|
|||||
தமிழக அமைச்சர் பதவியிலிருந்து கே.வி.ராமலிங்கம் நீக்கம் !! 3 அமைச்சர்கள் இலாகா மாற்றம் !! |
|||||
தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் பதவியில் இருந்து கே.வி.ராமலிங்கம் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். மேலும் 3 தமிழக அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளது.
கே.வி.ராமலிங்கத்திற்கு பதிலாக சாத்தூர் எம்.எல்.ஏ.வான ஆர்.பி.உதயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே ஆர்.பி.உதயகுமார் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம், கே.வி.ராமலிங்கத்திடம் இருந்து மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று அமைச்சர் பதவியும் பறிபோயுள்ளது. கே.வி.ராமலிங்கம் மீது நில அபகரிப்பு புகாரை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அமைச்சர்கள் பி.வி.ரமணா, எம்.சி.சம்பத், தோப்பு வெங்கடாசலம் ஆகியோரின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி, வருவாய்த்துறை அமைச்சராக இருந்த வெங்கடாசலத்துக்கு சுற்றுச்சூழல்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. தோப்பு வெங்கடாசலத்திடம் இருந்த வருவாயத்துறை ரமணாவுக்கு மாற்றப்பட்டுள்ளது. சம்பத்துக்கு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. |
|||||
by Swathi on 08 Dec 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|