LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- சிங்கப்பூர்

சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ காலமானார் !!

சிங்கப்பூர் முதல் பிரதமர் லீ குவான் யூ காலமானார் என்று சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவருக்கு வயது 91.

பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து சிங்கப்பூர் விடுதலை பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்த லீ க்வான் யூ, பின்னர் மலேசியாவிடமிருந்து சிங்கப்பூர் பிரிந்து வருவதற்கும் நடவடிக்கை எடுத்தார். சிங்கப்பூரின் முதல் பிரதமராக பதவியேற்ற லீ குவான் யூ, 31 ஆண்டுகள் பிரதமராக இருந்தார். இவரது ஆட்சிக்காலத்தில்தான் அதுவரை துறைமுக நகரமாக அறியப்பட்ட சிங்கப்பூர் பிரம்மிக்கும் வகையில் வர்த்தக நகரமாக உருமாறியது.

சிங்கப்பூரில் தமிழர்கள், சீனர்கள், மலேசியர்கள் ஆகிய மூன்று தேசிய இனங்களையும் ஒருங்கிணைத்து, அவர்களின் பாசத்தையும், பேராதரவையும் பெற்ற இவர். தமிழ், சிங்கப்பூரில் ஆட்சி மொழிகளில் ஒன்றாக இருப்பதற்குக் காரணகர்த்தாவும் லீ குவான் யூ தான்.

நியுமோனியாவினால் பாதிக்கப்பட்ட லீ குவான் யூ, சில வாரங்களுக்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததாக தகவல் வெளியாக, நூற்றுக்கணக்கான சிங்கப்பூர் மக்கள் மலர்களை வைத்து நாட்டின் முதலாவது பிரதமரின் உடல் நலனுக்காக பிரார்த்தனை செய்தனர்.

இந்நிலையில் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 3.18 மணிக்கு அமைதியான முறையில் அவரது உயிர் பிரிந்ததாக சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது. லீ குவான் யூவின் மறைவுக்கு சிங்கப்பூர் மக்கள் மட்டுமல்லாது, உலக தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  

by Swathi   on 23 Mar 2015  0 Comments
Tags: Lee Kuan Yew   Singapores Father Lee Kuan Yew   Lee Kuan Yew Death   லீ குவான் யூ   சிங்கப்பூரின் தந்தை   சிங்கப்பூர் முதல் பிரதமர்     
 தொடர்புடையவை-Related Articles
இரங்கற்பா  பாடுதற்கு இறையருள் பெற்றவனே !! இரங்கற்பா பாடுதற்கு இறையருள் பெற்றவனே !!
சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ காலமானார் !! சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ காலமானார் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.