LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

லஷ்மன் ஸ்ருதி இசைக்குழுவின்வட அமெரிக்கா மற்றும் கனடா சுற்றுப் பயணம்

கலாலயா யு.எஸ்.ஏ சார்பாக லஷ்மன் ஸ்ருதி இசைக்குழு அக்டோபர் மாதம் 3ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை வட அமெரிக்கா மற்றும் கனடாவில் சுற்றுப் பயணம் செய்கின்றனர்.

பலமுறை அமெரிக்காவில் இசைப் பயணம் செய்துள்ள லஷ்மன் ஸ்ருதி இசைக்குழு இம்முறை பின்னணிப் பாடகர்கள் க்ரிஷ், ஹரிஹரசுதன், வேல்முருகன், மாலதி லஷ்மன், ரோஷினி மற்றும் விஜய் தொலைக்காட்சிப் புகழ் சூப்பர் சிங்கர்கள் சாய்சரண், அனு, அனிதா ஆகியோர் பங்கேற்க அக்டோபர் 3ஆம் தேதி ஆஸ்டின் நகரில் தொடங்கி 26ஆம் தேதி வாஷிங்டன் நகரில் நிறைவடைகிறது.

இந்தியா மட்டுமல்லாது உலகெங்கும் பல்வேறு நாடுகளில் 8000 நிகழ்ச்சிகளுக்கு மேல் நடத்தியுள்ள லஷ்மன் ஸ்ருதி இசைக்குழு 1994 ஆம் ஆண்டு சென்னை காமராஜர் அரங்கில் தொடர்ந்து 36 மணி நேரம் இசை நிகழ்ச்சி நடத்தி உலக சாதனையை உண்டாக்கியவர்கள்.

வேகமான விஞ்ஞான வளர்ச்சியில் பல்வேறு முன்னேற்றங்கள் இருப்பினும் மேடையில் எந்தவிதமான கரோக்கி, மைனஸ் ஒன் ட்ராக் போன்றவற்றை பயன்படுத்தாமல் 100 சதவீதம் எல்லா இசைக்கருவிகளையும் இசைத்துப் பாடும் இசைக்குழு. திறமை வாய்ந்த பாடகர்களுடன் அமெரிக்கா மற்றும் கனடாவில் களம் இறங்கி வலம் வரப்போகின்றது.

"உன்னாலே உன்னாலே" திரைப்படத்தின் "ஜூன் போனால்" பாடல் மூலம் திரைப்பட உலகில் அறிமுகமாகி வாரணம் ஆயிரம் - அடியே கொல்லுதே, வேட்டைக்காரன் -  ஒரு சின்னத்தாமரை, மங்காத்தா - வாடா பின்லேடா போன்ற பிரபல பாடல்களினால் எல்லோர் மனதையும் கவர்ந்த பின்னணிப் பாடகர் க்ரிஷ்.

சமீபத்தில் "வருத்தப்படாத வாலிபர் சங்கம்" திரைப்படத்தின் "ஊதாக் கலரு ரிப்பன்" பாடல் மூலமாக அறிமுகமாகி "பாண்டிய நாடு" திரைப்படத்தில் "ஒத்தக்கடை ஒத்தக்கடை" , "மஞ்சப்பை" திரைப்படத்தில் "பார்த்து பார்த்து" போன்ற பாடல்களை வழங்கி பிரபலமாகியிருக்கும் பின்னணிப் பாடகர் ஹரிஹரசுதன்.

"சுப்ரமணியபுரம்" திரைப்படத்தில் இடம்பெறும் "மதுரை குலுங்க" பாடலில் அறிமுகமாகி, நாடோடிகள் - ஆடுங்கடா, ஆடுகளம் - ஒத்த சொல்லாலே, ஒரு கல் ஒரு கண்ணாடி - வேணாம் மச்சான் வேணாம், கழுகு - ஆம்பளைக்கும் பொம்பளைக்கும், காஞ்சனா - சங்கிலி புங்கிலி, இது கதிர்வேலன் காதல் - பல்லாக்குத் தேவதைய போன்ற வெற்றிப்பாடல்களை கொடுத்த வேல்முருகன்.

