LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி

தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25

தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!
(வரலாற்றுக் கவிதை நாடகம்)

 

 

 

 

 

காலம்  :       இரவு
இடம்   :        சக்கரைப்பதி காட்டில் வெள்ளையரின் முகாம்

வருவோர் :   கறுத்தான், வெல்ஷ், துபாஷ், சிப்பாய்கள்.    (சின்னமருது அனுப்பிய கடிதத்தைப் படித்தல்.)

கறுத்தான்

ஆருயிர் நண்பருக்கு ஆசியுடன் என் வாழ்த்து
ஊரிழந்து காட்டினிலே ஓய்விழந்து வாழுகின்றேன் தாங்களேனும் நிம்மதியாய் தாழ்வின்றி   வாழ்ந்திடலாம்

சின்ன மருதுவின் குரல்

நாங்கள் கொடுத்த தெல்லாம் நண்பருக்குத்

துன்பந்தான்

காட்டில் மறைந்திருந்து கண்விழித்துப் போர் புரிந்து வாட்டமுறும் எம்மில் வகையறிந்து தப்பிவிட்டீர்
சின்ன வயதுமுதல் சேர்ந்திருந்தோம்    நண்பரானோம்

என்ன பெரிதாய்நான் இத்தனைநாள்  தந்துவிட்டேன்

சொன்னால் பொருள் கிடைக்கும் சுந்தரமாய்

வாழ்ந்திடலாம்.

முன்னால் கழிந்த துன்பம் முற்றும் மறந்திடலாம்
என்னால் இவை கொடுக்க ஏனோ முடியவில்லை
தன்னாலே தேடியதைத் தான் தடுக்கவா  முயல்வேன்

என்னால் முடிந்ததெல்லாம் இங்கேநீர் விட்டுச்சென்ற

பொன்னைப் பொருளைப் புரிந்து அனுப்புகிறேன்.
செய்நன்றி நான்மறவேன் சேர்த்ததற்கும்

பொன்வைத்தேன்

உய்யும் வகையறிந்த உத்தமனே என்நன்றி
கொட்டிப் பொருள் கொடுப்பார் கொண்டிடலாம்

அங்கேனும்

கட்சி மாற்றம் இன்றி கடைசிவரை நீரிருந்தால்
உச்சி குளிர்வேன் உணர்ந்து.

 

கறுத்தான்

காசை நினைத்துவிட்டேன் கைக்கூலி

ஆகிவிட்டேன்

ஆசை பிடித்துவிட்டேன் அந்தரங்கம்

சொல்லிவிட்டேன்

வேசை மனங்கொண்டே வெள்ளையன் கால்பிடிக்க
ஒசைப் படாதன்றோ ஓடிவந்தேன் நான் துரோகி
பல்லிடுக்கில் பாம்படக்கிக் கொல்விடமும்   கொண்டிருக்கும்

உள்ளம் விடமாக்கி ஓடிவந்த நான் துரோகி
பொன்னை நினைத்து வந்தேன் புத்தி புகட்டிவிட்டார்

இன்னமும் வாழுகின்றேன் ஈனமிலாநான் துரோகி

நான் துரோகி நான் துரோகி தான்.

(பின் குரல்கள் ஒலிக்கின்றன)

துரைசாமி
சூது மலிந்ததனால் சோர்த்திடுமா மாவீரம்;
ஏதுவரின் என்ன இசைதானே?-தோதுபட

மூதுரையாய் கொண்ட முடிவு.

                                                ***
ராக்காத்தா
ஒட்டி நிழல்போல உன் அப்பா சேர்ந்திருந்து
வெட்டிவா என்றாலே கட்டிவந்து -கொட்டிவிடும்

மட்டிலா வீரரிவர் தான்.

                                                ***

ஊமைத்துரை
நல்லவரும் வல்ல வரும் நாடிழந்து நலமிழக்க
புல்லருக்கு வாழ்விற்கு வருதையா மருதையா

சின்ன மருது
புல்லருக்கு வாழ்வுண்டு புகழவர்க்கு ஏதுண்டு
வெள்ளெருக்கும் பூத்திருக்கும் வேறெதற்குக்

காத்திருக்கும்

***

ஊமைத்துரை

ஆமை நுழைந்ததுபோல் ஆச்சோ-அரண்மனையில்
ஊமையன் கொண்ட உறவு

 

பெரிய மருது

தீமை யேதுமில்லை ஊமையரே - என்றும்

நாமோ நட்புறவின் பான்மையரே.

 

சின்னமருது

நட்புக் குயிர் கொடுக்கும் நல்லாண்மை - இந்த

நாட்டில் மலிந்துள்ள நம் சீர்மை.

