LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    காய்கறிகள்-கீரைகள்-பூக்கள் Print Friendly and PDF

உடலின் ஆரோக்கியத்திற்கு அவசியமான காய் : பீர்க்கங்காய் !!

நமது உடலின் ஆரோக்கியத்திற்கு அவசியமான அத்தனை உயிர்ச்சத்துகளையும் உள்ளடக்கிய காய் பீர்க்கங்காய்.

இதில் வைட்டமின் சி, துத்தநாகம், இரும்பு, ரிபோஃப்ளோ வின், மெக்னீசியம், தயாமின், நார்ச்சத்து உள்ளிட்ட அனைத்துச் சத்துகளும் உள்ளன. இந்த காய் குறைந்த கலோரிகளை கொண்டது.

மலச்சிக்கலுக்கு மாமருந்து :

இது செல்லுலோஸ் மற்றும் நீர்ச்சத்து மிகுந்த காய் என்பதால் மலச்சிக்கலுக்கும், மூல நோய்க்கும் மாமருந்தாக பயன்படுகிறது.

சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது :


பீர்க்கங்காயில் உள்ள பெப்டைட் மற்றும் ஆல்கலாயிட் என்கிற இரண்டும் இயற்கையான இன்சுலினாக செயல்படுவதால், ரத்தம் மற்றும் சிறுநீரில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.

பார்வைத் திறன் அதிகரிக்க உதவுகிறது :

பீர்க்கங்காயில் உள்ள அதிகளவிலான பீட்டாகரோட்டின், பார்வைக் கோளாறுகள் வராமலும், பார்வைத் திறன் சிறக்கவும் உதவுகிறது.

பாதிக்கப்பட்ட கல்லீரலைத் தேற்றுகிறது :

ரத்தத்தை சுத்திகரிப்பதிலும் பீர்க்கங்காயின் பங்கு மகத்தானது. கல்லீரல் ஆரோக்கியம் காப்பதிலும், குடிப்பழக்கத்தால் பாதிக்கப்பட்ட கல்லீரலைத் தேற்றுவதிலும் கூட பீர்க்கங்காய் பயன்படுகிறதாம்.

மஞ்சள் காமாலைக்கு மருந்து :

மஞ்சள் காமாலை நோய்க்கு பீர்க்கங்காய் சாறு மருந்தாகப் பரிந்துரைக்கப்படுகிறது. தொற்றுக் கிருமிகள் தாக்காமல் உடலைக் காத்து, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.

சரும நோய்களை குணப்படுத்துகிறது :

தொடர்ந்து பீர்க்கங்காய் சாப்பிடுகிறவர்களின் சருமம் பருக்களோ, மருக்களோ இல்லாமல் தெளிவாகிறது. சரும நோய்கள் இருப்பவர்களுக்கு ரத்தத்தை சுத்தப்படுத்தி, நோயைக் கட்டுப்படுத்துகிறது. வயிற்றில் அமிலச் சுரப்பு அதிகமாவதைத் தடுத்து, புண்கள் வராமலும் காக்கும்.

உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் :

ஒட்டுமொத்த உடலையுமே குளிர்ச்சியாக வைத்திருக்கக் கூடியது. சிறுநீர் கழிக்கும் போது உருவாகும் எரிச்சலைக் கட்டுப்படுத்தக்கூடியது.

உடல் எடை குறைக்க :

எடை குறைக்க முயற்சி செய்கிறவர்களுக்கு பீர்க்கங்காய் மிக அவசியம். நீர்ச்சத்து அதிகம் என்பது முக்கிய காரணம். பீர்க்கங்காய் சேர்த்த உணவுகளை உண்ணும்போது நீண்ட நேரத்துக்குப் பசி எடுப்பதில்லை.

சொறி, சிரங்கு குணமாகும் :

பீர்க்கை இலைகளை அரைத்து, சொறி, சிரங்கு, நாள்பட்ட புண்களில் பற்று போட்டால் அவை சீக்கிரமே குணமாகும்.

பீர்க்கங்காய் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை :

அடர் பச்சை நிறத்தில், இறுக்கமான தோல் கொண்ட காயாக இருக்க வேண்டும். காம்புப் பகுதியும் பசுமையாக இருக்க வேண்டும். கனமானதாகவும், உறுதியாகவும் இருக்க வேண்டும். தோல்களில் வெடிப்போ, நிறமாற்றமோ இருந்தால் வாங்கக்கூடாது. மேலும் பீர்க்கங்காய் நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் நிறைந்த ஒரு காய் என்பதால் உடனுக்குடன் சமைத்து விடுவது சிறந்தது.  

by Swathi   on 27 Sep 2015  2 Comments
Tags: பீர்க்கங்காய்   பீர்க்கங்காய் மருத்துவ குணங்கள்   பீர்க்கங்காய் மருத்துவ பயன்கள்   பீர்க்கங்காய் பயன்கள்   உடல் எடை குறைய   ஆரோக்கியம் பீர்க்கங்காய்   பீர்க்கங்காய் வாங்குவது எப்படி  

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
பீர்க்கங்காய் கடைசல் பீர்க்கங்காய் கடைசல்
உடலின் ஆரோக்கியத்திற்கு அவசியமான காய் : பீர்க்கங்காய் !! உடலின் ஆரோக்கியத்திற்கு அவசியமான காய் : பீர்க்கங்காய் !!
இளமையிலே தொப்பை எட்டி பாக்கிறதா உங்களுக்கு... இளமையிலே தொப்பை எட்டி பாக்கிறதா உங்களுக்கு...
பப்பாளி பழத்தின் சிறந்த 15 முக்கிய மருத்துவ குணங்கள் !! பப்பாளி பழத்தின் சிறந்த 15 முக்கிய மருத்துவ குணங்கள் !!
பால் கலக்காத டீ உடல் எடையை குறைக்குமா ? பால் கலக்காத டீ உடல் எடையை குறைக்குமா ?
உடற்பயிற்சி செய்யாமல் தொப்பையை குறைக்க 3 டிப்ஸ் !! உடற்பயிற்சி செய்யாமல் தொப்பையை குறைக்க 3 டிப்ஸ் !!
உயரமான படிக்கட்டுகளால் தொப்பை குறையுமா ? உயரமான படிக்கட்டுகளால் தொப்பை குறையுமா ?
உடல் இளைக்க வேண்டுமா ? உடல் இளைக்க வேண்டுமா ?
கருத்துகள்
02-Dec-2016 10:47:30 Jersin said : Report Abuse
Weight gain tips plz send Myemail
 
30-Jul-2016 14:55:49 deepa said : Report Abuse
நல்ல பயன்னுள்ள டிப்ஸ் ஆக இருக்குறது. மேலும் கூடுதலான விஷயங்களை சொல்லுங்க.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.