LOGO
  முதல் பக்கம்    அரசியல்    கட்டுரை/நிகழ்வுகள் Print Friendly and PDF
- ஆம் ஆத்மி (AAM aadmi)

இலவசங்களும், விளம்பரங்களும் ஏழ்மையை ஒழிக்காது - லோக் சத்தா

 

இன்று 1006 ஜோடிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. முதலமைச்சர்,மந்திரிகள் கலந்து கொண்ட இந்த பிரம்மாண்ட (திரு)விழாவில் அனைத்து மணமக்களுக்கும் 4கிராம் தங்க மாங்கல்யம், வெள்ளி மெட்டியுடன், வேட்டி,சேலை, பாத்திரங்கள், பாய், தலையணை உட்பட 21 பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன. அரசாங்கம் கல்யாணம் நடத்தி வைக்க வேண்டிய அவசியமென்ன...? சரி.. இந்துசமய அறநிலையத் துறையின் சார்பில் நடத்தப்படும் இந்தத் திருமணம் அந்தத் துறை சார்ந்த ஒரு சாதாரண நிகழ்வு என்றில்லாமல்,  முதலமைச்சர், மந்திரிகள் கலந்துகொண்ட பெருவிழாவாகக் கொண்டாட வேண்டிய அவசியமென்ன..? இலவசங்களை அள்ளித்தரும் அரசு இது என்று பிரகடனப்படுத்துவதற்குத்தானே..? இந்த அரசு ஏழைகளின் பங்காளி என்று தனக்குத்தானே பட்டம் சூட்டிக்கொள்வதற்குத்தானே...?  புதுக்கோட்டை இடைத்தேர்தல் திருவிழா முடித்துவிட்டு இப்போதுதான் அனைத்து அமைச்சர்களுக்கும் சென்னை திரும்பினார்கள். அதற்குள், அடுத்த திருவிழா. இதுவல்லாமல், திருமணம் நடந்த திருவேற்காடு பகுதியைச் சுற்றியிருக்கும் அரசு அதிகாரிகள் அனைவரும், பல வாரங்கள் தங்களுடைய "அடிப்படை வேலைகளை" விட்டுவிட்டு இதற்காக பம்பரமாக சுழன்று வேலை செய்திருப்பார்கள் என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை.இந்த 1006 ஜோடிகளும் உண்மையாகவே அரசு உதவி தேவைப்படும் நிலையில் இருப்பவர்களா என்பது சந்தேகமே. முதலமைச்சர், மந்திரிகள் கலந்து கொள்ளும் கட்சி நிகழ்ச்சிபோல் நடத்தப்படும் இதில் ஆளுங்கட்சி ஆதரவாளர்கள்தான் அதிகம் பயனடைந்திருப்பார்கள் என்று கணிக்க இடமிருக்கிறது. மேலும், அரசு பணத்தில், கட்சி வளர்க்கும் நிகழ்வாகத்தான் இதனைக் கருத வேண்டியிருக்கிறது.இந்தத் திருமணத் திருவிழாவிற்கு அனைத்து நாளிதழ்களிலும் முழுப்பக்க விளம்பரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கஜான காலியாக உள்ளது என்று தனது ஆட்சியைத் தொடங்கிய இந்த அரசு பொறுப்பேற்று ஓராண்டுதான் ஆகிறது. அதற்குள், கஜானா நிறைந்து வழியத் தொடங்கிவிட்டதா..? எதற்கிந்த வீண் விளம்பரம்..? யாருக்குப் பயன் தரப்போகிறது..? 1006 ஜோடிகளுக்கு கிடைக்கும் உதவியைவிட (இலவசப் பொருட்கள்) ஏற்பாடுகளுக்கும், விளம்பரங்களும் பலமடங்கு செலவு செய்யப்பட்டிருக்கும் என்றே எண்ணத் தோன்றுகிறது.  வேலைவாய்ப்பைப் பெருக்கி, இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சியளித்து மக்களை தற்சார்புடன் வாழவைக்க வேண்டிய அரசு எத்தனை காலம்தான் இலவசம்..இலவசம்..இலவசம் என்ற போதையின் பாதையில் மக்களை வழிநடத்தப்போகிறது..? ஏழ்மையை ஒழிக்க இலவசமே வழி என்ற பொய்ப்பிரச்சாரத்தை எத்தனை காலம்தான் தொடரப்போகிறது அரசு..?கல்வி,மருத்துவம்,தொழில்,விவசாயம்,அடிப்படைக் கட்டமைப்பு, சட்டம் ஒழுங்கு போன்ற அடிப்படைக் கடமைகளில் கவனம் செலுத்தவேண்டிய அரசு இதுபோன்ற அவசியமற்ற, ஆடம்பர விழாக்களில் கவனம் செலுத்துவதையும் - இதற்காக மக்கள் வரிப்பணத்தைக் கோடிக்கணக்கில் விளம்பரங்களில் செலவிடுவதையும் லோக் சத்தா கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. --- லோக் சத்தா கட்சி
