LOGO
  முதல் பக்கம்    சினிமா    திரைவிமர்சனம் Print Friendly and PDF

மான் கராத்தே - திரை விமர்சனம் !!

இயக்குனர் : திருக்குமரன்


நடிகர் : சிவ கார்த்திகேயன்


நடிகை : ஹன்சிகா மோட்வானி

 

இசையமைப்பு : அனிருத் ரவிச்சந்திரன்

 

ஒரு அடர்ந்த காட்டுக்குள் ஆரம்பிக்கிறது மான் கராத்தேவின் கதை. 


அந்த காட்டுக்குள் சதீஸ் மற்றும் அவரது நான்கு நண்பர்களும் பிக்னிக் போகிறார்கள். 


வழியில் அவங்க ஒரு சித்தரை சந்திப்பதோடு மட்டுமல்லாமல் சித்தரை நக்கலடித்து விட்டு ஆயுத பூஜைக்கு அடுத்த நாள் வரக்கூடிய தினத்தந்தி பேப்பரை உங்களால் வரவழைத்து தரமுடியுமா என சவால் விடுகிறார்கள். உடனே சித்தர் தினத்தந்தி நாளிதழை வரவழைத்து தருகிறார். 


அந்த நாளிதழில் பீட்டர்(அட நம்ப சிவகார்த்திகேயன் தாங்க) என்கிற பாக்சறால சதிஸ் அன்கோவுக்கு ரூ 2 கோடி கிடைக்கபோவதாக செய்தி வெளியாகியுள்ளது. 


அடுத்தது என்ன சதீஸ் அன்கோ பீட்டரை தேடுறது தான். 


அப்போதுதான் அறிமுகமாகிறார் நம்ம ஹீரோ சிவகார்த்திகேயன். ஓபனிங் சாங் ம்ம்ம்ம்ம்ம்ம்...... தூக்கலா இருக்கு.......


சாங் முடிஞ்சதும் தான் தெரியுது நம்ம ஹீரோவுக்கு பாக்சிங்கே தெரியாதுன்னு....  


இதை தெரிஞ்சதும் சதிஸ் அன்கோ சாக் ஆகிறார்கள், அதுக்கு அப்புறம் என்ன பாக்ஸிங் போட்டியில் கலந்துகொள்ள சிவகார்த்திகேயனுக்கு ட்ரைனிங் கொடுக்க ஆரம்பிக்கிறார்கள். 


ஆனால் சிவகார்த்திகேயனோ... என் லவ்வுக்கு ஐடியா கொடு, வீட்டுக்கு பொருள் வாங்கி குடு என சதிஸ் அன்கோவை பாடாய் படுத்துகிறார்.


இறுதியில் பாக்சிங் போட்டியில் சிவகார்த்திகேயன் ஜெயித்தாரா, இரண்டு கோடியை சதீஸ் அன்கோ பெற்றார்களா என்பதே படத்தின் மீதி கதை....... 


இந்த படத்தில் சிவகார்த்திகேயனின் ஃபர்பாமன்ஸ் பார்க்கும் போது மற்ற படங்களை விட நல்ல முன்னேற்றம் தெரிகிறது. நடனத்தில் மனுஷன் பின்னி எடுத்திருக்கிறார். 


ஹசிகாவை பற்றி உங்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.... அதிலும் மாஞ்சா பொண்ணு பாடலில் நடனம் சூப்பரோ சூப்பர்.....


சதீஸ்க்கோ படம் முழுவதும் நக்கலான டயலாக்குகள் தான். சிவகார்த்திகேயனுடன் அவர் சேர்ந்து செய்யும் டைமிங் காமெடிகள் தியேட்டரையே அதிர வைக்கிறது. (ஐ திங் சந்தானத்துக்கு போட்டி அதிகரித்து கொண்டே இருக்கிறது)


பாக்சிங் போட்டியில் ரெப்ரியாக வரும் சூரியை, பாக்சிங் தெரியாத சிவகார்த்திகேயன் அலற விடுவது செம காமெடி....


வில்லனாக வரும் வம்சி கிருஷ்ணா நடிப்பில் நன்றாகவே அசத்தி இருக்கிறார்....


அனிருத் இசையில் மூன்று பாடல்கள் ஹிட் ஆகியுள்ளது. 


மொத்தத்தில் மான் கராத்தே........ நல்ல பொழுது போக்கு படம் தான்...... 

by Swathi   on 04 Apr 2014  2 Comments
Tags: Maan Karate   Maan Karate Review   Maan Karate Vimarsanam   Maan Karate Thirai Vimarsanam   Maan Karate Online   Maan Karate Review Tamil   Maan Karate Tamil  
 தொடர்புடையவை-Related Articles
சிவகர்த்திகேயன், ஏ.ஆர்.முருகதாஸ்க்கு நேரில் ஆஜராகுமாறு கோர்ட் சம்மன் !! சிவகர்த்திகேயன், ஏ.ஆர்.முருகதாஸ்க்கு நேரில் ஆஜராகுமாறு கோர்ட் சம்மன் !!
மான் கராத்தே - திரை விமர்சனம் !! மான் கராத்தே - திரை விமர்சனம் !!
மான் கராத்தேக்கு யு சான்றிதல் !! மான் கராத்தேக்கு யு சான்றிதல் !!
பரவை முனியம்மாவுடன் மான் கராத்தேயில் ஓப்பனிங் சாங் ஆடி பாடிய  சிவகார்த்திகேயன் !! பரவை முனியம்மாவுடன் மான் கராத்தேயில் ஓப்பனிங் சாங் ஆடி பாடிய சிவகார்த்திகேயன் !!
மான் கராத்தே - ஆங்கில புத்தாண்டன்று டீசர் !! தமிழ் புத்தாண்டுக்கு படம் ரிலீஸ் !! மான் கராத்தே - ஆங்கில புத்தாண்டன்று டீசர் !! தமிழ் புத்தாண்டுக்கு படம் ரிலீஸ் !!
கருத்துகள்
04-Apr-2014 11:27:14 வாழு விக்கி said : Report Abuse
சூப்பர் தலைவா
 
04-Apr-2014 05:16:03 Jeyaram said : Report Abuse
Hero kitta Different acting onnum ill,Dance super film ok..
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.