LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

அமெரிக்க இலெளடெளன் (Loudoun) மாவட்டத்தில் தமிழ் மொழிக்கு அங்கீகாரம் கிடைக்க 1200 கையெழுத்து பிரதிகளுடன் பெருமுயற்சி

ஆஷ்பர்ன் (Ashburn), மார்ச் - 8, தமிழ்மொழி வர்ஜீனியாவின் உலகமொழிக்கான இருமொழிச் சான்றிதல்(Seal of bi-literacy) மொழிகளில் ஃபோர் ஃபாக்ஸ் (Fairfax) தொடர்ந்து இலெளடெளன்(Loudoun) மாவட்டத்திலும் அங்கீகாரம் பெற அப்பகுதியில் வசிக்கும் நூற்றுக்கணக்கான தமிழர்கள் (வள்ளுவன் தமிழ் மையம் மற்றும் சங்கமம் தமிழ் பள்ளி) ஒன்றிணைந்து  இலெளடெளன் மாவட்டத்தின் கல்வித் துறை அதிகாரிகளிடம் ஆஷ்பர்ன் (Ashburn) நகரில் இன்று முறையீடு செய்தனர்.

தமிழ் மொழி உலகில் பலகோடி மக்களால் பேசப்படும் மொழிகளில் ஒன்றாகவும், திருக்குறள் போன்ற உலக மறைக்காப்பியன்களை வழங்கிய தொன்மை மொழியாகவும், உலகின் பன்மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களைக் கொண்டதாகவும் உள்ள மொழி.

இத்தமிழ் மொழியின் முக்கியத்துவத்தினை போற்றும் வண்ணம் ஃபோர் ஃபாக்ஸ் (Fairfax) அரசாங்கம் தங்கள் பள்ளித்திட்டங்களில் உலகமொழித் தேர்ச்சிக்கான இரண்டு வரவுகளை (2 Credits) தமிழ் மொழித் தேர்ச்சிப் பெற்ற மாணாக்கர்களுக்கு வழங்கி தமிழ் மொழியினை 2012 ம் ஆண்டிலிருந்து கெளரவித்துள்ளது. இந்த முயற்சியில் ஃபோர் ஃபாக்ஸ் (Fairfax) மாவட்டத்தில் இயங்கும் தமிழ்ப் பள்ளியான முழுக்க முழுக்கத் தன்னார்வர்களால் இயங்கும் வள்ளுவன் தமிழ் மையம் (www.Valluvantamil.org) பெரும்பங்காற்றி வெற்றிக் கண்டுள்ளது.

இதே முயற்சியினை அருகாமை மாவட்டங்களிலும் தொடரும் வண்ணம், வள்ளுவன் தமிழ் மையம் பல நூறு  இலெளடெளன் (Loudoun) பகுதித் தமிழர்களை ஒன்றிணைத்து, ஸ்ரிஸ் (SRIS) சட்ட வல்லுநர் நிறுவனத்தாரின் உதவியுடனும், இலெளடெளன் (Loudoun) அரசாங்க அதிகாரி திருமதி. க்ரிச்டன் சி.உம்ச்டாட் (Ms. Kristen C.Umstattd) துணையுடன் முனைவர் எரிக் வில்லியம்ஸ் (Dr. Eric Williams ) மற்றும் கல்வித்துறை குழுவினரிடம் முறையீடு வழங்கப்பட்டது. கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட கையொப்பம் அடங்கிய கோப்பும் கல்வித்துறை குழுவினரிடம் வழங்கப்பட்டது. முறையீட்டை ஆர்வத்துடன் கேட்ட இலெளடெளன் (Loudoun) கல்வித்துறை குழுவினர், தங்கள் கவனத்தில் கொண்டுள்ளதாக அறிவித்தனர்.

இந்த முறையீடு சட்டப்படி ஆதரிக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வரும்பட்சத்தில் இலெளடெளன் (Loudoun) மாணாக்கர்கள் பெருமளவில் பயனடைவர். இதனால் இலெளடெளன் (Loudoun) மாவட்டத்தில் வசிக்கும் தமிழ்க் குடிமக்கள் பெரிதும் ஊக்குவிக்கப் படுவர். இத்துடன் இலெளடெளன் (Loudoun) கல்வித்துறையின் பாரபட்சமில்லாக் கொள்கையின் மீது மக்களும் மாணாக்கரும் பெருமிதம் கொள்வர். 