இலவசங்களும், விளம்பரங்களும் ஏழ்மையை ஒழிக்காது - லோக் சத்தா 
இன்று 1006 ஜோடிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. முதலமைச்சர்,மந்திரிகள் கலந்து கொண்ட இந்த பிரம்மாண்ட (திரு)விழாவில் அனைத்து மணமக்களுக்கும் 4கிராம் தங்க மாங்கல்யம், வெள்ளி மெட்டியுடன், வேட்டி,சேலை, பாத்திரங்கள், பாய், தலையணை உட்பட 21 பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன. அரசாங்கம் கல்யாணம் நடத்தி வைக்க வேண்டிய அவசியமென்ன...? சரி.. இந்துசமய அறநிலையத் துறையின் சார்பில் நடத்தப்படும் இந்தத் திருமணம் அந்தத் துறை சார்ந்த ஒரு சாதாரண நிகழ்வு என்றில்லாமல்,  முதலமைச்சர், மந்திரிகள் கலந்துகொண்ட பெருவிழாவாகக் கொண்டாட வேண்டிய அவசியமென்ன..? இலவசங்களை அள்ளித்தரும் அரசு இது என்று பிரகடனப்படுத்துவதற்குத்தானே..? இந்த அரசு ஏழைகளின் பங்காளி என்று தனக்குத்தானே பட்டம் சூட்டிக்கொள்வதற்குத்தானே...?  புதுக்கோட்டை இடைத்தேர்தல் திருவிழா முடித்துவிட்டு இப்போதுதான் அனைத்து அமைச்சர்களுக்கும் சென்னை திரும்பினார்கள். அதற்குள், அடுத்த திருவிழா. இதுவல்லாமல், திருமணம் நடந்த திருவேற்காடு பகுதியைச் சுற்றியிருக்கும் அரசு அதிகாரிகள் அனைவரும், பல வாரங்கள் தங்களுடைய "அடிப்படை வேலைகளை" விட்டுவிட்டு இதற்காக பம்பரமாக சுழன்று வேலை செய்திருப்பார்கள் என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை.
இந்த 1006 ஜோடிகளும் உண்மையாகவே அரசு உதவி தேவைப்படும் நிலையில் இருப்பவர்களா என்பது சந்தேகமே. முதலமைச்சர், மந்திரிகள் கலந்து கொள்ளும் கட்சி நிகழ்ச்சிபோல் நடத்தப்படும் இதில் ஆளுங்கட்சி ஆதரவாளர்கள்தான் அதிகம் பயனடைந்திருப்பார்கள் என்று கணிக்க இடமிருக்கிறது. மேலும், அரசு பணத்தில், கட்சி வளர்க்கும் நிகழ்வாகத்தான் இதனைக் கருத வேண்டியிருக்கிறது.
இந்தத் திருமணத் திருவிழாவிற்கு அனைத்து நாளிதழ்களிலும் முழுப்பக்க விளம்பரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கஜான காலியாக உள்ளது என்று தனது ஆட்சியைத் தொடங்கிய இந்த அரசு பொறுப்பேற்று ஓராண்டுதான் ஆகிறது. அதற்குள், கஜானா நிறைந்து வழியத் தொடங்கிவிட்டதா..? எதற்கிந்த வீண் விளம்பரம்..? யாருக்குப் பயன் தரப்போகிறது..? 1006 ஜோடிகளுக்கு கிடைக்கும் உதவியைவிட (இலவசப் பொருட்கள்) ஏற்பாடுகளுக்கும், விளம்பரங்களும் பலமடங்கு செலவு செய்யப்பட்டிருக்கும் என்றே எண்ணத் தோன்றுகிறது. 
வேலைவாய்ப்பைப் பெருக்கி, இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சியளித்து மக்களை தற்சார்புடன் வாழவைக்க வேண்டிய அரசு எத்தனை காலம்தான் இலவசம்..இலவசம்..இலவசம் என்ற போதையின் பாதையில் மக்களை வழிநடத்தப்போகிறது..? ஏழ்மையை ஒழிக்க இலவசமே வழி என்ற பொய்ப்பிரச்சாரத்தை எத்தனை காலம்தான் தொடரப்போகிறது அரசு..?
கல்வி,மருத்துவம்,தொழில்,விவசாயம்,அடிப்படைக் கட்டமைப்பு, சட்டம் ஒழுங்கு போன்ற அடிப்படைக் கடமைகளில் கவனம் செலுத்தவேண்டிய அரசு இதுபோன்ற அவசியமற்ற, ஆடம்பர விழாக்களில் கவனம் செலுத்துவதையும் - இதற்காக மக்கள் வரிப்பணத்தைக் கோடிக்கணக்கில் விளம்பரங்களில் செலவிடுவதையும் லோக் சத்தா கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
லோக் சத்தா கட்சி

