LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

ரஜினியின் லிங்கா பட பாடல்கள் விவரம் !!

கே.எஸ்ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள லிங்கா படத்தின் இசை வெளியீட்டு விழா 16 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், தற்போது லிங்கா படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் விபரம் வெளியாகியுள்ளன. 


படத்தில் மொத்தம் 5 பாடல்கள் உள்ளன. இதில் நான்கு பாடல்களை கவிஞர் வைரமுத்து எழுதியுள்ளார், ஒரு பாடலை வைரமுத்துவின் மகன் மதன் கார்கி எழுதியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.  


பாடல்கள் விபரம்.. 


01. ஓ நண்பா.... என்ற பாடலை வைரமுத்து எழுத, எஸ்.பி.பி.யும், ஆர்யன் தினேஷூம் பாடியுள்ளனர்.


02. என் மன்னவா..  எனும் பாடலை வைரமத்து எழுத ஸ்ரீனிவாஸ், அதிதீ பால் பாடியுள்ளனர்.


03. இந்தியனே வா...  எனும் பாடலை வைரமுத்து எழுத, ஏ.ஆர்.ரஹ்மான் பாடியிருக்கிறார்.


04. மோனா கசோலினா...  எனும் பாடலை மதன்கார்கி எழுத, மனோ, நீத்தி மோகன், தன்வி ஷா பாடியுள்ளனர்.


05. உண்மை ஒருநாள் வெல்லும்...  பாடலை வைரமுத்து எழுத, ஹரிச்சரண் பாடியுள்ளார். 


இதனிடையே வைரமுத்து லிங்கா படத்தின் இரண்டு பாடல்களை இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 


அதன் பாடல்கள் விபரம்.... 


முதல் பாடல் 


"ராஜா ராணி உடைகளில் ரஜினியும் - சோனாக்ஷி சின்ஹாவும் பாடும் பாடல்"


பெண் : என் மன்னவா! மன்னவா!

என்னைவிட அழகி உண்டு - ஆனால்

உன்னைவிட உன்னைவிடத்

தலைவன் இல்லை – ஆமாம்

உன்னைவிட உன்னைவிடத்

தலைவன் இல்லை


பெண் : சின்னச் சின்ன நட்சத்திரம்

பறிக்க வந்தாய் - இந்த

வெண்ணிலவை வெண்ணெய் பூசி

விழுங்கி விட்டாய்

அதிவீரா

உயிரை உயிரால் தொடுவீரா?


உன் கண்களோ உன் கண்களோ

பூ தேடுதே

உன் கைகளோ உன் கைகளோ

வேர் தேடுதே


பெண் : நூறு யானைகளின் 

தந்தம் கொண்டு ஒரு

கவசம் மார்பில் அணிந்தாய்

கலசம் கொண்டு அந்தக் கவசம் உடைத்து

உன் மார்பில் மையமிட்டேனே 


ஆண் : தென்னாட்டுப் பூவே

தேனாழித் தீவே

பாலன்னம் நீ – நான்

பசிகாரன் வா வா


மோகக் குடமே

முத்து வடமே

உந்தன் கச்சை மாங்கனி

பந்திவை ராணி


ஆண் : வெய்யில் பாராத

வெள்ளைப் பூக்களைக்

கையில் தருவாய் கண்ணே

ஏழு தேசங்களை வென்றமன்னன் உன்

கால் சுண்டுவிரல் கேட்டேனே


பெண் : சிற்றின்பம் தாண்டிப்

பேரின்பம் கொள்வோம்

உயிர் தீண்டியே நாம்

உடல் தாண்டிப் போவோம்


ஞான அழகே

மோன வடிவே

என்னைக் கூடல்கொள்ள வா

கொற்றவை மைந்தா


ஆண் : சின்னச் சின்ன நட்சத்திரம்

பறிக்க வந்தேன் - இந்த

வெண்ணிலவை வெண்ணெய் பூசி

விழுங்கி விட்டேன்


பெண் : அதிவீரா

உயிரை உயிரால் தொடுவீரா?