(பின் குரல் முடிவு)

 

கறுத்தான்

      தவறு செய்து விட்டேன் ஐயா

      தருமமும் கொன்று விட்டேன் மெய்யாய்

      எவரும் பார்த்திடுமுன் நானும்

      என்னுயிர் போக்கிடுவேன் காணும்.

            (உடைவாளால் தற்கொலை செய்து கொள்ள

                     எத்தணிக்கையில் வெல்ஷ், துபாஷ், சிப்பாய்    

              கள் உள்ளே நுழைகின்றனர். கறுத்தானை
                     தற்கொலை செய்துகொள்வதிலிருந்து சிப்பாய்

                     கள் பிடித்துக் கொள்கின்றனர்.)

வெல்ஷ்
            Find some reason
            Oh it is treason

துபாஷ்
      காரணம் நீயே கண்டறிந்தாய்
            மீறின துரோகம் ஏன்புரிந்தாய்

வெல்ல்

            We will not allow suicide
            When to hang that we decide.

துபாஷ்
      தானே மடிந்திட அனுமதி என்னே?
      தக்க மரத்தினில் தூக்குவோம் பின்னே.

கறுத்தான்
      கட்சிமாறி கட்கு கடைசியிலே இக்கதிதான்
      வெட்கம் இதிலென்ன வேண்டும் நடக்கட்டும்.

            (வெல்ஷ் சைகை காட்டி முன் செல்ல துபாஷம்,
                        சிப்பாய்களும் கறுத்தானை பிடித்திழுத்துக்
                        கொண்டு பின் செல்கின்றனர்)

 

[திரை]

 

       தண்-8

 

 

காட்சி 23


காலம்       : முன் இரவு
இடம்        : பிரான்மலை
வருவோர்   : ராக்காத்தாள். பொன்னாத்தாள், துரைசாமி
             தேவர்.
            (அடம் பிடிக்கும் துரைசாமியை அக்காவிடம்
                  அழைத்து வந்து - பொன்னாத்தாள்)

பொன்னாத்தாள்

அக்கா துரைசாமி ஆர்ப்பாட்டம் செய்கிறான்
உட்காரச் சொல்லிடுங்கள் ஒப்பிடுவான் - தக்க
தருணம் வரும்போது தாங்கலாம் போர்க்கோலம்
பொறுமையே கொண்டிட்டா போடா.

ராக்காத்தாள்

                                    - அருமை
மகனே பொறுத்திட்டா மாவீரா உன்னால்
அகமே இனிக்குதடா ஆமாம் - பகலிரவும்
பாராமல் போராடுவோம் பாண்டியர்க்கும்
                                    வெற்றியேதான்
வாராமல் போய்விடுமோ வாடா நீ - ஆறாத
வெஞ்சினத்தைத் தூண்டிவிட்டு வேடிக்கை
                                    காட்டுகிறார்
பஞ்சு மெத்தை வாழ்வினரைப் பார்த்திடலாம்.

 

துரைசாமி

கொஞ்சம் நில்
ஏனுனக்கு வெற்றியிலே ஏற்படுதாம் சந்தேகம்
காணுதற்குத் தோல்வியேபோல் காட்டுவதேன் -
                                    நானிதற்கு
ஒப்புதலும் கொண்டிங்கு ஓடிவிளை யாடவேண்டும்
அப்படித்தான் எண்ணுகிறாய் அம்மா நீ-தப்பில்லை

பொன்னாத்தாள்

மன்னர் இருவருடன் அண்ணனுந்தான் போனானே.
சின்னவன் நீ எங்களுடன் சேர்ந்திரடா.

ராக்காத்தாள்

-என்ன இது
போனதாகச் சொல்லாதே பொன்னாத்தா-போராடி
மானவீரம் காப்பார் மகிழ்ந்திடுவோம்.
துரைசாமி
- ஏனம்மா
வீட்டுக்கோர் ஆளனுப்ப வீரமங்கை அன்றொருநாள்
கூட்டித்தன் பாலனைப்போர்க்கோலமிட்டே-
                                    காட்டியதும்
நாட்டிற்குப் போரிடுவென் நாயகன்போல் என்றந்த
பாட்டில் வருவதுநம் பண்பன்றோ -
பொன்னாத்தாள்
- கேட்டிடா
காலம் வருமானால் காத்திருப்பாள் அன்னை போர்க்
கோலம் தவிர்ப்பாய் பொறுத்து.

(தேவர் ஓடி வந்து)

 

தேவர்

தேவியென்ன சொல்லிடுவேன் தேவரீரின்
                              நிலைமைதன்னை
பாவியரும் நமையழிக்க படைதன்னை ஏவுகின்றார்
காளையார் கோவிலும் கைவிட்டு அழிந்திடவே
வாளினைக் கையிலேந்தி வன்கா டுலவுகின்றார்
பாளையத்துப் பாண்டியரும் பாஞ்சை இளையவரும்
நாளையிங்கு நமைப்பிடிக்க நாய்க்குலத்
                                  தார்வருவார்.