 

     இன்று 1006 ஜோடிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. முதலமைச்சர்,மந்திரிகள் கலந்து கொண்ட இந்த பிரம்மாண்ட (திரு)விழாவில் அனைத்து மணமக்களுக்கும் 4கிராம் தங்க மாங்கல்யம், வெள்ளி மெட்டியுடன், வேட்டி,சேலை, பாத்திரங்கள், பாய், தலையணை உட்பட 21 பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன. அரசாங்கம் கல்யாணம் நடத்தி வைக்க வேண்டிய அவசியமென்ன...? சரி.. இந்துசமய அறநிலையத் துறையின் சார்பில் நடத்தப்படும் இந்தத் திருமணம் அந்தத் துறை சார்ந்த ஒரு சாதாரண நிகழ்வு என்றில்லாமல்,  முதலமைச்சர், மந்திரிகள் கலந்துகொண்ட பெருவிழாவாகக் கொண்டாட வேண்டிய அவசியமென்ன..? இலவசங்களை அள்ளித்தரும் அரசு இது என்று பிரகடனப்படுத்துவதற்குத்தானே..?

 

     இந்த அரசு ஏழைகளின் பங்காளி என்று தனக்குத்தானே பட்டம் சூட்டிக்கொள்வதற்குத்தானே...?  புதுக்கோட்டை இடைத்தேர்தல் திருவிழா முடித்துவிட்டு இப்போதுதான் அனைத்து அமைச்சர்களுக்கும் சென்னை திரும்பினார்கள். அதற்குள், அடுத்த திருவிழா. இதுவல்லாமல், திருமணம் நடந்த திருவேற்காடு பகுதியைச் சுற்றியிருக்கும் அரசு அதிகாரிகள் அனைவரும், பல வாரங்கள் தங்களுடைய "அடிப்படை வேலைகளை" விட்டுவிட்டு இதற்காக பம்பரமாக சுழன்று வேலை செய்திருப்பார்கள் என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை.