"திருடா திருடி" திரைப்படத்தில் "மன்மதராசா" பாடல் மூலம் தமிழர்கள் நெஞ்சங்களில் தன் இசையால் இடம் பிடித்து திருப்பாச்சி - கும்பிட போன தெய்வம், சச்சின் - குண்டு மாங்கா, கந்தசாமி - என் பேரு மீனாகுமாரி, பரமசிவன் - ஏ உண்டி வில்ல, அடிதடி - உம்மா உம்மம்மா, சுறா - வங்கக் கடல் எல்லை, படிக்காதவன் - ராங்கி ரங்கம்மா, காஞ்சனா - கொடியவனின் கதையைப் போன்ற பாடல்களை வழங்கி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என்று பல்வேறு இந்திய மொழிகளில் கலக்கிக் கொண்டிருக்கும் இவர் கே.பி. சுந்தராம்பாள், பெங்களூர் ரமணியம்மாள், எல்.ஆர். ஈஸ்வரி, எஸ். வரலட்சுமி, மனோரமா, டாக்டர் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், சித்ரா, மால்குடி சுபா, அல்கா யாக்னிக், உஷா உதூப், அனுபமா, சுனிதா சாரதி, என்று நாற்பதிற்கும் மேற்பட்ட பின்னணிப் பாடகிகளின் குரல்களில் தத்ரூபமாய் பாடக்கூடிய உங்கள் அபிமானம் பெற்ற பின்னணிப் பாடகி மாலதி லஷ்மன்.

ஶ்ரீகாந்த் தேவா இசையில் "குத்து" திரைப்படத்தில் "போட்டுத் தாக்கு" பாடலில் நடிகர் சிம்புவுடன் பாடி அறிமுகமாகி, "பட்டியல்" திரைப் படத்தில் இசைஞானி இளையராஜா அவர்களுடன் இணைந்து "நம்ம காட்டுல" என்ற பாடலைப் பாடி, தாமிரபரணி - கருப்பான கையால, தீராத விளையாட்டுப் பிள்ளை - என் ஜன்னல் வந்த காற்றே போன்ற இனிமையான பாடல்களை வழங்கிய ரோஷினி

ஏர்டெல் சூப்பர் சிங்கர் போட்டியில் முதலாவதாக வந்து பிரபலமாகி, டி.இமான் இசையில் "மனம் கொத்திப் பறவை"  திரைப்படத்தில் "டங் டங் டிக டிக" பாடல் மூலம் திரையில் அறிமுகமாகி எல்லா விதமான பாடல்களையும் மிக அழகாகப் பாடும் திறமை வாய்ந்தவரும் நமது மனதில் அழகாய் இடம் பிடித்த சாய்சரண்.

ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் போட்டி வரிசையில் டாப்டென்னில் இடம்பிடித்து, மேடைகளில் பாடும்போது குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவர்ந்திழுக்கும் குட்டிப்பாடகி அனு.

ஏர்டெல் சூப்பர் சிங்கர் செலப்ரிட்டி சீசனில் இரண்டாம் இடம்பிடித்த பாடகி, படையப்பா திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாம் மகளாக நடித்து, உதிரிபூக்கள், வள்ளி, சிவசங்கரி, தெய்வமகள் ஆகிய தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து, மேடை நிகழ்ச்சிகளில் திறம்பட பாடக் கூடிய அனிதா ஆகியோர் மேடையை இசையால் ஆக்கிரமிக்க இசை ரசிகர்களின் காதுகளுக்கும் கண்களுக்கும் விருந்தாய் இந்தத் தொடர் பயணம் அமையும் என்று நம்பலாம்.

