LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வளைகுடா நாடுகள்

குவைத்தில் தமிழ் வகுப்புகள் ஆரம்பம்

குவைத்தில் தமிழ் வகுப்புகள் ஆரம்பம்


தாய்மொழியை சுவாசிப்போம்...! எம் தமிழை நேசிப்போம்...!! என்ற முழக்கத்துடன் குவைத் வாழ் தமிழ் பிள்ளைகள் முறையாகவும், தெளிவாகவும், எளிமையாகவும் தாய்மொழியாம் தமிழ் மொழியை ஜாதி, மத பேதமின்றி கற்றிட குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் கல்விக் குழு ஏற்பாடு செய்த தமிழ் மொழி பயிற்சி வகுப்புகள் சால்மியாவில் உளள அல் ஃபத்ஹ் திருக்குர்ஆன் & மொழிகள் பயிற்சி மையத்தில் இன்று சனிக்கிழமை (03.11.2018) காலை 8:30 மணிக்கு ஆரம்பமானது.
சங்கத்தின் இணைப் பொதுச் செயலாளர் ஏ.கே.எஸ். அப்துன் நாஸர், துணைத்தலைவர் மவ்லவீ எஸ்.ஏ.கே. முஹம்மது இப்ராஹீம் நூரானீ காஷிஃபி, கல்விக் குழு செயலாளர் முனைவர் ஏ. ஷப்பீர் அஹ்மத் ஆகியோர் வகுப்புகளை துவக்கி வைத்தனர். பொதுச் செயலாளர் பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ தமிழ் வகுப்புகளை நடத்தினார்.
வாரந்தோறும் நடைபெறும் இவ்வகுப்புகளில் முறைப்படுத்தப்பட்ட பாடத் திட்டத்துடன் 25 வாரங்களுடன கூடிய ஆறு மாதங்கள் படிப்பாக நடைபெறும். வாட்ஸ்அப் குழுமம் வாயிலாக சிறப்பு பயிற்சியும், மேடைப்பேச்சு பயிற்சியும் வழங்கப்படுகின்றன.  ஆண்டுத் தேர்வுகள் & போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் ஃ சான்றிதழ்கள் வழங்கப்படுவதுடன் ஒவ்வொருவருக்கும் தனிக் கவனம் செலுத்தப்படுகின்றது. மேலதிக விபரங்களுக்கு +965 9787 2482 என்ற சங்க அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று சங்கத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது.
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)
by Khaleel Baaqavee   on 21 Mar 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.