LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus 
  முதல் பக்கம்    உடல்நலம்    மருத்துவக் குறிப்புகள் Print Friendly and PDF
- நீரிழிவு (Diabetes)

நீரிழிவு நோயை விரட்டும் வெண்டைக்காய் நீர்!!

இன்றைய உணவு பழக்கவழக்கத்தினாலும் நமது அன்றாட செயல்களினாலும் இந்தியாவில், சர்க்கரை நோயினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டால், அதற்கு வாழ்நாள் முழுவதும் இன்சுலின் ஊசியை எடுத்து வர வேண்டியிருக்கும். மேலும் ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டால், அதனால் வேறுசில உடல்நல பிரச்சனைகளும் தானாக நமது உடலின் மேல் படையெடுக்க ஆரம்பித்து விடும்.

இப்படிப்பட்ட சர்க்கரை நோயை ஆரம்பத்திலேயே குணப்படுத்தக் கூடிய இயற்கையான மருந்து ஒன்று உள்ளது. இந்த அரு மருந்தைப் பற்றியும், அதன் தயாரிப்பு முறையை பற்றியும் இப்போது பார்ப்போமா...  

சர்க்கரை நோய்க்கான இயற்கை மருந்து வேறொன்றும் இல்லை, இரவில் படுக்கும் முன் ஒரு டம்ளர் நீரில் 2 துண்டுகள் வெண்டைக்காயைப் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் எழுந்ததும் காலை உணவு உண்பதற்கு 1/2 மணிநேரத்திற் முன் வெறும் வயிற்றில் பருக வேண்டும். சர்க்கரை நோய் வகைகளான டைப் 1, டைப் 2 மற்றும் கர்ப்பகால நீரிழிவு போன்றவற்றை சரிசெய்து, இரத்த சர்க்கரை அளவை சீராகப் பராமரிப்பதற்கு வெண்டைக்காய் தண்ணீர் உதவுவதாக, பலர் அனுபவத்தில் கூறியுள்ளனர்.

வெண்டைக்காய்க்கும், சர்க்கரை நோய்க்கும் உள்ள தொடர்பு குறித்து மருத்துவ ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில் நீரிழிவுடன் கர்ப்பமாக இருக்கும் எலிக்கு வெண்டைக்காய் தண்ணீர் கொடுக்கப்பட்டு வந்தது. ஒரு கட்டத்தில் அந்த எலியின் இரத்த சர்க்கரை அளவு சீராக இருந்தது தெரிய வந்தது. துருக்கியில் வறுத்த வெண்டைக்காயின் விதைகள் சர்க்கரை நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து ஆய்வு மேற்கொண்டதில், இம்முறையினால் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரை அளவு குறைந்து சீராக பராமரிக்கப்பட்டு வந்தது நிரூபிக்கப்பட்டது.

உடலில் அதிகப்படியான கொலஸ்ட்ரால் இருந்தால், உணவில் வெண்டைக்காயை அதிகம் சேர்த்து வருவதோடு, வெண்டைக்காய் நீரை குடிப்பதன் மூலம் குறைக்கலாம். நீங்கள் அடிக்கடி நோய்வாய்ப்படுவோராயின் உங்களது நோயெதிர்ப்பு சக்தியை வெண்டைக்காய் தண்ணீர் வலிமையாக்கும். சர்க்கரை நோயுடன், சிறுநீரக நோய்களின் தாக்கத்தில் இருந்தும் விடுபட நினைத்தால், வெண்டைக்காய் தண்ணீர் அதற்கு நல்ல உத்திரவாதம் அளிக்கும். முக்கியமாக சுவாச பிரச்சனை இருப்பவர்களுக்கு, வெண்டைக்காய் நீர் மிகவும் நல்லது. இதனை பருகி வந்தால், ஆஸ்துமாவில் இருந்து நல்ல விடுதலை கிடைக்கும்

by Swathi   on 08 May 2016  5 Comments
Tags: வெண்டைக்காய் நீர்   நீரிழிவு நோய்   சர்க்கரை நோய்   Vendakkai Water   Vendakkai Neer   Ladies Finger Water   diabetes  

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
வாராமல் காத்திடுவோம் ! - எம் . ஜெயராமசர்மா வாராமல் காத்திடுவோம் ! - எம் . ஜெயராமசர்மா
நீரிழிவு நோயை விரட்டும் வெண்டைக்காய் நீர்!! நீரிழிவு நோயை விரட்டும் வெண்டைக்காய் நீர்!!
பீட்சா, பர்கர் உணவுகளால் மூன்றே நாளில் நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் !! பீட்சா, பர்கர் உணவுகளால் மூன்றே நாளில் நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் !!
சிறுதானியங்களில் சிறந்த தானியம் சாமை அரிசி !! சிறுதானியங்களில் சிறந்த தானியம் சாமை அரிசி !!
நீரிழிவு நோயில் வகைகள் உண்டா? ஹீலர் பாஸ்கர் நீரிழிவு நோயில் வகைகள் உண்டா? ஹீலர் பாஸ்கர்
நீரிழிவு நோய்க்கான இயற்கை மூலிகைகள் !! நீரிழிவு நோய்க்கான இயற்கை மூலிகைகள் !!
சக்கரையைப் பற்றிய புரிதலும் உணவுமுறையும் சக்கரையைப் பற்றிய புரிதலும் உணவுமுறையும்
கர்ப்பகால நீரிழிவு நோய் வருவதற்கான காரணங்கள் என்ன ? அது குழந்தையை பாதிக்குமா ? கர்ப்பகால நீரிழிவு நோய் வருவதற்கான காரணங்கள் என்ன ? அது குழந்தையை பாதிக்குமா ?
கருத்துகள்
12-Nov-2017 03:03:08 Manickam.R said : Report Abuse
It is a wonderful message
 
11-Nov-2017 12:24:36 varadarajan said : Report Abuse
குட் நியூஸ்
 
13-Jan-2017 00:13:48 murugan said : Report Abuse
super
 
03-Aug-2016 10:57:24 Bala said : Report Abuse
Hypo thyriod cure - Tamil medicines
 
26-Jul-2016 03:15:19 robin said : Report Abuse
இந்த மருத்துவ குறிப்புகளை எனக்கு அனுப்பி வைக்க முடியுமா
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.