அக்டோபர் 3, 2014 - ஆஸ்டின் - வெள்ளிக்கிழமை மாலை : 7:00 மணி - 512 785 2681, 512 773 6754

அக்டோபர் 4, 2014 - சான்டியாகோ - சனிக்கிழமை மாலை : 3:00 மணி - 859 859 0078, 858 342 5260

அக்டோபர் 5, 2014 - சியாட்டில் - ஞாயிற்றுக்கிழமை மாலை : 4:00 மணி - 425 785 7316

அக்டோபர் 10, 2014 - டாலஸ் - வெள்ளிக்கிழமை மாலை : 7:00 மணி - 972 423 8560

அக்டோபர் 11, 2014 - சிக்காகோ - சனிக்கிழமை மாலை : 6:00 மணி - 630 506 1234

அக்டோபர் 12, 2014 - செயிண்ட் லூயிஸ் - ஞாயிற்றுக்கிழமை மதியம் : 2:00 மணி - 312 566 7009, 314 878 5251

அக்டோபர் 17, 2014 - சாக்ரிமன்டோ - வெள்ளிக்கிழமை மாலை : 7:00 மணி - 916 509 1916, 916 452 5881 (திரு.கங்கை அமரன் பங்கேற்கின்றார்)

அக்டோபர் 18, 2014 - சான் ஹூசே - சனிக்கிழமை மாலை : 5:00 மணி - 510 305 9285  (திரு.கங்கை அமரன் மற்றும் திரு.விவேக் பங்கேற்கின்றனர்)

அக்டோபர் 19, 2014 - வேன் கூவர் (கனடா) - ஞாயிற்றுக்கிழமை மாலை : 6:00 மணி - 604 275 1471

அக்டோபர் 24, 2014 - ரோச்சஸ்டர் - வெள்ளிக்கிழமை மாலை : 7:00 மணி - 585 802 0119, 585 978 0096, 585 734 8480 Sraje@yahoo.com, rtsevents@gmail.com

அக்டோபர் 25, 2014 - ஃபிலடெல்பியா - சனிக்கிழமை மாலை : 6:30 மணி - 610 630 0276, 484 620 1747

அக்டோபர் 26, 2014 - வாஷிங்டன் டீ.சி - ஞாயிற்றுக்கிழமை மாலை : 4:00 மணி - 703 725 9199, 703 939 5469 ஆகிய இடங்களில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சிகளுக்கு அந்தந்தப் பகுதியில் வசிக்கும் தமிழ் நெஞ்சங்களும், மொழி பாராது இசை ரசிக்கும் அன்பர்கள் தாங்களும் தங்கள் உறவினர்களும் மற்றும் நண்பர்களுடன் வந்து ரசித்து செல்லலாம்.

குழந்தைகள், இளைஞர்கள், நடுத்தர வயதினர், பெரியவர்கள் என்று எல்லோருக்கும் ஏற்றவாறு பாடல்களும்,ஒவ்வொரு வயதினர்க்கும் தொடர்புடைய பாடல்களும் உண்டென்பதால் இது ஒரு குடும்பம் முழுவதும் வந்து கொண்டாடும் நிகழ்ச்சியாய் அமையும் என்பதில் ஐயமில்லை.

18ஆம் தேதி சான் ஹுசே நகரில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பு செய்ய இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர், இயக்குனர், கதாசிரியர், திரைக்கதையாசிரியர், வசனகர்த்தா, தயாரிப்பாளர், நடிகர், இருபதாயிரம் மேடை நிகழ்ச்சிகளில் கலந்தும் கொண்ட அனுபவம் வாய்ந்தவர், இசைஞானி இளையராஜாவின் சகோதரர் என்று பல்வேறு முகங்களை கொண்ட மதிப்பிற்குரிய "கலைமாமணி" கங்கை அமரன் அவர்கள் கலந்து கொள்கிறார்.

