LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus  youtube 
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழிசை

தமிழ் இலக்கியங்களில் தமிழ் இசைக் கருவிகள்

இடக்கை


கத்தரிகை துத்திரக றங்குதுடி தக்கையொடு இடக்கைபடகம்
எத்தனையு லப்பில்கரு வித்திரள லம்பஇமை யோர்கள்பரச
ஒத்தற மிதித்துநட மிட்டவொரு வர்க்கிடம தென்பருலகில்
மெய்த்தகைய பத்தரொடு சித்தர்கள் மிடைந்துகளும் வேதவனமே 3.76.5
- திருஞானசம்பந்தர்

சிறுபறை (கஞ்சிரா)

துளைபடு குழலிசை துடியொடு சிறுபறை
கிளையொடு படலிகை கிளையொடு கிளர்தர
வளையொடு வயிரிசை மருவிய மழையென
சூளாமணி - 936

கொக்கரை

கொக்கரை குழல் வீணை கொடுகொட்டி
பக்க மேபகு வாயன பூதங்கள்
ஒக்க ஆட லுகந்துடன் கூத்தராய்
அக்கி னோடர வார்ப்பார் ஆரூரரே. 5.7.1
-திருநாவுக்கரசர்

கொம்பு


வெல் படைத் தருகண் வெஞ்சொல் வேட்டுவர் கூட்டம் தோறும்
கொல் ஏறி குத்து என்று ஆர்த்து குழுமிய ஓசை அன்றிச்
சில்லரித் துடியும் கொம்பும் சிறு கண் ஆகுளியும் கூடி
கல் எனும் ஒலியின் மேலும் கறங்கிசை அருவி எங்கும் 12.0654
- சேக்கிழார்

குழல் (புல்லாங்குழல்)

பறையுஞ் சிறுகுழலும் யாழும்பூதம் பயிற்றவே
மறையும் பலபாடி மயானத்துறையும் மைந்தனார்
பிறையும் பெரும்புனல்சேர் சடையினாரும் பேடைவண்
டறையும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே 1.45.6
-திருஞானசம்பந்தர்

முரசு

நரியைக் குதிரைசெய் வானும் நரகரைத் தேவுசெய் வானும்
விரதங்கொண்ட டாடவல் லானும் விச்சின்றி நாறுசெய் வானும்
முரசதிர்ந் தானை முன்னோட முன்பணிந் தன்பர்கள் ஏத்த
அவரவரைச் சாத்திநின் றானும் ஆரூ ரமர்ந்தஅம் மானே 4.4.2
-திருநாவுக்கரசர்

பறை

தெய்வம் உணாவே மாமரம் புட்பறை
செய்தியாழின் பகுதியோடு தொகைஇ
அவ்வகை பிறவும் கருவென பொழிப
-தொல்காப்பியம்

சங்கு


வாரேற்ற பறையொலியுஞ் சங்கொலியும் வந்தியம்ப
ஊரேற்ற செல்வத்தோ டோங்கியசீர் விழவோச்
சீரேற்ற முடைத்தாய் செங்காட்டங் குடியதனுள்
காரேற்ற கொன்றையான் கணபதீச் சரத்தானே. 1.61.2
-திருஞானசம்பந்தர்

சிலம்பு


அங்கே அடற்பெரும் தேரெல் லாம்தொழச்
சிங்கா தனத்தே சிவன் இருந் தானென்று
சங்குஆர் வளையம் சிலம்பும் சரேலெனப்
பொங்குஆர் குழலியும் போற்றிஎன் றானே. 10.2356
- திருமூலர்

தாளம்

சங்கொடு தாரை சின்னம் தனிப் பெரும் காளம் தாளம்
வங்கியும் ஏனை மற்று மலர் துளைக் கருவி எல்லாம்
பொங்கிய ஒலியின் ஓங்கிப் பூசுரர் வேத கீதம்
எங்கணும் எழுந்து மல்கத் திருமணம் எழுந்தது அன்றே. 12.3097
-சேக்கிழார்

தக்கை (உடல்)

குழையார் திருத்தோடு காதிற் கண்டேன்
கொக்கரையுஞ் சச்சரியுங் கொள்ளை கண்டேன்
இழையார் புரிநூல் வலத்தே கண்டேன்
ஏழிசை யாழ்வீணை முரலக் கண்டேன்
தழையார் சடைகண்டேன் தன்மை கண்டேன்
தக்கையொடு தாளங் கறங்கக் கண்டேன்
மழையார் திருமிடறும் மற்றுங் கண்டேன்
வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே.6.77.7
-திருநாவுக்கரசர்