 

     இந்த 1006 ஜோடிகளும் உண்மையாகவே அரசு உதவி தேவைப்படும் நிலையில் இருப்பவர்களா என்பது சந்தேகமே. முதலமைச்சர், மந்திரிகள் கலந்து கொள்ளும் கட்சி நிகழ்ச்சிபோல் நடத்தப்படும் இதில் ஆளுங்கட்சி ஆதரவாளர்கள்தான் அதிகம் பயனடைந்திருப்பார்கள் என்று கணிக்க இடமிருக்கிறது. மேலும், அரசு பணத்தில், கட்சி வளர்க்கும் நிகழ்வாகத்தான் இதனைக் கருத வேண்டியிருக்கிறது.

 

     இந்தத் திருமணத் திருவிழாவிற்கு அனைத்து நாளிதழ்களிலும் முழுப்பக்க விளம்பரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கஜான காலியாக உள்ளது என்று தனது ஆட்சியைத் தொடங்கிய இந்த அரசு பொறுப்பேற்று ஓராண்டுதான் ஆகிறது. அதற்குள், கஜானா நிறைந்து வழியத் தொடங்கிவிட்டதா..? எதற்கிந்த வீண் விளம்பரம்..? யாருக்குப் பயன் தரப்போகிறது..? 1006 ஜோடிகளுக்கு கிடைக்கும் உதவியைவிட (இலவசப் பொருட்கள்) ஏற்பாடுகளுக்கும், விளம்பரங்களும் பலமடங்கு செலவு செய்யப்பட்டிருக்கும் என்றே எண்ணத் தோன்றுகிறது. 

 

     வேலைவாய்ப்பைப் பெருக்கி, இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சியளித்து மக்களை தற்சார்புடன் வாழவைக்க வேண்டிய அரசு எத்தனை காலம்தான் இலவசம்..இலவசம்..இலவசம் என்ற போதையின் பாதையில் மக்களை வழிநடத்தப்போகிறது..? ஏழ்மையை ஒழிக்க இலவசமே வழி என்ற பொய்ப்பிரச்சாரத்தை எத்தனை காலம்தான் தொடரப்போகிறது அரசு..?

 

     கல்வி,மருத்துவம்,தொழில்,விவசாயம்,அடிப்படைக் கட்டமைப்பு, சட்டம் ஒழுங்கு போன்ற அடிப்படைக் கடமைகளில் கவனம் செலுத்தவேண்டிய அரசு இதுபோன்ற அவசியமற்ற, ஆடம்பர விழாக்களில் கவனம் செலுத்துவதையும் - இதற்காக மக்கள் வரிப்பணத்தைக் கோடிக்கணக்கில் விளம்பரங்களில் செலவிடுவதையும் லோக் சத்தா கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

 

லோக் சத்தா கட்சி

by Swathi   on 19 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
அரசியல் ஆர்வமுள்ள இளைஞர் மற்றும் மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சி -ஜோதிமணி எம்பி அரசியல் ஆர்வமுள்ள இளைஞர் மற்றும் மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சி -ஜோதிமணி எம்பி
அரசியல் பேசுங்கள் ! அரசியல் பேசுங்கள் !
இட ஒதுக்கீடு பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் அதற்கான பதில்களும் (FAQ): இட ஒதுக்கீடு பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் அதற்கான பதில்களும் (FAQ):
நவம்பர் 1 மொழிவழி மாநிலங்கள் அமைந்த நாள் நவம்பர் 1 மொழிவழி மாநிலங்கள் அமைந்த நாள்
பெரியாரும்,சிவாஜியும் ! பெரியாரும்,சிவாஜியும் !
நான் பார்த்த தமிழகத் தலைவர்கள் நான் பார்த்த தமிழகத் தலைவர்கள்
சி.என். அண்ணாதுரையின் கோரிக்கையை போப் ஆண்டவர் ஏற்றாரா? சி.என். அண்ணாதுரையின் கோரிக்கையை போப் ஆண்டவர் ஏற்றாரா?
ஏன் இப்படி ஆனோம்...? ஏன் இப்படி ஆனோம்...?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.