|
||||||||
ழகரத்தை விட சிறப்பானது றகரம் !! |
||||||||
தமிழுக்கேயுரிய மேன்மைகளுள் ஒன்று ழகரம் என்பர். அதை நன்கு அறிந்துள்ள நாம் மற்றொரு மேன்மையை மறந்துவிட்டோம். ழகரத்தைவிடவும் சிறப்பானது றகரமாகும்.
றகரங்கள் இடம்பெறும் சொற்கள் யாவுமே தமிழுக்கே உரியவை என்று அடித்துக் கூறலாம். பாடுவோர்கள் ழகரச் சொற்களை உச்சரித்துப் பாடும்போது எப்படித் தமிழ் அழகாய் ஒலிக்குமோ, அதுபோல் எழுதுவோர்களும் சொற்பொழிவாற்றுவோர்களும் றகரச் சொற்களைப் பயன்படுத்தினால் அவர் தோற்றுவிக்கும் கருத்து உரம்பெற்று வலுவுற்றுத் திகழும்.
வல்லின வரிசை எழுத்துகளில் றகரமே தலையாயது. அது அத்துணை வன்மை தெறிக்க ஒலிக்கும். சங்கு, பஞ்சு, வண்டு, பந்து, கம்பு - என மற்ற வல்லின எழுத்துகள் மெல்லின மெய்களை அடுத்து வந்தால் வன்மையிழந்து மெலிந்தே ஒலிக்கும். ஆனால் றகரம் அவ்வாறு சேருமிடத்திலும் வல்லொலி குன்றாமல் ஒலிக்கும். ஒன்று, கன்று !
உலக மொழிகள் பிறவற்றில் ழகரம் இருப்பதைக்கூடக் காணமுடியும், ஆனால் றகரத்தைக் காண்பது கடினம். அதனால் ழகரத்தினும் சிறந்தது, தமிழின் மேன்மைகளுள் ஒன்று ‘றகரம்’ என்றறிக !
- கவிஞர் மகுடேசுவரன்
தமிழுக்கேயுரிய மேன்மைகளுள் ஒன்று ழகரம் என்பர். அதை நன்கு அறிந்துள்ள நாம் மற்றொரு மேன்மையை மறந்துவிட்டோம். ழகரத்தைவிடவும் சிறப்பானது றகரமாகும். றகரங்கள் இடம்பெறும் சொற்கள் யாவுமே தமிழுக்கே உரியவை என்று அடித்துக் கூறலாம். பாடுவோர்கள் ழகரச் சொற்களை உச்சரித்துப் பாடும்போது எப்படித் தமிழ் அழகாய் ஒலிக்குமோ, அதுபோல் எழுதுவோர்களும் சொற்பொழிவாற்றுவோர்களும் றகரச் சொற்களைப் பயன்படுத்தினால் அவர் தோற்றுவிக்கும் கருத்து உரம்பெற்று வலுவுற்றுத் திகழும். வல்லின வரிசை எழுத்துகளில் றகரமே தலையாயது. அது அத்துணை வன்மை தெறிக்க ஒலிக்கும். சங்கு, பஞ்சு, வண்டு, பந்து, கம்பு - என மற்ற வல்லின எழுத்துகள் மெல்லின மெய்களை அடுத்து வந்தால் வன்மையிழந்து மெலிந்தே ஒலிக்கும். ஆனால் றகரம் அவ்வாறு சேருமிடத்திலும் வல்லொலி குன்றாமல் ஒலிக்கும். ஒன்று, கன்று ! உலக மொழிகள் பிறவற்றில் ழகரம் இருப்பதைக்கூடக் காணமுடியும், ஆனால் றகரத்தைக் காண்பது கடினம். அதனால் ழகரத்தினும் சிறந்தது, தமிழின் மேன்மைகளுள் ஒன்று ‘றகரம்’ என்றறிக ! - கவிஞர் மகுடேசுவரன்
|
||||||||
by Swathi on 26 Nov 2014 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|