|
|||||
மான் கராத்தே - ஆங்கில புத்தாண்டன்று டீசர் !! தமிழ் புத்தாண்டுக்கு படம் ரிலீஸ் !! |
|||||
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்கு பிறகு, சிவகார்த்திக்கேயன் நடித்து வரும் அடுத்த படம் மான் கராத்தே. இந்த படத்தில் முன் முறையாக ஹன்சிகாவுடன் ஜோடி சேருகிறார் சிவகார்த்திகேயன். பில்லா 2, துப்பாக்கி படங்களில் வில்லனாக நடித்த வித்யூத் ஜம்வால் மான் கராத்தே படத்தில் வில்லனாகிறார். படத்தின் பாடல் காட்சிகள் சென்னை, பெங்களூர் மட்டுமல்லாது வெளிநாட்டிலும் படமாக்கப்பட்டுள்ளது.
ஆங்கில புத்தான்டான ஜனவரி 1ம் தேதி மான்கராத்தே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீசாகிறது.
மான்கராத்தே படத்தின் பாடல் பிப்ரவரி 14ம் தேதியான காதலர் தினத்தில் ரிலீசாகிறது.
தமிழ் புத்தாண்டு தினத்தின் விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் 11ம் தேதி மான்கராத்தே படத்தினை ரிலீஸ் செய்ய உள்ளனர். |
|||||
by Swathi on 09 Dec 2013 0 Comments | |||||
Tags: மான் கராத்தே தமிழ் புத்தாண்டு Maan Karate | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|