இசைக்கு கங்கை அமரன் வருவதால் கலகலப்புக்கு நகைச்சுவை நடிகர், குணச்சித்திர நடிகர், கதாநாயகன், சின்னக் கலைவாணர் விவேக் கலந்து கொண்டு ரசிகர்களை சிரிப்பலையில் நீந்தச்செய்ய உள்ளார்.

அமெரிக்க மண்ணில் லஷ்மன் ஸ்ருதி இசைக்குழுவிற்கு சான் ஹுசே நிகழ்ச்சி 50ஆவது நிகழ்ச்சி என்பதால்  மிக விஷேசமாக இந்நிகழ்ச்சி அமையும் என்று லஷ்மன் ஸ்ருதி இசைக்குழு நம்பிக்கையுடன் பணியாற்றிக் கொண்டிருக்கின்றது. வெளிநாடுகளில் ஒரே ஒரு நிகழ்ச்சிக்கென்று நடத்தி முடித்துவிட்டு வந்தாலே போதுமென்றாகிவிடும் ஆனால் லஷ்மன் ஸ்ருதி குழுவிற்கு அமெரிக்காவில் மட்டுமே 50 நிகழ்ச்சிகள் என்பது ஆச்சரியமான விஷயம்.

மேலும் லஷ்மன் ஸ்ருதி குழுவின் இயக்குனர் லஷ்மன் ஒரு பலகுரல் கலைஞர், அவரும் தன் பங்கிற்கு பலகுரல் நிகழ்ச்சியால் ரசிகர்களை குரல்சுவை, நகைச்சுவை, பல்சுவை என்று வெவ்வேறு கோணங்களில் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடிப்பார்.

அமெரிக்கா மற்றும் கனடாவில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யும் கலா ஐயர் அவர்கள் கலிஃபோர்னியா மாகாணத்தில் சான் ஹூசே பகுதியில் வசிப்பவர். நிகழ்ச்சிகள், டிக்கெட்டுகள், விளம்பரங்கள் மற்றும் அனைத்து விவரங்களுக்கும் அவரது தொலைபேசி எண் 510 305 9285

வாஷிங்டன் டி சி பகுதியில் இருந்து இயக்கப்படும் ஐந்தாவது தூண் அமைப்பு இந்தியாவில் ஊழல் ஒழிப்புக்காக உருவாக்கப்பட்டுள்ளது. ஐந்தாவது தூண் இந்த அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்குகிறது இதன் நிறுவனர் திரு.விஜய் ஆனந்த். தொடர்புக்கு 3015910986, www.5thpillar.org

லைக்கா மொபைல், சக்தி மசாலா, மலர் ப்ராப்பர்ட்டீஸ், ஆகிய நிறுவனங்கள் நிகழ்ச்சிகளை ஸ்பான்சர் செய்து ஒத்துழைப்பு வழங்குகின்றன.

பொதுவாக இசை என்பது பல்வேறு சூழ்நிலைகளில் வாழ்கின்ற மனிதர்களை ஒருநிலைப்படுத்தி யோகா, தியானத்திற்குப் பிறகு கிடைக்கும் மன அமைதிக்கும் மேலாக நிம்மதியையும், சந்தோஷத்தையும் கொடுக்கக்கூடிய விஷயம்.

அப்படிப்பட்ட இசையை சுமந்து வரும் லஷ்மன் ஸ்ருதி இசைக் குழுவின் இந்தத்தொடர் இசைப் யணத்தின் விபரங்களை, பரபரப்பான பணிச்சுமைகளுக்கிடையில் ஓடிக்கொண்டிருக்கும் அமெரிக்க மற்றும் கனடிய தமிழ் நெஞ்சங்கள் அனைவரும்  தங்கள் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அருகிலுள்ள நகரங்களில் வசிப்போர் அனைவர்க்கும் தெரிவித்து எல்லோரையும் வரவழைத்து இசை விருந்தைக் கேட்டு ரசித்துக் கொண்டாடச் செய்யுமாறு வேண்டுகிறோம்.

