LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- வே.ம. அருச்சுணன்

மாற்றிக் காட்டுவோம்

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

என்றோ சொன்ன வார்த்தை இன்றும்

நன்றே பயன் படுகிறது......!

 

நூற்றாண்டுகள்  எப்படியோ

வாழ்ந்து விட்டோம் இனி யாரும்  

சிவப்புக் கம்பளம் விரித்து

வண்ண மலர்கள் தூவி

மஞ்சள் சிம்மாசனத்தில் அமர்த்த

அணுசரணையாய்க்  கொடி பிடித்து நம்மை

வரவேற்கப் போவதில்லை......!

 

நாட்டின் நடப்புகள் நாளும்

நடுக்கத்தைத் தருகின்றன

கனவுகள் நிறைவேறும் சூழல்

மங்களாகத் தெரிகிறது நாட்டின்

சுதந்திரத்துக்குக் கைகொடுத்தும்

வாழ்க்கைப் போராட்டம்

தாளம் தப்பாமல் குதிபோட்டு நிற்கிறது.........!

 

கவன ஈர்புத் தீர்மானத்தை

சமூகம் உச்சத்தில் கொள்ள வேண்டும்

கரணம் தப்பினால் மரணம்

பிளவுகளை வீசுவிட்டு

தினம் செத்து பிழைக்கும் அவலத்தை

துணிவாய்த் துறந்து

அடிமை விலங்கை உடைத்து

அறியாமையைத் துடைத்து

தலைநிமிர்ந்து

போராட்டத்தைத் தொடங்குவோம்.........!

 

மொழியைக் காப்பதற்குத்

தமிழ்ப்பள்ளிகளின் ஆயுளை நீட்டிவைப்போம்

பெற்ற பிள்ளைகள் தவறாமல் தாய்பால்

அருந்த வழிகாண்போம்

கலாச்சாரம் அழிவதற்கு சூது

செய்வோரைத் தரைமட்டம் ஆக்கிடுவீர்......!

 

ஆணவத்தால் அடக்கிவைக்கும்

அவமானச்சின்னங்களை வேரறுப்பீர்

நேற்று முளைத்த காளான்கள்

நம்மை மிரட்டுவதோ?

கிழடுகள் சில வரிந்து நின்றே

சிண்டுமுடிக்கும் வேலைகளைக்

கச்சிதமாய்  முறியடிப்பீர்........!

 

நம்மைக் கிள்ளுக்கீரையாய்

எண்ணித்திரிவோர் கொட்டம்

அடங்கும் காலம் தொலைவில் இல்லை

நன்றியைக் கொன்று

சதா வம்புக்கு நிற்கும்

ஒற்றுமைக்கு ஊறு செய்யும்

முந்திரிக் கொட்டைகள்

முகத்தில் கரியைப்பூசுவோம்

உலகத்தார் காறி துப்பட்டும்.........!

 

அறிஞர்கள், கல்விமான்கள்

தொழிலதிபர்கள்,நிபுணர்கள்,

கொடைநெஞ்சர்கள்,இலக்கியவாதிகள்,

கலைஞர்கள்,தொண்டர்கள்,

தியாகிகள்,அரசியல்வாதிகள்

வழக்கறிஞர்கள்,இளைஞர்கள்

இனமானம் காக்க இன்றே

ஒன்றாய்  எழுவோம்

நாட்டின் தலையெழுத்தை

மாற்றிக் காட்டுவோம் வாரீர்......!

by Swathi   on 08 Jul 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.