LOGO
  முதல் பக்கம்    சமையல்    ஆரோக்கிய உணவு/சிறுதானியம் Print Friendly and PDF
- சிறுதானிய உணவுகள்

குதிரைவாலி கிச்சடி

தேவையானவை :


1. குதிரைவாலி அரிசி - 1 கப்


2. வெங்காயம், தக்காளி, கேரட் - தலா ஒன்று 


3. பச்சைமிளகாய் - 3


4. பட்டாணி - கால் கப்


5. இஞ்சி - கால் துண்டு 


6. கறிவேப்பிலை, கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, மிளகு - சிறிதளவு


7. உப்பு, எண்ணெய் - தேவையான அளவு 


செய்முறை :


1. வெங்காயம், இஞ்சி, கேரட் ஆகியவற்றை தோல் நீக்கி நீளவாக்கில் நறுக்கவும்.

 

2. பச்சை மிளகாயை இரண்டாக கீறிக் கொள்ளவும், குதிரைவாலி அரிசியை வாணலியில் வறுத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுந்தபருப்பு, கடலை பருப்பு, மிளகு போட்டு தாளிக்கவும்.

 

3. பின்னர் கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, கேரட், தக்காளி என்று ஒவ்வொன்றாகப் போட்டு வதக்கவும்.

 

4. அனைத்தும் நன்றாக வதங்கியதும் மூன்று கப் தண்ணீர் ஊற்றி, உப்பு, பட்டாணி சேர்த்து வதக்கி, வாணலியை மூடி, வேக விடவும்.


5. காய்கள் நன்றாக வெந்ததும், அடுப்பை மிதமான தீயில் வைத்து குதிரைவாலியை சிறிது சிறிதாக தூவி கட்டிகள் இல்லாமல் நன்றாகக் கிளறவும்.

 

6. பின்னர் வாணலியை ஒரு மூடியால் மூடி வேக விடவும். நன்றாக வெந்ததும் இறக்கி, தேங்காய் சட்டினியுடன் பரிமாறவும்.

by Swathi   on 17 Jul 2014  0 Comments
Tags: குதிரைவாலி கிச்சடி   Kuthiraivali Kichadi                 
 தொடர்புடையவை-Related Articles
குதிரைவாலி கிச்சடி குதிரைவாலி கிச்சடி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.