LOGO
  முதல் பக்கம்    அரசியல்    கட்டுரை/நிகழ்வுகள் Print Friendly and PDF
- லோக் சத்தா (Lok Satta )

லாலு மீது குற்றம் நிரூபணம் - லோக் சத்தாவிற்கு நம்பிக்கை அதிகரிக்கிறது

பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும்ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவருமான திரு.லாலு பிரசாத் யாதவை குற்றவாளி என சி.பி.ஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது."இதன்மூலம் தவறு செய்தவர் தண்டிக்கப்படுவர் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளதுஎன லோக் சத்தாவின் தேசிய தலைவர் திரு. ஜெயப்ரகாஷ் நாராயண் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
இன்று அவர் அளித்த செய்திக்குறிப்பில்இந்த தீர்ப்பு வருவதற்கு 20 ஆண்டுகள் ஆனதை சுட்டிக்காட்டிஇதற்கு மேல்முறையீடு செய்தால் இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
 
இன்று சி.பி.ஐ நீதிமன்றம் திரு. லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவருடன் சேர்த்து 44போரையும்அவர்கள் 1990-களில் செய்த கால்நடை தீவன ஊழலில் குற்றவாளிகள் என தீர்பளித்துள்ளது.
 
திரு. ஜே.பி கூறுகையில் " ஒவ்வொரு மாநிலத்திலும் அதிக அளவில் ஊழல் செய்த 10அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் மீது குற்றத்தை நிரூபணம் செய்து அவர்களின் சொத்துக்களை முடக்கினால் ஊழலை பெருமளவு குறைக்கலாம்.என்றார்.
 
லாலு பிரசாத் வழக்கு நம் நாட்டின் அரசியல் நெருக்கடியை நமக்கு நன்றாக உணர்த்துகிறது. ஊழல் எதிர்ப்பு இயக்கத்தினால் கவரப்பட்டு 'அவசர நிலைஇருந்தபோது அதை எதிர்த்து அரசியலில் வளர்ந்தவர் அவர். தொன்னூறுகளில் ஊடகங்களாலும்மக்களாலும் பெரிதும் போற்றப்பட்டவர். அப்படி இருந்தும் அவர் ஊழலில் இறங்கினார். அரசியலில் நல்லொழுக்கத்துக்கு வேலையில்லை என புரிந்துகொண்ட லாலுசாதி அரசியல்,பிரிவினைவாதம்சுற்றத்தாருக்கு தகாத சலுகைஊழல்குற்றவாளிகளை அரசியலில் புகுத்துதல் போன்ற தீய வழிகளில் சென்றார்.

லாலுவின் ஏற்றமும் இறக்கமும் ஒரு தலைமுறையின் தோல்வியை நமக்கு உணர்த்துபவை. நாம் அரசியல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களை தாமதித்து 30 ஆண்டுகளை வீணடித்துவிட்டோம்.

இன்றைய இந்தியாவில் நேர்மையும்அரசியல் அதிகாரமும் ஒன்றுக்கொன்று உடன்படாதவைகளாக ஆகிவிட்டன. நல்லவர்கள் அரசியலை வெளியேற வேண்டும் இல்லையேல் அறநெறியில் சமரசம் செய்துகொள்ள வேண்டும்.

நேர்மையானதிறமையான மற்றும் அர்பணிப்பு எண்ணம் உடையவர்கள் தேர்ந்தெடுக்கப்படுமாறு உள்ள அமைப்பு நமக்கு தேவை. ஒரு நல்ல அமைப்பில் நியாயமான,பகுத்தறிகின்ற அரசியல்வாதிகள் பொக்கிஷமாக பார்க்கப்படுவார்கள். நம் நாட்டின் அரசியலை மாற்ற நமக்கு விகிதாசார பிரநிதித்துவ முறை வேண்டும்.

"
மேலே விகிதாசார பிரநிதித்துவ அரசியல்கீழே அதிகாரப்படுத்தப்பட்ட மக்கள் மன்றம்,எங்கும் பொறுப்புணர்வு - இவையே நம் அரசியல் அமைப்பை சீர்படுத்த நமக்கு தேவையானவை.

அரசியல் சீர்திருத்தம்உத்திரவாதமான அரசு சேவைசட்டத்தின் ஆட்சிஅனைவருக்கும் சம வாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி - இவையே வருங்காலங்களில் நமது தாரக மந்திரமாக இருக்க வேண்டும். இவற்றை நாம் அடைந்தோமானால்நம் ஜனநாயகம் பாதுகாப்பாகஇளைய தலைமுறையினரின் எதிர்காலம் பிரகாசமாகநம் வாழ்வு செழிப்பாக இருக்கும்.