குறிப்பாக சமூக வலைதளங்களில் ஃபேஸ்புக், ட்வீட்டர், வாட்ஸ் அப், லிங்க்ட் இன், கூகுள் +, இணயதளங்கள், தங்கள் வியாபாரத் தொடர்புகள், நட்பு வட்டாரங்கள், சமூக கூட்டமைப்புத் தொடர்புகள், தனிப்பட்ட தொடர்புகள் போன்ற அனைத்து வழிகளின் மூலமாய் இச்செய்தியை பரிமாறிக் கொண்டும், தொலைபேசி வாயிலாய் அழைத்தும் அனைவரையும் அரங்கங்களுக்குள் கொண்டு வந்து மகிழ்ச்சியாய் இசை கேட்டு ஆடிப் பாடிக் கொண்டாடும்படி கேட்டுக்கொள்கிறோம்.

இந்த பணிரெண்டு நிகழ்ச்சிகளையும் நடத்தும் பல்வேறு அமைப்பை சார்ந்தவர்கள், தமிழ் சங்க நிர்வாகிகள், நிகழ்ச்சி மேலாண்மையாளர்கள் தனிப்பட்ட நபர்கள் என்று ஒவ்வொருவரும் தங்களுடைய எண்ணற்ற பணிகளுக்கிடையே இந்நிகழ்ச்சிகளை கடினமான முயற்சிக்கிடையே மிகுந்த பொருட்செலவில் உங்கள் நகருக்கு கொண்டு வருகிறார்கள். உங்கள் ஆதரவுடன் இந்நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றால் எதிர்காலத்தில் தொடர்ந்து இதுபோன்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகளை மேலும் நடத்துவதற்கு ஊக்கம் பெறுவார்கள். மேலும் லஷ்மன் ஸ்ருதி இசைக்குழுவும், பாடகர்களும் பல்லாயிரக்கணக்கான மைல்கள் பயணம் செய்து உங்கள் பகுதிக்கு வந்து தங்கள் கலைத்திறமையை உங்கள் முன் படைக்கவிருக்கின்றார்கள். ஆகையால் தாங்கள் அனைவரும் தங்களால் இயன்ற ஒத்துழைப்பினை நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் வழங்குமாறு வேண்டுகோள் வைக்கின்றோம்.

நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை சுலேகா.காம் ( sulekha.com ) மூலமாகவும், நிகழ்ச்சி அமைப்பாளர்களின் இணையதளங்களின் மூலமாகவும் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து வாருங்கள் எங்கள் பக்கங்களுக்கு : www.lakshmansruthi.com & https://www.facebook.com/LakshmanSruthi