தாரை
சங்கு துந்துபி தாரை பேரி இம்முதல்
பொங்கு பல்லிய நாதம் பொழிந்து எழ
அங்கணன் அருளால் அவை கொண்டு உடன்
பொங்கு காதல் எதிர் கொளாப் போதுவார். 12.2101
-சேக்கிழார்

திமிலை

சங்கொடு தாரை காளம் தழங்கொலி முழங்கு பேரி
வெங்குரல் பம்பை கண்டை வியன் துடி திமிலை தட்டி
பொங்கொலிச் சின்னம் எல்லாம் பொரு படை மிடைந்த பொற்பின்
மங்குல் வான் கிளர்ச்சி நாண மருங்கு எழுந்து இயம்பி மல்க. 12.581
-சேக்கிழார்

திருச்சின்னம்

திருச்சின்னம் பணிமாறக் கேட்ட நால்திசை உள்ளோர்
பெருக்கின்ற ஆர்வத்தால் பிள்ளையார் தமைச் சூழ்ந்த
நெருகின் இடையவர் காணா வகை நிலத்துப் பணிந்து உள்ளம்
உருக்கி எழும் மனம் பொங்கத் தொண்டர்
குழாத்துடன் அணைந்தார். 12.28:31
-சேக்கிழார்

துடி

துடிக ளோடு முழவம் விம்மவே
பொடிகள் பூசிப் புறங்கா டாரங்காகப்
படிகொள் பாணி பாடல் பயின்றாடும்
அடிகள் சோற்றுத் துறைசென் றடைவோமே. 1.28.6
-திருஞானசம்பந்தர்

துத்திரி (துத்தேரி)

கத்திரிகை துத்திரிக றங்குதுடி தக்கையொ டிடக்கைபடகம்
எத்தனையு லப்பில்கரு வித்திரள லம்பஇமை யோர்கள்பரச
ஒத்தற மிதித்துநட மிட்டவொரு வரக்கிடம தென்பருலகில்
மொய்த்தகைய பத்தரொடு சித்தர்கள் மிடைந்துகளும்
வேதவனமே 3.76.5
- திருஞானசம்பந்தர்

உடுக்கை

உண்டுடுக்கை யின்றியேநின் றூர்நகவேதிரிவார்
கண்டுடுக்கை மெய்யிற்போர்த்தார் கண்டறியாதவிடந்
தண்டுடுக்கை தாளந்தக்கை சாரநடம்பயில்வார்
பண்டிடுக்கன் தீரநல்கும் பல்லவனீச்சரமே. 1.65.10
- திருஞானசம்பந்தர்


Sangu
by Swathi   on 11 Apr 2018  0 Comments
Tags: Music Instruments   Tamil Literature   தமிழ் இலக்கியம்   இசைக் கருவி   தமிழ் இசைக் கருவி        
 தொடர்புடையவை-Related Articles
தமிழ் இலக்கியங்களில் தமிழ் இசைக் கருவிகள் தமிழ் இலக்கியங்களில் தமிழ் இசைக் கருவிகள்
தமிழ் இலக்கியத்தில் மேலாண்மையின் இடம் -இரா.தெ.முத்து தமிழ் இலக்கியத்தில் மேலாண்மையின் இடம் -இரா.தெ.முத்து
தமிழ் இலக்கியங்களில் இத்தனை நீர்நிலைகளின் வகைகளா? தமிழ் இலக்கியங்களில் இத்தனை நீர்நிலைகளின் வகைகளா?
தமிழ் இலக்கியத்தில் அறிவியல்.. R.இராஜராஜன் தமிழ் இலக்கியத்தில் அறிவியல்.. R.இராஜராஜன்
தொல்காப்பியமும் திருக்குறளும் - முனைவர் இர. பிரபாகரன் தொல்காப்பியமும் திருக்குறளும் - முனைவர் இர. பிரபாகரன்
சங்க இலக்கிய நூல்கள் 12-யை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த முதல் பெண்மணி ! சங்க இலக்கிய நூல்கள் 12-யை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த முதல் பெண்மணி !
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.