LOGO
  முதல் பக்கம்    அரசியல்    கட்டுரை/நிகழ்வுகள் Print Friendly and PDF
- லோக் சத்தா (Lok Satta )

விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு நீதி கேட்டு பேருந்து சிறைபிடிப்பு - லோக் சத்தா கட்சி போராட்டம்

லோக் சத்தா சென்னை மாவட்ட தலைவர் குமார் தலைமையிலான அணி இன்று  நூதன கருப்பு பெயிண்ட் பூசும் போராட்டத்தின் மூலம் ஜப்பார் ட்ராவல்ஸ் பேருந்தை சில மணி நேரம் சிறைபிடித்தது.

 

போராட்டம் குறித்து குமார் கூறும் போது, 45 உயிர்களை பலி வாங்கிய, முறைகேடாக பேருந்து இயக்கிய ஜப்பார் ட்ராவல்ஸ் விபத்து நடந்து கிட்டதட்ட இரண்டு மாதங்கள் முடிவடைந்து விட்டன. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க லோக் சத்தா கட்சி ஜப்பாருக்கு விதித்த ஒரு மாத காலக்கெடுவும் முடிந்து விட்டது. ஆனால் காவல்துறை விசாரணை நடைபெறவேயில்லை, எந்த இழப்பீடும் வழங்கப்படவும் இல்லை. போக்குவரத்து துறை அமைச்சரோ தெலுங்கானா தனி மாநில பிரச்சனை உள்ளிட்ட பிரச்சனைகளால் நிர்வாகம் ஸ்தம்பித்து இருப்பதைச் சாதகமாக்கிக் கொண்டு பிரச்னையை கிடப்பிலிட்டு இறந்தோரின் குடும்பங்களுக்கு அநீதி விளைவிக்கின்றார்.

 

இந்த அநியாயத்தை எதிர்த்து நேரடி செயல்பாட்டில் இறங்கி அந்த ட்ராவல்ஸ் பஸ்களை முற்றுகையிட்டு ஓட விடாமல் செய்வது என லோக் சத்தா கட்சி முடிவெடுத்தது. இழப்பீடு கிடைக்கும் வரை அறிவிக்கப்படாத வெவ்வேறு தேதிகளில் இந்திய முழுவதும் என்கேல்லும் ஜப்பார் தட்ராவல்ஸ் பேருந்து இயங்குகிறதோ அங்கெல்லாம் திடீர் போராட்டங்கள் நடத்தப்படும். எனவே பொது மக்களும் ஜப்பார் ட்ராவல்ஸில் சீட்டு பதிவு செய்வதை முற்றிலும் தவிர்த்து பாடம் புகட்ட வேண்டுமென இரண்டு நாட்கள் முன் இதே போராட்டத்திற்காக ஹைதராபாத்தில் கைதான தேசிய தலைவர் திரு.ஜெயப்ரகாஷ் நாராயணன் கூறியிருந்தார்.

 

இந்த போராட்டங்களின் ஒரு பகுதியாக இன்று இரவு 9:30 மணி அளவில் பிற பல இந்திய நகரங்களை போல சென்னை அடையாரில் பெங்களூர் செல்லவிருந்த ஜப்பார் ட்ராவல்ஸ் பஸ் தடுத்து நிறுத்தப்பட்டது. அதன் முன்பக்க கண்ணாடியில் கருப்பு பெயிண்ட் பூசப்பட்டு அங்கேயே பல மணி நேரம் நிற்கும் படி செய்யப்பட்டது. தங்களுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்ட போதும் அதே பஸ்சில் பயணம் செய்த பயணிகள் போராட்டத்திற்கு ஆதரவே தெரிவித்தனர்.

​Lok Satta Party protest - Bus operation stalled - Demands justice for victims' families​

Lok Satta Party's Chennai district president Mr. Kumar lead a protest today to stall the bus operation of Jabbar Travels for a few hours and sprayed black paint at the end of the protest.

 

Mr. Kumar in a media statement stated that Jabbar travels has been operating buses in an illegal manner, which claimed 45 lives. Lok Satta Party has issued a deadline of one month to the Travels to provide compensation for the victims' families. However there was no progress in the police investigation and no compensation was provided. The Transport minister made use of the administrative setback due to the Telengana issue and ignored the victims' families.

 

The Party has decided to involve in direct action and to stall the bus operations until justice is rendered to the affected families. Flash mob protests will be made in front of Jabbar travels. Dr. JP, who was arrested for protesting two days back, in a statement has requested passengers to register their protest by avoid travelling in Jabbar travels.

 

As a part of these protests, Jabbar travels bus meant to Bengaluru was stalled in Adyar Depot bus stand around 9:30 PM today. We distributed pamphlets to the passengers and requested them to avoid Jabbar travels. We sprayed black paint in the front glass pane to stall the bus. The passengers too supported us for our protests, though inconvenience was meted out to them. 

by Swathi   on 07 Jan 2014  0 Comments
Tags: Lok Satta Party   Lok Satta Party Protest   Bus Operation   Justice   லோக் சட்டா கட்சி   லோக் சத்தா கட்சி   விபத்து  
 தொடர்புடையவை-Related Articles
தமிழ்நாடு லோக் சத்தா கட்சி போட்டியிட்ட தொகுதிகளில் வாங்கிய வாக்குகளின் விபரம்: தமிழ்நாடு லோக் சத்தா கட்சி போட்டியிட்ட தொகுதிகளில் வாங்கிய வாக்குகளின் விபரம்:
சென்னை குண்டு வெடிப்பு - லோக்சத்தா கண்டனம் - தீர்வுகள் சென்னை குண்டு வெடிப்பு - லோக்சத்தா கண்டனம் - தீர்வுகள்
விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு நீதி கேட்டு பேருந்து சிறைபிடிப்பு - லோக் சத்தா கட்சி போராட்டம் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு நீதி கேட்டு பேருந்து சிறைபிடிப்பு - லோக் சத்தா கட்சி போராட்டம்
பேரறிவாளன் உட்பட 14 பேரின் கருணை மனு மீது ஜனவரியில் தீர்ப்பு : சதாசிவம் !! பேரறிவாளன் உட்பட 14 பேரின் கருணை மனு மீது ஜனவரியில் தீர்ப்பு : சதாசிவம் !!
லஞ்ச புகார் கூறியவர் மீது அவதூறு வழக்கு - லோக் சத்தா கட்சி கண்டிக்கிறது !! லஞ்ச புகார் கூறியவர் மீது அவதூறு வழக்கு - லோக் சத்தா கட்சி கண்டிக்கிறது !!
லாலு மீது குற்றம் நிரூபணம் - லோக் சத்தாவிற்கு நம்பிக்கை அதிகரிக்கிறது லாலு மீது குற்றம் நிரூபணம் - லோக் சத்தாவிற்கு நம்பிக்கை அதிகரிக்கிறது
சித்தாந்த மாற்றம் தேவை - இந்தியாவின் சாத்தியங்கள் மெய்ப்பட: டாக்டர். ஜே.பி சித்தாந்த மாற்றம் தேவை - இந்தியாவின் சாத்தியங்கள் மெய்ப்பட: டாக்டர். ஜே.பி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.