 
ராக்காத்தாள்

வரட்டும் இங்கே காத்திருப்போம்
      வாளை உருவித் தீர்த்திருப்போம்
மிரட்டும் பகையும் வாழ்ந்திடவா?
      மீளா அடிமைத் தான் பெறவா?
புரட்டிப் பார்த்துப் புறப்புண்ணேல்
      புகட்டும் மார்பு அறுத்தெரியும்
மறத்தி குடியின் மகள் நாமே
      மானங் காத்துச் சாவோமே.


பொன்னாத்தாள்

வேல்நாச்சி வழிவந்த வீரமகளிர்; நாம்
      விதியாட்சி வரவேற்று சாவில் மகிழ்ந்திடுவோம் வாலாட்டி வருகின்ற வெள்ளையர் கூட்டத்தை
      வாழாது செய்திடவே வளர்ப்போம் நாட்டத்தை

 

பாலூட்டி வளர்க்கின்ற மாதர் மணிக்குலமே
      பகையோட்ட தாய்ப்பாலை ஊட்டுவாய் தினமே
ஆல் காட்டி வருகின்ற அடிமைத் தளைமாண்டு
      அகலவென வித்திட்டோம் அழிக்கும்
                                    உனைஈண்டு.

(பாய்ந்து தேவரின் உடைவாளை உருவிக் கொண்டு)

துரைசாமி

காலமும் வந்ததம்மா போர்க்கோலம் தந்ததம்மா
ஞாலம் இருக்கும்வரை நம்புகழும் ஓங்குமம்மா
வாளும் கிடைத்ததம்மா வாழ்த்தியெனை
                                    அனுப்புமம்மா
சூளும் உரைத்திடுவேன் சுதந்திரம் நம் பிறப்புரிமை.

 

(துரைசாமி வெறி கொண்டு ஓடுகிறான்.
மற்றவர் மலைத்து நிற்கின்றனர்.)

[திரை]

 

காட்சி 24


காலம் : இரவு.
இடம்  : சக்கரப்பதிக்காடு.
வருபவர்கள் : பெரிய மருது, சின்ன மருது, ஊமைத்துரை,
    வெள்ளையர் கூலிப்படை,


பெரிய மருது

அம்பும் நுழையாது அடர்ந்திருந்த நம்காட்டில்
      ஆயிர மாயிரமாய் அழிப்பதற்குத்
                              தொடர்ந்து விட்டார்
கொம்பும் கழித்து விட்டார் கொண்ட அரண்
                              இடித்து விட்டார்
கும்பலாக நம்படையும் கூடுமிடம்
                              கண்டுவிட்டார்.


ஊமைத்துரை

தலைக்கு விலையென்று தண்டோரா போட்டு
                                    விட்டார்.
தறிகெட்டு நம்மினத்தார் தனங்காட்ட
                              மாறிவிட்டார்
வலைக்குள் நமைப்பிடிக்க வரிந்து கொண்டு
                              வந்துவிட்டார்
      வாளுக்கு இறையாக்கி வானுலகம்
                              அனுப்பிடுவோம்.

பெரிய மருது


நம்மைப் பிடிப்பவனோ நாட்டிலின்னும்
                              பிறக்கவில்லை
      நலிந்துவிட்டேன் தம்பியின்று நான் மனதும்
                              சோர்ந்துவிட்டேன்.
அம்மை அப்பனுக்கு அமைத்தோமே கோவிலதை
      அடியோடு இடிப்பாராம் அதற்குவிலை
                                    நம்தலையரம்.

சின்ன மருது

உண்மைத் திறத்தாலே ஒருக்காலும் நமை வெல்லார்
      உலுத்தரிவர் குறுக்குவழி ஒவ்வொன்றாய்க்  கண்டிடுவார்
தன்மை இழந்தவர்கள் தலைதூக்கி வாழ்ந்திடவா?
      தரங்காக்கும் உன் மக்கள் தாழ்ந்திடவா
                                    எம்மிறைவா?

பெரிய மருது


காளையார் கோவிலதைக் காத்திடுதல் நம்கடமை
      காலமெலாம் சிறந்திருக்கக் கட்டிவைத்த
                                    நம் உடமை
நாளையே நடந்திடலாம் நம்தெய்வம் காத்திடலாம்
      ஓலை அனுப்பிவிடு (வாளையெரிந்துவிட்டு)
      ஓம் ஓம் ஓம் நமசிவாயம்.

