LOGO
  முதல் பக்கம்    மற்றவை     Print Friendly and PDF
- மற்றவை

தடைகளை தகர்ப்போம்

படியேற பயந்தேன். ஏறிய பின் வியந்தேன். வெற்றியின் தூரம் வெகு தூரம் இல்லை என்று.

நம்மிடம் உள்ள திறமைகளை வெளிப்படுத்த கிடைக்கும் சந்தர்ப்பங்களை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

நாம் என்ன நினைக்கிறோமோ அதை அடைவதற்கான முயற்சியின் முதல் படிதான் நமக்கு கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்துவது. விதையை விதைக்கும்போது அந்த விதை விதைப்பதற்கு ஏற்றதா என்பதை எப்படி பரிசீலிக்கும் அனுபவம் முக்கியமோ அதுபோல கிடைக்கின்ற வாய்ப்புகளை சரிதானா என்பதை பரிசீலித்து விட்டு விதையை சரியாக உழவு செய்யப்பட்ட நிலத்தில் பயிரிடுவது போல நமது உள்ளத்தில்

விதைத்துவிடவேண்டும். நிலத்திற்குள் உள்ள விதைக்கு எப்படி நல்ல தண்ணீரும், அதை பராமரிக்கும் ஒரு தோட்டக்காரனும் முக்கியமோ, அதேபோல் நமது உள்ளத்தை நல்ல அனுபவமிக்கவர்களின் புத்தகத்தின் மூலமாகவும், நல்ல நண்பர்கள் மூலமாகவும், மனதில் உள்ள விதைக்கு உரமூட்ட வேண்டும். வளர்ந்து வருகிற மரம் நிச்சயம் காய் கொடுக்கும் என்ற நம்பிக்கை எப்படி வெற்றி பெறுகிறதோ, அதே போல் நமக்குள் இருக்கும் இந்த தாக்கத்திற்கு வெற்றி கிடைத்தே தீரும்.

ஏழ்மையாக உள்ளவர்கள்கூட எளிதாக வெற்றி பெறவேண்டும் என்றால் ஒவ்வொருவரும் தனக்கு ஏற்படுகிற தடைகளை கண்டு தயங்காமல் தனது பயணத்தை துவங்க வேண்டும். அந்த பயணத்தில் வரக்கூடிய இடையூறுகள், எதிர்ப்பு, ஏளனம், எதிர்பார்ப்பு ஆகிய மூன்றும்தான். ஒவ்வொரு மனிதனும் இந்த மூன்றையும் கடந்துதான் வெற்றி பெறமுடியும்.

இதை வெல்வது சுலபமா, சிரமமா?

நிலத்தில் விதைத்த விதை காய்க்குமா? காய்க்காதா? என்ற சந்தேகம் இல்லாமல் நிச்சயம் காய்க்கும் என்ற நம்பிக்கை எப்படி சாத்தியமோ அதே போல் நமது இலக்கை நோக்கி செல்லக்கூடிய இடத்திற்கு இதுபோன்ற தடங்கல்களை தகர்ப்பது என்பது மிக சாதாரணமாகிவிடும்.

பிரச்சினைகளை கண்டு நாம் ஓடத் துவங்கினால் அது நம்மை துரத்த ஆரம்பிக்கும். அதே பிரச்சினையை எதிர்நோக்கி இருந்தால் எந்த பிரச்சினையாக இருந்தாலும் சுலபமாக தீர்வு காண முடியும்.

ஏழ்மையாக இருந்த ஒரு இளைஞன் ஒரு ஓட்டப் பந்தயத்தில் பங்கு பெற நினைத்து தன்னை தயார்படுத்துவதற்காக தினமும் அதற்கு தேவையான பயிற்சியை மிக நேர்த்தியாக செய்து வருகிறான். தனக்குள் வெற்றி பெறமுடியும் என்ற நம்பிக்கை ஆழமாக பதிய வைத்துக்கொண்டு பயிற்சியை தொடர்கிறான்.