 

புகைப்படங்கள்: 

http://www.valaitamil.com/valluvan-tamil-academy-photo797-808-0.html

 

Honoring Tamil, an ancient Indian Language, as a recognized world language for Seal of Bi-literacy in Loudoun County  

Mar 8 2016

ASHBURN, VA - Hundreds of Tamil speaking Loudoun County families have appealed to the LCPS Board to include Tamil language in the ‘Seal of Bi-literacy’ program and award students that pass a written test two high school credits at the LCPS Superintendent’s office today.

Tamil is an ancient language spoken by millions of people around the world. It has a rich literary history, exemplified in classics such as the Tirukurral, a two-thousand year old collection of poems.

Recognizing the importance of the Tamil language, Fairfax County has enlisted Tamil for World Language high school credit. Valluvan Tamil Academy (a local community-based Tamil teaching school) students have been taking the World Language credit exam in Tamil Language for their high school credits since 2012.

A similar initiative is being made by residents of Loudoun to include Tamil in their biliteracy program. With legal counseling from Mr.Atchuthan Sriskandarajah, Esq. and in collaboration with Leesburg District Supervisor Ms. Kristen C. Umstattd, Valluvan Tamil Academy is pursuing an appeal to the Loudoun County Public School Board.

Hundreds of Loudoun County residents gathered at a meeting in the LCPS Superintendent’s office on March 8th, to show their support and personally appeal to the board of Loudoun County Education council. Additionally, Valluvan Tamil Academy and Sangamam Tamil School have also submitted a petition with 1200+ signatories supporting our request for the Board to recognize Tamil as a world language, award two high school credits upon passing the requisite testing, and lastly placing a seal of biliteracy on students’ high school diploma.

A large number of parents in Loudoun County speak Tamil and have demonstrated great enthusiasm to encourage their kids to learn Tamil as it gives them a chance to preserve their heritage while simultaneously becoming bi-lingual graduates of the County School System

Photos:

http://www.valaitamil.com/valluvan-tamil-academy-photo797-808-0.html

 

ABOUT VALLUVAN TAMIL ACADEMY

Valluvan Tamil Academy (VTA) is a charitable, non-profit (with IRS approved 501(c) 3 status), secular, educational organization established in Virginia with a primary goal of teaching Tamil to children. Currently more than 420 students are learning Tamil in various classes (from Mazhalai to Level 6) as defined by the American Tamil Academy (ATA) curriculum taught by 50+ volunteer teachers. Valluvan Tamil Academy is 100% volunteer operated. Apart from American Tamil Academy curriculum, students also prepare for Tamil certificate exams conducted by Tamil Virtual Academy (Chennai). Our goal is to prepare students to earn high school credit (Fairfax county already has Tamil in the approved world languages list) for their Tamil education. 

by Swathi   on 11 Mar 2016  0 Comments
Tags: Valluvan Tamil Academy   Loudoun   Fairfax   வள்ளுவன் தமிழ் அகாடமி   வள்ளுவன் தமிழ் மையம்   சங்கமம் தமிழ் பள்ளி   தமிழ் மொழி  
 தொடர்புடையவை-Related Articles
ஹார்வார்ட் தமிழ் இருக்கைக்காக வெர்ஜினியாவில் இயங்கும்  வள்ளுவன் தமிழ் மையம்  40000 வெள்ளிகளை திரட்டியது .. ஹார்வார்ட் தமிழ் இருக்கைக்காக வெர்ஜினியாவில் இயங்கும் வள்ளுவன் தமிழ் மையம் 40000 வெள்ளிகளை திரட்டியது ..
அமெரிக்க இலெளடெளன் (Loudoun) மாவட்டத்தில் தமிழ் மொழிக்கு அங்கீகாரம் கிடைக்க  1200 கையெழுத்து பிரதிகளுடன் பெருமுயற்சி அமெரிக்க இலெளடெளன் (Loudoun) மாவட்டத்தில் தமிழ் மொழிக்கு அங்கீகாரம் கிடைக்க 1200 கையெழுத்து பிரதிகளுடன் பெருமுயற்சி
தமிழ் பள்ளியில் இடம் கிடைக்காமல் அவதியுறும் அமெரிக்கத் தமிழர்கள்... பள்ளியின் முதல் நாள் வகுப்பிற்கு கட்டுக்கடங்காத கூட்டம்.. - இது கனவா? தமிழ் பள்ளியில் இடம் கிடைக்காமல் அவதியுறும் அமெரிக்கத் தமிழர்கள்... பள்ளியின் முதல் நாள் வகுப்பிற்கு கட்டுக்கடங்காத கூட்டம்.. - இது கனவா?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.