LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    காய்கறிகள்-கீரைகள்-பூக்கள் Print Friendly and PDF

பூமிக்கடியில் விளையும் பலவகையான கிழங்குகளும், அதன் மருத்துவ பயன்களும்....

வேரில் சத்துக்களை சேமிக்கும் கிழங்குவகை காய்கறிகளில் மாவுசத்துக்கள் அதிகமாக இருப்பதால், அவற்றை சாப்பிடுவதால், நமது உடலில் உள்ள சர்க்கரையின் அளவையும், மாவுப்பொருளின் அளவையும் சம நிலையில் வைப்பதில் அவை உதவி புரிகின்றன. அப்படிப்பட்ட பலவகையான கிழங்கு வகை காய்கறிகளை பற்றி இங்கு காண்போம்.

உருளைக்கிழங்கு :


குளிர்பிரதேசங்களில் அதிகமாக சாகுபடியாகும் கிழங்கு வகைகளும் உருளைக்கிழங்கும் ஒன்று. உருளைக்கிழங்கில் உடலுக்கு வெப்பம் தரும் கார்போஹைட்ரேட் எனும் மாவுச்சத்து அதிகம் உள்ளது. மாவுச்சத்து அதிகம் உள்ளதால் இவை அடிவயிறு மற்றும் இரைப்பையில் உள்ள குழாய்களில் ஏற்படும் வீக்கத்தையும், அவற்றில் நச்சுநீர் தேங்குவதையும் குணப்படுத்துகிறது. உருளைக்கிழங்கில் வாயு மற்றும் எடையைக் கூட்டகூடிய சத்துக்கள் இருப்பதால், சமையலின் போது இஞ்சி, பூண்டு, புதினா அல்லது எலுமிச்சம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்துவது நல்லது. மேலும் உருளைக்கிழங்கில் அதிக கலோரிகள், வைட்டமின்கள், தாது உப்புகள் மற்றும் நார்ச்சத்துகள் நிறைந்துள்ளது.

கேரட் :


காய்கறிகளில் மிகவும் சுவையானது கேரட். கேரட்டில் வைட்டமின் பி1, பி2, பி6 மற்றும் வைட்டமின் ஏ, வைட்டமின் கே, பையோடின், நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் தையமின் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. மேலும் ஆய்வின் மூலம் புற்றுநோய் எதிர்ப்பு சக்தி கேரட்டில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரட் சாப்பிடுவதால் கண்பார்வை கூர்மையாகும். எனவே தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதால் மார்பகம், கல்லீரல், குடல் புற்றுநோய் மற்றும் மாலைக்கண் நோய் வருவதை தடுக்கலாம்.

பீட்ரூட் :  

பீட்ரூட் ஆனது சிவப்பு அல்லது நாவல் நிறத்தில் இருக்கும். இதனை செங்கிழங்கு அல்லது அக்காரக்கிழங்கு என்றும் கூறுவர். இது சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும், மலச்சிக்கலை குணப்படுத்தி வயிற்றை ஆரோக்கியமாக வைக்கும். உடலில் உள்ள கொழுப்பை கரைக்கும், உடலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும், எலும்புருக்கி நோயில் இருந்து பாதுகாக்கும்.

முள்ளங்கி :

முள்ளங்கியானது கசப்பு தன்மை வாய்ந்தது. இதை சமைக்கும்போது ஒருவகை வாடை வரும் எனவே பலர் இதை வெறுத்துவிடுகின்றனர். ஆனால் இதன் மருத்துவ பயன்களை உணர்ந்தவர்கள் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். முள்ளங்கியானது தொண்டை சம்பந்தமான நோயை குணமாக்குவதோடு, குரலை இனிமையாக்குகிறது. பசியை தூண்டக்கூடியது, சிறுநீர் அடைப்பை போக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. மேலும் வெட்டை நோய், முடி உதிர்தல் ஆகியவற்றை குணப்படுத்த வல்லது. முள்ளங்கி சூப் குடித்தால் நரம்பு சுருள்கள் நீங்கும். அதிக நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ள முள்ளங்கியில் உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துகளும் தாது உப்புகளும் நிறைந்துள்ளது.

இஞ்சி :

இஞ்சியானது சமையலில் சேர்க்க வேண்டிய முக்கியமான ஒன்று. குழம்பு, துவையல், வடை ஆகியவற்றில் இஞ்சி முக்கிய பங்காற்றுகிறது. இஞ்சியானது இரைப்பைக்கு பலம் சேர்க்கும். பசியைத் தூண்டும், அஜீரணத்தை போக்கும், கபத்தை குணப்படுத்தும், ஈரலில் உள்ள கட்டுகளை கட்டுப்படுத்தும். அஜீரணத்தால் ஏற்படும் பேதியைக் குணப்படுத்த வல்லது.

கருணைக்கிழங்கு:


கருணைக்கிழங்கு சாப்பிடுவதால் கபம், வாதம், ரத்த மூலம், முளை மூலம் ஆகியன குணப்படுகின்றன. மேலும் கருணைக்கிழங்கு பசியைத் தூண்டி இரைப்பைக்கு பலம் சேர்க்கும். இதை சமைக்கும் போது இதனுடன் சிறிது புளியை சேர்த்து சமைத்தால் நமநமப்புத் தன்மை நீங்கும்.

 

மரவள்ளிக்கிழங்கு:

இனிப்புச்சுவை நிறைந்த இந்த கிழங்கு உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. புரதம், கால்சியம் சத்துக்கள் இதில் உள்ளன. மரவள்ளி கிழங்கில் இருந்து தயாரிக்கப்படும் மாவில் உள்ள உயிரியல் மற்றும் இரசாயன மற்றும் கட்டமைப்பு பண்புகள் உள்ளதால், அதை எளிதாக திரவ குளுக்கோஸ் மற்றும் டெக்ஸ்ட்ரோஸ் ஆக மாற்ற முடியும். திரவ குளுக்கோஸ் மற்றும் டெக்ஸ்ட்ரோஸ் பரவலாக உணவு மற்றும் மருந்து தயாரிக்கும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த துறைகள் வேகமாக வளர்ந்து வரும் நிலையில் உள்ளன.

பனங்கிழங்கு:

பனங்கிழங்கு குளிர்ச்சித் தன்மை உடையது. மலச் சிக்கலைத் தீர்க்கக் கூடியது.

கிழங்கை மாவாக்கி அதோடு கருப்பட்டியும் சேர்த்து உருண்டை பிடித்து தினமும் சாப்பிட்டால் உடலுக்கு வலு கிடைக்கும்.

கிழங்கை வேகவைத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, மாவாக்கி சாப்பிட்டு வந்தால் மெலிந்த தேகம் பருமனாகும்.

பனங்கிழங்குடன் தேங்காய்ப்பால் சேர்த்து சாப்பிட்டால் உடல் உறுப்புகள் வலுவடையும்.

by Swathi   on 23 Jan 2015  0 Comments
Tags: Root Vegetables   கிழங்குகள்   Kilangugal              

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
பூமிக்கடியில் விளையும் பலவகையான கிழங்குகளும், அதன் மருத்துவ பயன்களும்.... பூமிக்கடியில் விளையும் பலவகையான கிழங்குகளும், அதன் மருத்துவ பயன்களும்....
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.