இந்தியாவில் சிறந்த வாழ்க்கைத் தரத்தை அளிக்கும் மாநிலங்களின் பட்டியலில் ஆந்திரா முதலிடம் பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குடிநீர் வினியோகம், கழிவுநீர் அகற்றுதல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக மத்திய அரசுத் திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களுக்கான பட்டியல் வெளியிடப்பட்டது. அந்த பட்டியலில் ஆந்திரா மாநிலம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
மேலும் அடுத்தடுத்த இடங்களை ஒடிசா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி பட்டியல் வெளியிட்டிருப்பது, மாநிலங்கள் போட்டிபோட்டு சிறப்பாக செயல்பட வழிவகுக்கும் என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார்.
|