LAKSHMAN SRUTHI USA AND CANADA TOUR 2014

In association with Kalalaya USA, Lakshman Sruthi, your favorite music band from Chennai, planned to visit USA & Canada this October 2014.
Lakshman Sruthi has already performed numerous shows in US and this year famous singers like Krish, Hariharasudhan, Velmurugan, Malathy Lakshman, Roshini and ‘super singers’ fame Sai Saran, Anu, Anitha are participating.
Here is a brief intro about Lakshman Sruthi and participating singers:
Lakshman Sruthi has performed about 8000 plus shows all over the globe. In the year 1994, they have created a world record by performing nonstop for 36 hours at Kamarajar Arangam, Chennai. Even though the music industry has been experiencing a lot of changes in the technological front like Karaoke, Minus 1 track, etc… Lakshman Sruthi strictly adheres to the traditional, trusted and most difficult task of conducting the orchestra with 100% manual effort.
Krish: Who stormed the Tamil music field with ‘June Ponaal’ from the fil Unnaalae Unnaalae and rendered countless chartbusters like Adiyae Kolluthae (Vaaranam Aayiram), Oru Chinna thaamarai (Vettaikkaaran), Vaadaa Binledaa (Mangathaa).
Hariharasudhan: His debut song Oothaa Kalaru ribbon from the movie Varuthappadaatha Vaalibar Sangam  has created a new wave among the youngsters and his Oththa kadai Oththa Kadai (Paandiyanaadu), Paarthu Paarthu (Manjappai) also became instant hits.
Velmurugan: He introduced with Mathura Kulunga in the film Subramanyapuram and in a very short span crooned mega hits like Aadungadaa (Nadodigal), oththa Sollaalae (Aadukalam), Venaam machaan Venaam (OKOK), Aambalaikkum Pombalikkum (Kazhugu), Sangili Bunfili (Kanchanaa), Pallaakku thevathaiya (Ithu Kathirvelan Kaathal).
Malathy Lakshman: A versatile singer who has the ability to sing in 40+ different kind of unique voices like
K.B.Sundaraambaal
Bangalore Ramani Ammaal
L.R.Eswari
S.Varalakshmi
Manorama
Dr.Vijayalakshmi Navaneethakrishnan
Chithra
Maalgudi Subha
Alka Yagnik
Usha Utup
Anupama
Sunitha Sarathy…and so on.
Her debut song Manamatha Raasaa from the movie Thirudaa Thirudi has created a rage in every nook and corner of TamilNadu and she has super hits like Kumbida Pona Deivam (Thiruppaachi), Gundu Maangaa (Sachin), En peru meenaa kumaari (Kandasaamy), Ummaa Ummammaa (Adithadi), Raangi Rangammaa (Padikkaathavan), Kodiyavanin Kathaiyai (Kanchana)… to her credit. She is also singing for Telugu, Kannada, Malayalam, Hindi films.
Roshini: She introduced with Pottu Thaakku song along with Simbu in the movie Kuththu (music by Srikanth Deva) and joined Isai Gnani Ilayaraja for Namma Kaattula (Pattiyal). Her other hit songs includes Karuppaana Kaiyaala (Thamirabarani), En jannal vantha kaatre (Theeraatha Vilayaattu Pillai).
Sai Saran: Proud winner of Airtel Super Singer Contest. Introduced to the Kollywood with Music Director Iman’s Dang Dang diga diga (Manam Koththi Paravai) and has the ability to sing variety of songs with ease.
Anu: One of the Top 10 singers in the Airtel Super Singer – Junior series and a favorite among audiences of all age.
Anitha: Runner up in Airtel Super Singer - Celebrity Season. She has a enviable acting career too. Yes… She is the younger daughter to our beloved Super Star Rajnikanth in the movie Padayappa and acted in famous TV serials like Uthiripookkal, Valli, Sivasankari, Deivamagal…also.
So, with this attractive line up of singers, we believe Lakshman Sruthi’s tour to US & Canada this October will be a mega hit for sure.
Show Date, Timing, Location and Contact Nos :
October 3, 2014 – Austin
Friday Eve : 07:00 pm – 512 785 2681, 512 773 6754
October 4, 2014 – San diego
Saturday Eve : 03:00 pm – 859 859 0078, 858 342 5260
October 5, 2014 – Seattle
Sunday Eve : 04:00 pm – 425 785 7316
October 10, 2014 – Dallas
Friday Eve : 7:00 pm – 972 423 8560
October 11, 2014 – Chicago
Saturday Eve : 06:00 pm – 630 506 1234
October 12, 2014 – St.Louis
Sunday Aftn : 02:00 pm – 312 566 7009, 314 878 5251
October 17, 2014 – Sacramento
Friday Eve : 07:00 pm – 916 509 1916, 916 452 5881 (Chief guest -Gangai Amaran)
October 18, 2014 – San Jose
Saturday Eve : 05:00 pm – 510 305 9285 ( Chief guest - Gangai Amaran & Vivek )
October 19, 2014 – Vancouver (Canada)
Sunday Eve : 06:00 pm – 604 275 1471
October 24, 2014 – Rochester
Friday Eve : 07:00 pm –585 802 0119,
585 978 0096, 585 734 8480
Sraje@yahoo.com, rtsevents@gmail.com
October 25, 2014 – Philadelphia
Saturday Eve : 06:30 pm – 610 630 0276, 484 620 1747
October 26, 2014 – Washington DC
Sunday Eve 04:00 – 703 725 9199, 703 939 5469
Fans from their respective places in US can enjoy and celebrate these shows with their friends and relatives without any language barrier. This musical series is for all the age categories such as Children, Teen agers, Families and Senior citizens. So, there is no doubt this would be a full packed family entertainer.
As a special attraction, Lakshman Sruthi’s director Mr.Lakshman, who himself a mimicry artist will perform so many mimicry and standup comedies and different kind of performances which are going to blast you all.
The shows which are going to held at USA and Canada is fully organized and governed by Mrs. Kala Iyer. She is residing at San Jose, California. For program details, tickets and advertisements, please contact her at 510 305 9285.
5th pillar is an Indian organization which leads a movement towards NO BRIBE in the society. It also having  a branch at Washington DC. It’s founder is MR.Vijay Anand is co-oridinating for all these shows. 301 591 0986, www.5thpillar.org
The proud sponsors for this musical series are Lyca mobile, Sakthi masala, Malar properties and Nila sea foods.
Apart from Yoga and Meditation, Music also treats people to lead an happy and healthy life by alleviating our day to day tension, depression and stress in a soothing manner.
 
