LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

முதல் நாள் வசூலில் எந்திரனை முந்திய லிங்கா !!

கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்த லிங்கா திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியானது.

தமிழகம் முழுவதும் 700 திரையரங்குகளுக்கு மேல் வெளியான லிங்கா திரைப்படம் நள்ளிரவு 1 மணி, அதிகாலை 4 மணி, காலை 8 மணிக்கு சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டன. அதன்பிறகுதான் வழக்கமான நேரங்களில் காட்சிகள் இருந்தன. இன்றும் காலை 8 மணிக்கு சிறப்புக் காட்சி திரையிடப்படுகிறது. நாளையும் இந்தக் காட்சி உண்டு என சில தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

லிங்கா திரைப்படம் வெளியான நேற்று ஒருநாளில் மட்டும் ரூ 17 கோடியை தமிழகத்தில் குவித்திருப்பதாக முதல் கட்ட செய்தி வந்துள்ளது. தமிழகத்தில் முதல் நாளில் ரூ 11 கோடியை எந்திரன் வசூலித்திருந்ததுதான் இதுவரை சாதனையாக இருந்தது.

ஆந்திராவில் லிங்காவுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. அங்கு முதல் நாளில் ரூ 8 கோடி வசூலாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கேரளா மற்றும் கர்நாடகத்தில் லிங்கா வசூல் நிலவரம் தெரியவில்லை. வெளிநாடுகளில் 1000-க்கும் அதிகமான அரங்குகளில் லிங்கா வெளியானது. அங்கு படத்துக்கு பெரிய வரவேற்பும் வசூலும் கிடைத்துள்ளதாக விநியோகிஸ்தர்கள் தெரிவித்துள்ளார்.

by Swathi   on 13 Dec 2014  0 Comments
Tags: Lingaa   Endhiran   Box Office Collection   Frist Day Collection   லிங்கா   எந்திரன்   முதல் நாள் வசூல்  
 தொடர்புடையவை-Related Articles
100 நாட்களில் 50% படப்பிடிப்பு நிறைவு - இது எந்திரன் 2.0 அப்டேட்!! 100 நாட்களில் 50% படப்பிடிப்பு நிறைவு - இது எந்திரன் 2.0 அப்டேட்!!
அர்னால்டுக்கு பதில் அக்‌ஷய் குமார்.. இது எந்திரன் 2.0 அப்டேட்.. அர்னால்டுக்கு பதில் அக்‌ஷய் குமார்.. இது எந்திரன் 2.0 அப்டேட்..
புலியின் ஒரு வார வசூல் 71 கோடியாம் !! புலியின் ஒரு வார வசூல் 71 கோடியாம் !!
எந்திரன் 2-வில் வில்லனாகிறாராம் அர்னால்ட் !! எந்திரன் 2-வில் வில்லனாகிறாராம் அர்னால்ட் !!
முடிவுக்கு வந்தது லிங்கா பட பிரச்சனை !! முடிவுக்கு வந்தது லிங்கா பட பிரச்சனை !!
விஜய், ரஜினியை தொடர்ந்து களம் இறங்கும் அதர்வா !! விஜய், ரஜினியை தொடர்ந்து களம் இறங்கும் அதர்வா !!
ஷங்கரின் அடுத்த படத்தில் ரஜினி - ஐஸ்வர்யாராய் - அமீர்கான் கூட்டணியா? ஷங்கரின் அடுத்த படத்தில் ரஜினி - ஐஸ்வர்யாராய் - அமீர்கான் கூட்டணியா?
இரண்டே நாளில் 20 கோடி வசூல் செய்த அனேகன் !! இரண்டே நாளில் 20 கோடி வசூல் செய்த அனேகன் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.