போலும்ந டையுடை யாள்
தேனைப்ப ழித்தமொ ழியுடை யாள் - பெண்ணின்
தெய்வமெ னத்தரும் சீருடை யாள். 
(ஆசியசோதி. தொடை.மேற்.ப.280)
மும்மை நடையுடைய இப்பாடலில் ‘மானே . . . நடையுடையாள்’ ‘தேனை . . . சீருடையாள் ஆகிய இரண்டடிகள் ஒரு தொடையாய் வந்துள்ளன. முதலடியின் 5ஆம் சீரில் ‘மா’ என மோனை அமைந்துள்ளது. அரையடிகளின் இறுதியில் வந்த ‘ஒரு’, ‘பெண்ணின்’ என்ற தனிச்சொற்கள் இரசைச் சொற்களாக வந்துள்ளன. 
காட்டு : வாலைக் கும்மி
சித்தர்கள் போற்றிய வாலைப்பெண்ணாம் - அந்தச்
சித்தியின் மேல்கும்மிப் பாட்டுரைக்கத்
தத்தமி தோமென ஆடும் கலை - மகள்
பத்தினி பொற்பதம் காப்போமே.
(வாலைக்கும்மி. சித்.பா.ப.257)
இப்பாடலில் மோனை அமைய வேண்டிய 5ஆம் சீர்களில் எதுகை அமைந்துள்ளது. எனவே மோனைக்கு பதிலாக எதுகை அமைதலும் உண்டெனக் கொள்க. கும்மி என்பது தொடக்கத்தில் கொம்மை என்று இருந்திருக்கிறது என்பது மேற்காட்டிய பழமொழியாலும், சீவக சிந்தாமணி, நைடதம் போன்ற பழந்தமிழ் நூல்களாலும் தெரிய வருகிறது. கொம்மை என்பது நாளடைவில் மருவி கொம்மி என்றும் கும்மி என்றும் ஆயிற்று. 
காட்டு : கொம்மி
கொம்மியடிப் பெண்கள் கொம்மியடி - இரு
கொங்கை குலுங்கவே கொம்மியடி. 
-திருவருட்பா 2964)
39.
தனிச்சொல்லை முதலடி இறுதியில் தாங்கியும்
தனிச்சொல்லே இன்றியும் சமைவன உளவே
கருத்து : தனிச்சொல்லை முதலடியின் இறுதியில் பெற்று வரும் கும்மிப்பாடல்களும் உள்ளன. தனிச்சொல்லே பெறாது அமைந்த கும்மிப் பாடல்களும் உள்ளன. 
விளக்கம் : மேல் நூற்பாவில் பெருவரவினவான அரையடி இறுதியில் தனிச்சொல் பெறும் கும்மிகள் கூறப்பட்டன. இங்கு சிறுவரவினவான அடி இறுதியில் தனிச்சொல் பெறும் கும்மிகளையும், தனிச்சொல்லே பெறாத கும்மிகளையும் கூறுகின்றனர். 
காட்டு : தனிசொல்லை முதலடியின் இறுதியில் பெற்றுவரும் கும்மி
செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே - எங்கள்
தந்தையர் நாடெனும் பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே -(பா.கவி. ப. 165)
இதில் முதலடியின் இறுதியில் ‘எங்கள்’ என்ற தனிச்சொல் வந்தது. 
காட்டு : தனிச்சொல் இல்லாமல் வந்த கும்மி
தில்லையில் முல்லையில் எல்லையுள் ஆடிய
வல்லவன் வாலைப்பெண் மீதினிலே
சல்லாபக் கும்மித்த மிழ்பா டவரும்
தொல்லைவி னைபோக்கும் வாலைப் பெண்ணே.
(கொங்கணர் வாலைக்கும்மி. சி.பா.8)
இக்கும்மிப் பாடலில் தனிச்சொல் இல்லை. 

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.