போட்டியின் தேதி அறிவிக்கப்படுகிறது. அந்த போட்டியில் கலந்து கொள்ள தனது பெயரை பதிவு செய்யும்போது அனைவரும் அவரின் தோற்றத்தைப் பார்த்து உனக்கெல்லாம் இந்த போட்டி தேவைதானா, வேண்டாம் என்று எதிர்த்தவர்கள் பலர். அதையும் மீறி பெயர் பதிவு செய்தாகிவிட்ட பிறகு “இவனுக்கு எல்லாம் ஆசையை பார், எவ்வளவு நாள் விளையாட்டில் இருப்பவர்கள் எல்லாம் ஓடும்போது இவன் போய் அவர்களோடு சேர்ந்து ஓட நினைக்கிறான் பாரு” என்று ஏளனமாக பேசுபவர்களையும் தாண்டி, போட்டியின் நாளை எதிர்நோக்கி இருந்தவனுக்கு போட்டியில் ஓட வாய்ப்பு கிடைத்தது. அப்பொழுதுகூட இவனுக்கு ஆறுதல் சொல்லக்கூட ஆள் இல்லை. அதையும் மீறி வெற்றி பெறுவது மட்டுமே தனது இலக்கு என்பதைத் தவிர வேறு எந்த எதிர்பார்ப்பும் இல்லாத அவனுக்கு அருகில் இருந்தவர்கள் அனைவரின் எதிர்பார்ப்பும் இவன் ஓடுகிறான் வெற்றி பெறுவானா என்றே இருந்தது. ஆனால் போட்டி ஆரம்பித்தவுடன் “மடை திறந்த வெள்ளம்” போல் ஓடுகிறான். மிகப்பெரிய வெற்றியை அடைகிறான்.

வெற்றிக்குப் பிறகு ஏராளமானோர் பாராட்டுகிறார்கள், மாலை போடுகிறார்கள், வெற்றி பெறுவாய் என்பது எங்களுக்குத் தெரியும் என்று வாய் கூசாமல் பொய் சொல்லும் கூட்டம். இவைகள் எப்படி சாத்தியம் ஆகியதோ, அதே போல்தான் ஒவ்வொரு முறையும் வெற்றி பெற வேண்டும்.

நமது இலக்கு எதை நோக்கி இருக்கிறது என்பதுதான் முக்கியமே தவிர நம்மை நோக்கி வீசப்படுகிற எதிர்ப்பு, ஏளனம், எதிர்பார்ப்புகள் முக்கியம் அல்ல.

விதையை விதைத்திடுவோம்
விழிப்புடனே இருந்திடுவோம்!
மரமாய் வளரும் வரை
மகிழ்ச்சியாய் இருந்திடுவோம்!
பூக்கள் பூக்கும் வரை
பூரிப்பாய் இருந்திடுவோம்!
காய்களாய் மாறும் வரை
கவனமாய் இருந்திடுவோம்!
காத்திருந்த காலமெல்லாம்
கனவாக போகாமல்
கனிகளை நாம் பெறுவோம்
நலமாய் நாம் வாழ்வோம்!

நன்றி

by Swathi   on 21 Sep 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
Transformational Leadership Amazing speech by Actor, HR expert Raja Krishnamoorthy Transformational Leadership Amazing speech by Actor, HR expert Raja Krishnamoorthy
எழுத்தாளர் - சிந்தனையாளர் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி உரை - பகுதி 2 எழுத்தாளர் - சிந்தனையாளர் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி உரை - பகுதி 2
எழுத்தாளர் சிந்தனையாளர் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி உரை 1 |  Dr. MS Udayamurthy Speech எழுத்தாளர் சிந்தனையாளர் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி உரை 1 | Dr. MS Udayamurthy Speech
டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் உரை, மேரிலாந்து டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் உரை, மேரிலாந்து
தலைமைப் பண்புகளை வளர்க்க பரிந்துறைக்கபட்ட சிறந்த புத்தகங்கள் தலைமைப் பண்புகளை வளர்க்க பரிந்துறைக்கபட்ட சிறந்த புத்தகங்கள்
உங்கள் தொழிலை வெற்றிகரமாக நடத்த பின்பற்ற வேண்டிய 15 வழிகள்!! உங்கள் தொழிலை வெற்றிகரமாக நடத்த பின்பற்ற வேண்டிய 15 வழிகள்!!
வெற்றிப்பாதையில் விரைந்து செல்வோம்! 4 – வெற்றி பெற வேண்டிய எட்டு அம்சங்கள்: வெற்றிப்பாதையில் விரைந்து செல்வோம்! 4 – வெற்றி பெற வேண்டிய எட்டு அம்சங்கள்:
வெற்றிப் பாதையில் விரைந்து செல்வோம் : வெற்றியாளர்களின் தனிக்குணங்களா?– என்ன தான் அவை? - 3 வெற்றிப் பாதையில் விரைந்து செல்வோம் : வெற்றியாளர்களின் தனிக்குணங்களா?– என்ன தான் அவை? - 3
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.