ஊமைத்துரை

பக்தனைச் சோதித்தல் பரமனுக்கு வழக்கந்தான்
      எத்தனைப் பணிவதாலே இந்நாடும்
                              தாழ்வதுமோ?
எத்தனைச் செய்தாலும் இறைவா உன் ஆடல்தான்
      சித்தினைக் காட்டிவிட்டாய் சேர்த்தெம்மை
                              அழைத்துவிட்டாய்.

       (யாரோ ஒருவன் துப்பாக்கியால் சுட சின்ன மருது
              தொடை முறிகிறது. பெரிய மருது. ஊமைத் துரை
              சின்ன மருதுவை அணைத்துப் பிடித்துக்
              கொள்கிறார்கள். கூலிப் படை வளைத்துக்
              கொள்கிறது.)

 

 

காட்சி 25

காலம் : இரவு
இடம்  :  சக்கரப்பதிக்காட்டில் கூலிப்படைகள் முகாம்.
வருவோர்கள் :  வெல்ஷ், துபாஷ், கூலிப்படைகள், சின்ன

மருது. பெரிய மருது, ஊமைத்துரை.

வெல்ஷ்

Sorry friends
           
Still love you.

துபாஷ்

வருந்துகிறேன் நண்பர்களே

இருந்தும் உமை நேசிக்கிறேன்.

சின்ன மருது
            ஹ.........ஹ...ஹ...ஹ...ஹ...ஹா.

துபாஷ்....... சபாஷ்.

பெரிய மருது
உப்பிட்ட பேருக்கு உலைவைக்கும் இவ்வுலுத்தனின் செப்பிட்டசிறு சொல்லால் சேர்க்கின்றானாம் நட்பு.

ஊமைத்துரை
ஈரம் இருக்கிறதாம் இழிமகனோ உரைக்கிறான்
நேரம் உன் பக்கம் நெடும்புகழோ எம் பக்கம்

சின்ன மருது
குண்டுபட்டு எனது தொடை ரெண்டு பட்டுப்

      போனததை

கண்டுவிட்ட காரணத்தால் கரங்கோத்து,

 எனையணைத்து

மண்டியிட்டு நின்ற வெள்ளைமருது

ஊமைத்துரையையே

கண்டுவிட்டால் அஞ்சி நின்று காலனுமே

பயந்திடுவான்..

உண்டுடலும் கொழுப்பதற்கு ஊர்வம்பை
                              திரித்துவிட்டு
கொண்டுவந்து விட்டதனால் குள்ளனிவன்

                              பேசுகிறான்

பண்டு புகழ்க் கொண்டயிந்த பரம்பரையைப்

படுத்துகின்றான்.


வெல்ஷ்
      
You call me naughty
            But it is my duty

துபாஷ்

            கயமை என்கிறீர்!
            கடமை அதுவன்றோ ?

சின்ன மருது

உண்ட வீட்டிற்கு ரெண்டகம் நினைப்பதும்
பெண்டிரின் கற்புக்குப் பெருந்தீங் கிழைப்பதும்
கண்டபடி பொய்சூது காசால் விரிப்பதும்
உண்டடா மிகவுண்டு உன்கடை மையிலே.

வெல்ஷ்

       Friendes cannot speak out

Farewell, Farewell, no doubut

துபாஷ்
            பேச எனக்கு முடியவில்லை .

நேச மறக்க இயலவில்லை

பெரிய
மருது
படைநடத்தி எமைப் பிடித்து பசை பெறவே

பலமுயன்றும் தோல்விகண்ட பரிதவிப்போ?
விடை கொடுத்து அனுப்பவந்த விந்தைவீரா

விளம்புவதும் நம்முடைய நட்பின் பேரா.

துபாஷ்
துரை மகனேஇவர் குணமோமாறா தென்றும்

      துரத்திவந்து பிடித்ததாகக் கூறார் என்றும்
சிறையினிலே அடைத்துவைத்து சேதிசொல்வோம்

      செத்திடுமுன் நொந்திடவே பாதி கொல்வோம்.

பெரிய மருது
      வழியின்றி எம் தெய்வம் காக்க வந்தோம்

      வலுவின்னும் போகவில்லை வாயாடாதே

      இழிமகனை இம்மண்ணும் ஏற்காதேடா

ஈனமின்றி வாழ்பவனே பிழைத்துப் போடா.

               
                 [ துபாஷ், பிடிக்கச் சொல்லி சிப்பாய்களுக்கு

       சைகை காட்ட நெருங்கி வந்தோர் பயந்து   பின்வாங்குகின்றனர். பெரிய மருது. தானே

       முன் நடத்தல் மற்றவர்கள் பின் தொடர்தல்.]

 

                                                                (திரை)

by Swathi   on 20 Feb 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 4 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 4
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.