இரண்டாம் பாடல்


நன்மை செய்து துன்பம் பெற்ற ரஜினியின் உடைந்த மனதுக்கு ஆறுதல் சொல்லும் பாடல்


உண்மை ஒருநாள் வெல்லும் – இந்த

உலகம் உன்பேர் சொல்லும் - அன்று

ஊரே போற்றும் மனிதன் நீயே நீயடா நீயடா


பொய்கள் புயல்போல் வீசும் – ஆனால்

உண்மை மெதுவாய்ப் பேசும் – அன்று

நீயே வாழ்வில் வெல்வாய்


கலங்காதே

கலங்காதே


 

ராமனும் அழுதான்
தர்மனும் அழுதான்
நீயோ அழவில்லை
உனக்கோ அழிவில்லை
ஆணியாகப் பிறந்தாய் - உனக்கு
அடிகள் புதிதில்லை
கலங்காதே
கலங்காதே
கரையாதே
*
சிரித்துவரும் சிங்கமுண்டு
புன்னகைக்கும் புலிகளுண்டு
உரையாடி உயிர்குடிக்கும் ஓநாய்கள் உண்டு
பொன்னாடை போர்த்திவிட்டு
உன்னாடை அவிழ்ப்பதுண்டு
பூச்செண்டில் ஒளிந்திருக்கும் பூநாகம் உண்டு
பள்ளத்தில் ஓர்யானை வீழ்ந்தாலும் - அதன்
உள்ளத்தை வீழ்த்திவிட முடியாது
*
சுட்டாலும் சங்கு நிறம்
எப்போதும் வெள்ளையடா
மேன்மக்கள் எந்நாளும் மேன்மக்கள் தானே
கெட்டாலும் நம்தலைவன்
இப்போதும் ராஜனடா
வீழ்ந்தாலும் வள்ளல்கரம் வீழாது தானே!
பொன்னோடு மண்ணெல்லாம் போனாலும் - அவன்
புன்னகையைக் கொள்ளையிட முடியாது

ராமனும் அழுதான்

தர்மனும் அழுதான்

நீயோ அழவில்லை

உனக்கோ அழிவில்லை


ஆணியாகப் பிறந்தாய் - உனக்கு

அடிகள் புதிதில்லை


கலங்காதே

கலங்காதே

கரையாதே


*

சிரித்துவரும் சிங்கமுண்டு

புன்னகைக்கும் புலிகளுண்டு

உரையாடி உயிர்குடிக்கும் ஓநாய்கள் உண்டு


பொன்னாடை போர்த்திவிட்டு

உன்னாடை அவிழ்ப்பதுண்டு

பூச்செண்டில் ஒளிந்திருக்கும் பூநாகம் உண்டு


பள்ளத்தில் ஓர்யானை வீழ்ந்தாலும் - அதன்

உள்ளத்தை வீழ்த்திவிட முடியாது


*

சுட்டாலும் சங்கு நிறம்

எப்போதும் வெள்ளையடா

மேன்மக்கள் எந்நாளும் மேன்மக்கள் தானே


கெட்டாலும் நம்தலைவன்

இப்போதும் ராஜனடா

வீழ்ந்தாலும் வள்ளல்கரம் வீழாது தானே!


பொன்னோடு மண்ணெல்லாம் போனாலும் - அவன்

புன்னகையைக் கொள்ளையிட முடியாது

 

by Swathi   on 13 Nov 2014  0 Comments
Tags: என் மன்னவா! மன்னவா! பாடல் வரி   En Mannava Mannava Song Linga   Linga Song   Lingaa Movie   Rajini Lingaa   லிங்கா   லிங்கா பாடல்கள்  
 தொடர்புடையவை-Related Articles
முடிவுக்கு வந்தது லிங்கா பட பிரச்சனை !! முடிவுக்கு வந்தது லிங்கா பட பிரச்சனை !!
விஜய், ரஜினியை தொடர்ந்து களம் இறங்கும் அதர்வா !! விஜய், ரஜினியை தொடர்ந்து களம் இறங்கும் அதர்வா !!
லிங்கா இன்னமும் 521 திரையரங்குகளில் ஓடுகிறதாம் !! லிங்கா இன்னமும் 521 திரையரங்குகளில் ஓடுகிறதாம் !!
லிங்கா படத்தால் நஷ்டமா... வேந்தர் மூவிஸ் அறிக்கை... லிங்கா படத்தால் நஷ்டமா... வேந்தர் மூவிஸ் அறிக்கை...
முதல் நாள் வசூலில் எந்திரனை முந்திய லிங்கா !! முதல் நாள் வசூலில் எந்திரனை முந்திய லிங்கா !!
லிங்கா இதுவரை - தெரிந்ததும்... தெரியாததும்... லிங்கா இதுவரை - தெரிந்ததும்... தெரியாததும்...
வேல்முருகன் போர்வேல்ஸ், ரஜினி நடித்துள்ள லிங்கா படத்தின் கதை அல்ல !! வேல்முருகன் போர்வேல்ஸ், ரஜினி நடித்துள்ள லிங்கா படத்தின் கதை அல்ல !!
5000 திரையரங்குகளில் அதிரப்போகும் லிங்கா !! 5000 திரையரங்குகளில் அதிரப்போகும் லிங்கா !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.