Lok Satta Party sees a glimmer of hope in Lalu’s conviction

The conviction of Mr. Lalu Prasad Yadav, Rashtriya Janata Dal President and former Bihar Chief Minister, by a CBI court “gives some hope that the corrupt will be punished at long last,” commented Lok Satta Party national President Dr. Jayaprakash Narayan today.

 In a media statement, Dr. JP, however, pointed out that it took 20 years to finish the trial and appeals might take decades. 

A CBI court on September 30 convicted Mr. Lalu Prasad and 44 others in the fodder scam dating back to the 1990’s.

 Dr. JP said, “If 10 top politicians and officials are convicted in every State and their properties confiscated, we can reduce corruption.”

Dr. JP said the Lalu Prasad case exposes the political crisis in India. A product of the anti-corruption struggle and the Emergency, Mr. Lalu Prasad was the darling of media and masses in the 1990’s. Yet, he became a part of what is wrong.  As Lalu had realized that ethical conduct and political power were unrelated to each other, he became a cynical practitioner of all unseemly methods in power politics – caste mobilization, sectarianism, patronage, corruption, polarization, short-term populism and criminalization.

“Mr. Lalu Prasad’s rise and fall are a symbol of a generation’s failure. We wasted three decades by delaying political & economic reform.

“In today’s India, honesty has become incompatible with power in politics. Good people have to quit politics or compromise on values.

“We need a system that makes honest, competent, committed persons electable. Right now they are a liability. Ethical and rational politicians should be seen as assets in a sensible system.  We need the proportional representation system to change politics, and allow the entry and success of clean, rational and competent citizens in politics.

“Proportional representation at the top end, local empowerment at the bottom, and accountability everywhere – these are needed to cleanse our political system.

“Political reform, guaranteed service delivery, rule of law, opportunity for all and economic growth – these should be our mantras in the coming years.  If we achieve them, our democracy will be safe, our youth will have a bright future, and our economy will prosper”.

by Swathi   on 01 Oct 2013  0 Comments
Tags: லோக் சத்தா   லல்லு பிரசாத்   லாலு பிரசாத் யாதவ்   ஜெயப்ரகாஷ் நாராயண்   Lok Satta Party   Lalu\\\'s Conviction   Lalu Prasand  
 தொடர்புடையவை-Related Articles
தமிழ்நாடு லோக் சத்தா கட்சி போட்டியிட்ட தொகுதிகளில் வாங்கிய வாக்குகளின் விபரம்: தமிழ்நாடு லோக் சத்தா கட்சி போட்டியிட்ட தொகுதிகளில் வாங்கிய வாக்குகளின் விபரம்:
விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு நீதி கேட்டு பேருந்து சிறைபிடிப்பு - லோக் சத்தா கட்சி போராட்டம் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு நீதி கேட்டு பேருந்து சிறைபிடிப்பு - லோக் சத்தா கட்சி போராட்டம்
நீதித்துறை நியமனங்கள் ஆணையம் - பாராளுமன்ற நிலைக்குழு லோக் சத்தா தலைவர்கள் சந்திப்பு நீதித்துறை நியமனங்கள் ஆணையம் - பாராளுமன்ற நிலைக்குழு லோக் சத்தா தலைவர்கள் சந்திப்பு
லஞ்ச புகார் கூறியவர் மீது அவதூறு வழக்கு - லோக் சத்தா கட்சி கண்டிக்கிறது !! லஞ்ச புகார் கூறியவர் மீது அவதூறு வழக்கு - லோக் சத்தா கட்சி கண்டிக்கிறது !!
லாலு மீது குற்றம் நிரூபணம் - லோக் சத்தாவிற்கு நம்பிக்கை அதிகரிக்கிறது லாலு மீது குற்றம் நிரூபணம் - லோக் சத்தாவிற்கு நம்பிக்கை அதிகரிக்கிறது
லோக் சத்தாவின் ‘நீதித்துறை ஆணையம்’ அமைக்கும் கனவு நனவானது : டாக்டர் ஜே.பி லோக் சத்தாவின் ‘நீதித்துறை ஆணையம்’ அமைக்கும் கனவு நனவானது : டாக்டர் ஜே.பி
சித்தாந்த மாற்றம் தேவை - இந்தியாவின் சாத்தியங்கள் மெய்ப்பட: டாக்டர். ஜே.பி சித்தாந்த மாற்றம் தேவை - இந்தியாவின் சாத்தியங்கள் மெய்ப்பட: டாக்டர். ஜே.பி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.