That sort of beautiful soul stirring music is going to flow in various cities of USA by Lakshman Sruthi. To escape the pressure of today’s economically demanding speedy lifestyle, all the Tamil people there need to invite their family members, friends and relatives to this show and let us all enjoy the events happily is our humble request.
So share, send and spread the news about these programs in social medias like twitter, what’s app, SMS, google+, linked in, websites, personal emails. Make your people to fill the halls, also through phone calls and celebrate the real taste of joyfulness and music.
All these 12 shows have been arranged with so much of painstaking efforts by the organisations and the people associated with are working hard, despite of their hectic schedule and official commitments. To make these shows a tremendous success, we need united effort from the performers and you, the audience. We are expecting your help and co-operation and sure it will help us to do more and more different shows in the future.
We request you all to support the singers along with Lakshman sruthi the team which is going to travel thousands of miles from India to US, to produce the best show in front of the audience.
Tickets available at www.sulekha.com 
Follow us : 
www.lakshmansruthi.com &
https://www.facebook.com/LakshmanSruthi

by Swathi   on 10 Oct 2014  0 Comments
Tags: Lakshman Sruthi   க்ரிஷ்   கலாலயா   ஹரிஹரசுதன்   வேல்முருகன்   மாலதி லஷ்மன்   வேல்முருகன்  
 தொடர்புடையவை-Related Articles
எங்கள் தமிழ் மகள் எங்கள் தமிழ் மகள்
வேல்முருகன் போர்வேல்ஸ், ரஜினி நடித்துள்ள லிங்கா படத்தின் கதை அல்ல !! வேல்முருகன் போர்வேல்ஸ், ரஜினி நடித்துள்ள லிங்கா படத்தின் கதை அல்ல !!
லஷ்மன் ஸ்ருதி இசைக்குழுவின்வட அமெரிக்கா மற்றும் கனடா சுற்றுப் பயணம் லஷ்மன் ஸ்ருதி இசைக்குழுவின்வட அமெரிக்கா மற்றும் கனடா சுற்றுப் பயணம்
13வது உலகத் தமிழ் இணைய மாநாடு -2014 உத்தமம் 13வது உலகத் தமிழ் இணைய மாநாடு -2014 உத்தமம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.