கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் லிங்கா.
இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கும் ரஜினிகாந்துக்கு ஜோடியாக அனுஷ்காவும், சோனாக்சி சின்ஹாவும் நடித்துள்ளனர். மேலும் காமெடியன் வேடத்தில் நடிகர் சந்தானம் நடித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான லிங்கா ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
லிங்கா படத்தின் படபிடிப்புகள், டப்பிங், ரீரெக்கார்டிங் என அனைத்து வேலைகளும் முடிவடைந்து சமீபத்தில் படத்தை தணிக்கைக்கு அனுப்பினர். படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் ஒரு காட்சிக்கும் ஆட்சேபம் தெரிவிக்காமல், எந்த காட்சியையும் வெட்டாமல் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர்.
தணிக்கை சான்று கிடைத்து விட்டதால் ஒரிரு நாளில் படம் ரிலீஸ் தேதி அதிகார பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
|